search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள் கைவரிசை"

    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது42). இவர் சுத்தமல்லி அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு இவர் கடையை மூடி விட்டு, விற்பனையான ரூ.1.70 லட்சம் ரொக்க பணத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    திருப்பணிகரிசல்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது. இதில் பயந்த காமராஜிடம் கொள்ளையர்கள் ரூ.1.70 லட்சத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

    இது குறித்து காமராஜ் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கோவில் பூட்டை உடைத்து உண்டியல்களை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள், ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளிலும் புகுந்து கை வரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை:

    மதுரை திருநகர் மருது பாண்டி நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தா. வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதேபோல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்சி சென்று விட்டார். இவரது வீட்டின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் எவ்வளவு நகை போனது என்பது தெரியவரும்.

    இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அங்கிருந்த 2 உண்டியல்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பணத்தை எடுத்து விட்டு பின்பக்கமாக உண்டியலை போட்டு சென்றுள்ளனர்.

    மேலும் கோவில் கருவறையில் இருந்த வெள்ளி கவசம், உற்சவர் சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு , கை ரேகைகளை சேகரித்தனர். திருட்டு குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    ஒரே பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில்:

    கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48), ரைஸ்மில் அதிபர். இவரது மனைவி வனிதா (36). ராஜபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் ஊர் திரும்பினர்.

    தம்பதிகள் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி பகுதியில் வந்த போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபாகரன் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி வனிதா அணிந்திருந்த செயினை கேட்டனர். உடனடியாக அதனை கொடுத்துள்ளனர். பின்னர் மோதிரம், பிற நகைகளையும் கேட்டனர்.

    இதற்கு தம்பதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் அரிவாளால் பிரபாகரன் மற்றும் வனிதாவை வெட்டினர். அப்போது அவ்வழியாக ஒரு பேருந்து வந்தது. இதை பார்த்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் கோவில்பட்டி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதிகளை அரிவாளால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு நகை கடையில் 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நகை வாங்குவது போல் நடித்து விவரம் கேட்டுள்ளனர். திடீரென கடையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் கொள்ளையர்களின் உருவங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிரா காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே பைக்கில் வந்த 3 பேர் என்பதால் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு சூரங்குடி பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

    சங்கரன் கோவில் பகுதியில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    திருவட்டார் அருகே வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் கண்ணணூர் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி எலிசபத் (வயது 60). இவர்களது மருமகள் பிரசவத்திற்காக சுவாமியார் மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் இவர்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    நேற்று காலை இவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டின் மாடி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி துப்புதுலக்க திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கருங்கல்லை அடுத்த பூட்டேற்றி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைக்கதவை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை சிதறடித்து உள்ளனர். அதே சமயம் அங்கிருந்த பொருட்கள் எதுவும் திருட்டுப்போக வில்லை.

    இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து பணம்-பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சேது மாதவன், அரசு பஸ் கண்டக்டர்.இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

    இன்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த வெள்ளி குத்து விளக்கு, ரூ.25 ஆயிரம் மற்றும் பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதாக சேதுமாதவன் தெரிவித்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    கடந்த சில நாட்களாகவே ராமநாதபுரம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×