search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு திருவிழா"

    • சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
    • மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர்.

    ஏர்வாடி:

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 850 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

    சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் இன்று அதிகாலை நடைபெற்ற மதநல்லிணக்க சந்தனக் கூடு விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை மே9-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தொங்கியது.

    மே 18-ந்தேதிஅடிமரம் ஊன்றப்பட்டது. மே 19-ந் தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடி யேற்றமும் நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.

    மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதா யத்தினரும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களி லிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூன் 7-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்ன தானம் வழங்கப்படும். 

    • சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா" அவர்களின் 351-ம் ஆண்டு கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜமாத்தார் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.
    • வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிர்வாக அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ேகாரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்து புல் ஹஜ்ரத் காஜாசையத் சுல்தான் அலாவுதீன், அவு லியாக்களின் தர்காவில் சந்தனக்கூடு என்னும் உரூஸ் மத நல்லிணக்க விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று அதி காலை 6 மணியளவில் உரூஸ் கொடி பாரம்பரிய ஹக்த்தார்கள் முன்னிலையில் யாசின் ஓதிதுஆவுடன் ஏற்றப்பட்டன.

    இதில் திரளான முஸ்லீம்கள் மற்றும் பொது மக்கள் ஜாதி, மத பேதமின்றி பங்கேற்று அவுலியாக்களின் நல்லாசி பெற்றனர்.

    மாலை நடைபெறும் உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார விளக்கு கள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியம் ஒட்டகம், நாட்டிய குதிரை யுடன் சந்தனக்கூடு ஊர்வ லம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும். இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு களை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சம்

    சுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

    • பஞ்ச் பிபீ தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.
    • பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாத்திமா நகரில் அமைந்துள்ள பஞ்ச் பிபீ தர்காவில் 4 ஆண்டுகள் கழித்து சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.

    இதில் காலை கொடியே ற்றத்துடன் தொடங்கிய சந்த னக்கூடு திருவிழாவானது இரவு 8 மணி அளவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இங்கு வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா காலத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதில் சத்திய மங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, கோபி, ஈரோடு, பவானி, திருப்பூர், மேட்டூர், உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    4 ஆண்டுகள் கழித்து நடக்கும் சந்தனக்கூடு திருவிழா என்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    • ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ள பிரான்மலை சேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனம் பூசும் விழா மிகவும் பிரசித்தி பெற்ற தாகும்.

    பிரான்மலையில் 2500 அடி உச்சியில் அமைந் துள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லா அவர்களின் அடக்கஸ்தலம் மற்றும் பிரான்மலை அடி வாரத்தில் உள்ள தோப்பு தர்காவிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த வர்களும் நேர்த்திக் கடன் வைத்து தங்கள் பிரார்த்த னைகளை கந்தூரி எனப்படும் சமபந்தி விருந்து அளித்து நிறைவேற்றுவது வழக்கம்.

    இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் (ரயியுல் அவ்வல் பிறையில்) சந்தனம் பூசும் விழாவிற்காக கொடி யேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா விற்காக மலையடிவாரத்தில் துவா ஓதப்பட்டு கொடி யேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக 2500 அடி உயரத்தில் உள்ள பிரான் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்காவிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

    வருகிற 6-ந் தேதி சந்தனம் பூசும் விழா நடக்கிறது. அன்று இரவு பிரான்மலை 5 ஊர் கிராமத் தார்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் சுற்று வட்டார பெரியோர்கள் முன்னிலையில் சந்தனக் குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 2500 அடி உயரமும் 7 மைல் தூரமுள்ள மலை உச்சியை சென்ற டைந்து 7-ந் தேதி அதிகாலை மலைமீது உள்ள தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது. இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    • ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது.
    • தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகியுள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் 23 நாட்களுக்கு புகழ்மாலை ஓதப்படும்.

    31-ந்தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றமும், முக்கிய நிகழ்ச்சியாக உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந்தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, குதிரைகள் நாட்டியமாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரின் அணிவகுப்புடன் புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும்.

    ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத்தெடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • சென்னை, புறநகர் மற்றும் வெளியூர்களில் வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • சந்தனக்கூடு தேர் முக்கிய வீதிகளின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வந்து தர்கா வந்தடைந்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 350வது வருட கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது.

    இந்த திருவிழாவில் சென்னை, புறநகர் சென்னை மற்றும் வெளியூர்களில் வந்திருந்த இஸ்லாமியர் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிகாலையில் நடைபெறும் சந்தனம் பூசும் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். சந்தனக்கூடு தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக வந்து தர்கா வந்தடைந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் ஜோனகுப்பம் மஹல்லா இளைஞர் அணி, முஸ்லிம் மீனவ சமுதாய மக்கள் மற்றும் சுன்னத்வர் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.
    • முதலமைச்சர் கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் டாக்டர் எஸ்.செய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் எஸ். செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

    நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

    2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • வருகிற 23-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கப்பட்டு, 24-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான 848-வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. நேற்று முன்தினம் தர்கா மண்டபத்திற்கு எதிரே உள்ள கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    நேற்று (11-ந்தேதி) மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடைந்தது. அலங்கார ரதம் தர்காவில் 3 முறை வலம் வந்த பின்னர் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தர்கா மண்டபத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து மவுலீது ஒதினர்.

    இதைத் தொடர்ந்து செய்யது பாருக் ஆலிம் மத நல்லிணக்கம் தொடரவும், உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கப்பட்டு 24-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.

    பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.ஏர்வாடி தர்கா ஷரீப் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலெக்டர் சங்கர்லால் குமாவத், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் தர்காவில் ஆலோசனை நடத்தினார்.

    இதில் ஊராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பஸ்களை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்கவும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தவும் கலெக்டர், அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

    இதில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், கடலாடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட அலுவலர்கள், ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×