என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிசிடிவி கேமரா"
- தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.
ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரம்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா ? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.
குப்பை கொட்டுகின்றனர். இதை நானே நேரில் பார்த்தேன். வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நகர் பகுதியில் வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன.
- சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி, ஈரோடு சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையிலும் ஆய்வு செய்தார். உடன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன. போதுமான கேமராக்கள் இருக்கிறதா, முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
சென்னையில் 3 தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்பு டோப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 140 போலீசார் வீதம், 3 ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு .
- தவறினால் மருந்தக உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை "X மற்றும் "H". "H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
- ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
- அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது.
- சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை கண்டுபிடிக்கவும் உதவும்.
அவிநாசி
அவிநாசி காவல் துறை சாா்பில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பது தொடா்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமை வகித்தாா்.
அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பாா்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவா்களிடம் நூதன முறையில் நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனா்.
மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினா் சிசிடிவி/. கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
- தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன.
- குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர்.
மந்தாரக்குப்பம்:
குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும். ஒவ்வொரு வழிமுறையை தமிழ்நாடு போலீஸ் துறையினர் பின்பற்றி வருகின்றனர். 1980-களில் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் பொருட்களை வைத்து துப்பு துலக்கினர். பின்னர் 1990-களில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மொபைல் போன்களின் பயன்பாடு 2010-களில் அதிகரித்தது. குற்றச் சம்பவங்கள் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.
ஆனால், சமீப காலங்களில் இந்த முறைகள் ஏதும் போலீசாருக்கு பயன்படவில்லை. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன. குறிப்பாக 2020-க்கு பின்னர் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளின் வாசல்கள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் எளிதில் அடையாளம் காண்கின்றனர்.
அதன்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டூடியோ உரிமையாளர் குறிஞ்சிப்பாடியில் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. மூலமாகவே, கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், அவர் கூறுகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அனைவரும் அவரவர் வீடுகளின் வாசல்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார்.
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் பார்த்து சென்றனர்.
- பாதுகாப்பை உறுதிப டுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், பாலியல் சீண்டல்களை கண்காணிக்கவும், போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
- குற்ற வாளிகளை கண்காணி க்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை குறைப்பதற்கு நகர் முழுவதும் 20 இடங்களில் 40 கேமராக்கள் பொருத்தப்படும்.
பாப்பிரெட்டிப்பட்டி,
பொம்மிடியில் குற்ற செயல்களை தடுப்பதற்காக காவல்துறை, வணிகர் சங்கம் மூலமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டம், பொம்மிடி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 200-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடை, மளிகை கடை, நகைக்கடை, ஹாட்டுவேர்ஸ், இரும்பு கடை, எலக்ரீக்கல் மற்றும் சிறு,பெரு வணிக வளாகங்கள் உள்ளது.
பத்துக்கு மேற்பட்ட வங்கிகள், திருமண மண்டபங்கள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் என முக்கிய இடங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பாதுகாப்பை உறுதிப டுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், பாலியல் சீண்டல்களை கண்காணிக்கவும், போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டிபன் யேசுபாதம் உத்தரவின் பேரில் அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் அறிவுறுத்தலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் வணிகர் சங்க தலைவர் ஆசான்கான், செயலாளர் குமார், பொருளாளர் பிரசாத் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விழாக்காலம் சில தினங்களில் இருப்பதால் கூட்ட நெரிசல், முக்கிய கடைவீதி பகுதிகளான ெரயில் நிலையம், ஓமலூர் சாலை, மசூதி தெரு, சேலம் மெயின் ரோடு, தருமபுரி மெயின் ரோடு, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கான துணி, மளிகை பொருட்கள், நகைகள் வாங்குவதற்காக பெருமளவு கூடுவார்கள்.
அப்போது குற்ற வாளிகளை கண்காணி க்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை குறை ப்பதற்கும், கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் நகர் முழுவதும் 20 இடங்களில் 40 கேமராக்கள் பொருத்துவது எனவும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையை விட்டு வாகன ங்களை உள்ளே தள்ளி நிறுத்தவும், கடைகளை போக்குவ ரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்துக் கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர் சங்கத்தின் சார்பில் உறுதி வழங்கப்பட்டது.
சமீபத்தில் பொம்மிடி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்ததற்காக காவல் துறையினருக்கு வணிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது.
- இந்த திட்டமானது கல்வித்துறையின் மூளையாக உள்ளது.
புதுடெல்லி :
டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், டெல்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.
மேலும், வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது. வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டமானது கல்வித்துறையின் மூளையாக உள்ளது. எனவே இதனை செயல்படுத்துகிறோம்.
இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள முடியும். இதற்காக பெற்றோர்களுக்கு தனிப்பட்ட ஐடி மற்றும் அதற்கான கடவுச்சொலுடன் கூடிய உள்நுழைவு சான்று வழங்கப்படும்.
இதற்கான ஒப்புதல் பெற்றோரிடமிருந்து பெறப்படும். மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பொதுப்பணித்துறைக்கு சமர்பிக்க வேண்டும். அதன்பின் தகவல்கள் மென்பொருளில் பதிவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்-விருத்தாசலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாரி (வயது 55), வக்கீல். இவருடைய மனைவி இந்திரா (58). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுடன் இந்திராவின் தாய் பாப்பாத்தியும் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாப்பாத்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாரியும், அவரது மனைவியும் நேற்று காலை காரில் அழைத்து சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம், 3 பவுன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி காசுகளையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பாரியும், அவரது மனைவி இந்திராவும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாரி, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளைபோய் இருந்தன.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் மர்ம மனிதர்கள் அவர்களது முகம் பதிவாக வண்ணம் கேமராக்களை சுவற்றின் பக்கம் திருப்பிவைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். கேமராவில் காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க்குகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் தலைவர் சுதாகர் யாதவ் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் சுதாகர் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி மலையில் சர்வ தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்காக புதிய வரிசைகள் அமைக்க ரூ. 17.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமலையில் ஸ்மார்ட் டேட்டா சென்டர் அமைப்பதற்கு ரூ. 2.63 கோடியும், திருப்பதியில் ஹார்டுவேர் டேட்டா சென்டர் அமைக்க ரூ. 1.97 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுரம், கண்ணாடி மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி, புஷ்கரணி உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காக ரூ. 27.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ. 142 கோடியில் அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் நான்கு கட்டங்களாக ஒப்பந்ததரார்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்படும்.
அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டுமானப் பணிக்கு ஜனவரி 31-ந் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜை செய்ய உள்ளார்.
தேவஸ்தானத்தில் இருந்து கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட அர்ச்சகர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பாக ஆந்திர மாநில அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே அரசு வக்கீலை தேவஸ்தானம் சார்பிலும் மேல்முறையீடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, பாஸ்கர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். #TirupatiTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்