search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"

    • அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
    • யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள் தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

    அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழக பாஜக குழுவில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை என பலரும் கூறுகின்றனர். அது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

    தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காததால் விஜய்யை கண்டு தி.மு.க பயப்படுகிறதா என்றால், யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    அப்படி அனுமதி கொடுத்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது. இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜயை கண்டு தி.மு.க அஞ்சுகிறது என்று தோன்றுகிறது.

    விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அது தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும்.

    அ.தி.மு.க.வில் நான் பெரும் பதவியில் இருந்து விட்டு பா.ஜனதாவில் வந்து இணைந்தேன். எனக்கும் கட்சி பதவி இல்லாமல் இருந்தது. தற்போது சட்டமன்றக்குழு தலைவராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பாஜக கட்சிக்கு புதிதாக குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட போது அ.தி.மு.க-பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    • 15-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வழக்கில் முதலில் கைதான 4 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ்.ஆர் சேகர், நீல முரளியாதவ், தொழிலபதிர் முருகன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. தனது உதவியாளர் மூலம் பணத்தை நகைக்கடை உரிமையாளர் கொடுத்தாக கூறப்படும் நிலையில், நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதனிடையே, தாம்பரம் ரெயில்வே கேண்டீன் உரிமையாளர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    • அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார்.
    • படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.

    அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    புதிய தலைவருக்கான பரிசீலனையில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

    ஏற்கனவே மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல் இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

    • மக்களவை தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
    • பணத்துடன் பிடிபட்ட 3 பேர், நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் என வாக்குமூலம் அளித்தனர்.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இன்று சிபிசிஐடி அதிகாரிகள் முன் திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ-வும், திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவருமான நயினார் நாகேந்திரன் ஆஜரானார்.

    இன்று காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சுமார் 6.30 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    முன்னதாக,

    கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகருக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை செய்ய முடிவு செய்து அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 11-ல் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினர்.

    இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

    • வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 11-ல் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினர்.

    இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அவர் ஆஜர் ஆனார்.

    ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    சம்பந்தபட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை வரை நடைபெறும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்.
    • கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

    குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில், "தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்" என்று பேசியுள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

    பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதியை குலைத்தல், அவதூறு பரப்புதல் என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
    • நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

    குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில், "தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்" என்று பேசியுள்ளனர்.

    தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணையில் தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பண பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்தனர்.
    • நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் ரூ.4 கோடி பணம் சிக்கியது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பண பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா அமைப்புச்செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு கோவர்தன் மற்றும் நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 31-ந்தேதி சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவர்த்தன் தற்போது உடல் நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடக்கிறார்.
    • சட்ட விதிமுறைகளை பின்பற்றி ஓரிரு தினங்களில் கோவர்த்தன் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்துவோம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் இந்த பணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் நவீன் அவரது சகோதரர் சதீஷ், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    பணம் கை மாறிய இடங்களில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் ஓட்டலும் ஒன்று என கூறப்படுகிறது.

    கோவர்த்தன் தற்போது உடல் நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடக்கிறார்.

    விசாரணைக்கு அவரால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா? என்பதை அறிவதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவரை சந்தித்தனர்.

    சட்ட விதிமுறைகளை பின்பற்றி ஓரிரு தினங்களில் அவர் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்துவோம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணம் கொண்டு சென்றது தொடர்பாக 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    • நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.4 கோடி கொண்டு சென்ற பணம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்கியது. இதுதொடர்பாக சதீஷ், முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணம் கொண்டு சென்றது தொடர்பாக 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர்கள் இருவரும் ஆஜர் ஆனார்கள்.

    இதையடுத்து விரைவில் ஆஜராக நயினார் நாகேந்தரனுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
    • நேற்று சுமார் 9 மணி நேரமாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்தினர்.

    சென்னை:

    பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் இருந்து ரூ.4 கோடி கடந்த மாதம் 26-ந் தேதி நெல்லைக்கு கொண்டு சென்றபோது தாம்பரத்தில் சிக்கியது.

    பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த வழக்கு தாம்பரம் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆவணங்கள் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர்.

    நேற்று சுமார் 9 மணி நேரமாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    3 பேரின் வாக்குமூலத்தை குறுக்கு விசாரணை செய்த பின்பு மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    செல்போன் உரையாடல்களை கைப்பற்றி இருப்பதால் அது தொடர்பாகவும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    இவர்களிடம் பணத்தை கொடுத்தது யார்? நெல்லையில் யாரிடம் பணத்தை கொடுக்க சென்றனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது.

    3 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    • பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
    • கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

    சென்னை:

    பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் இருந்து ரூ.4 கோடி கடந்த மாதம் 26-ந் தேதி நெல்லைக்கு கொண்டு சென்றபோது தாம்பரத்தில் சிக்கியது.

    பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரம் போலீசாரிடம் இருந்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆவணங்கள் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டதால் தீவிரமாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது. விரைவில் அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    ×