என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் அதிர்ச்சி"
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்தக்கடை சாலையோரமாக, குடியிருப்பு பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வருகிறது.
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மதுக்கடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கடையில் தினமும் காலையில் உள்ளே சிலர் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,
இந்த மதுக்கடையில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டிக்கு பேரணை பகுதி சித்தர்கள் நத்தத்தில் இருந்தும், ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் இருந்தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. வாரத்திற்கு 2 முறை விநியோகிக்கப்படும் இந்த குடிநீரில் அவ்வப்போது துர்நாற்றம் விசுவதும் தொடர் கதையாக உள்ளது.
2 -வது வார்டு பகுதிக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை பிடித்த போது துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் வளுவளுப்பாக இருந்ததோடு, பிடித்து குடம் மற்றும் பாத்திரங்களில் வைக்கப்பட்ட தண்ணீர் நுரையாக இருந்தது. மேலும், குடிக்க முடியாத நிலையில் அழுக்கு நிறைந்து துர்நாற்றமும், அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலந்தும் இருந்தது. தண்ணீரை கையில் அள்ளி பார்த்தால் பசை போல் இருந்துள்ளது. அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலையில் இருந்தது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆத்தூர் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குழாய்கள் தரமற்றவையாக இருப்பதால் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் காலதாமதமாக அடைக்கின்றனர். மேலும், சரியாக அடைக்கப்படாமல் இருப்பதால் சாக்கடை தண்ணீர் குடிநீரோடு கலந்து வருகிறது.
இதனை மறைக்க பேரூராட்சி நிர்வாகம் சின்னாளபட்டியில் தண்ணீரை சேமிக்கும் மேல்நிலைத் தொட்டிகளில் அதிகளவு பிளிச்சிங் பவுடரை கொட்டுகிறது. இதனால் தான் சாக்கடை கலந்த தண்ணீரில் அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலப்பதால் இது போன்று நுரையாகவும், குடிக்க முடியாத நிலையில் தண்ணீரும் உள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள ராமன்செட்டியபட்டி, கொண்டன்செட்டியபட்டி, கோணப்பட்டி ஆகிய கிராமங்களில் மா விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாந் தோப்புகளில் மயில்கள் இரை தேடி இளைப்பாறி வருகின்றன.
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் துப்பாக்கியால் மர்ம நபர்கள் மயில்களை சுட்டு வேட்டையாடி வருகின்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பொதுமக்கள் எழுந்து வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடி விடுகின்றனர்.
ஆடி மாதம் என்றாலே வன விலங்குகள் வேட்டையாடப் படுவது தொடங்கி விடும். இறைச்சிக்காக விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர். நாட்டின் தேசிய பறவையான மயிலை கூட விட்டு விடாமல் இக்கும்பல் வேட்டையாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பிய நிலையில் உள்ளது. நேற்று மாலை ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென எப்பநாடு-கொடரெட்டி ரோட்டில் இடி தாக்கியது. இதில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதில் இருந்து நிலத்தடி நீர் பொங்கி வெளியே வந்தது.
இதனை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சர்யமடைந்தனர். சிறிது நேரத்தில் தண்ணீர் நின்றது. பின்னர் பொதுமக்கள் பார்த்த போது இடி விழுந்ததில் ரோட்டின் நடுவில் 15 அடி ஆழத்தில், 12 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதாலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்ததாலும், உடனடியாக பள்ளத்தை மூட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பள்ளத்தில் விழுந்து விடாதவாறு தடுப்புகள் அமைத்து இரும்பு தகடால் பள்ளத்தை மூடினர்.தொடர்ந்து இன்று காலை முதல் பள்ளத்தை மணல் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி கொடிகள் மண்டி கிடக்கிறது.
இந்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் சிலர், மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக சென்று போது, பழமையான கிணறு அருகே சென்றனர்.
அப்போது கிணற்றில் இருந்து உஸ்.. உஸ்.. என்று சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த கிணற்றின் அருகே போய் பார்த்தனர்.
அப்போது அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் கிணற்றின் சுவர் நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றின் அடியில் பார்த்த போது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கும்ப கோணம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து குமார் தலைமையில் வந்த வீரர்களும், வனத்துறை சார்பில் வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையில் வீரர்கள் , பொது மக்கள் போராடி பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.
இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
பாழடைந்த கிணற்றில் தற்போது 15 பாம்புகள் உள்ளது. குட்டி பாம்புகள்- பெரிய பாம்புகள் என 3 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இவை அனைத்தும் விஷம் உள்ளவை ஆகும். இவைகளை உடனடியாக இந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தி வரும் லாரிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு கீழத்தூவல் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. கோர்ட்டு உத்தரவை பெற்று உரிமையாளர்கள் லாரியை எடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு இருந்த 2 லாரிகளில் இருந்த டயர்கள், பேட்டரிகள் ஆகியவை திருட்டுபோயின.
இதுகுறித்து அறிந்த கீழத்தூவல் போலீசார் சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது டயர், பேட்டரிகளை திருடியது கீழகொடுமலூரைச் சேர்ந்த கருப்புராஜா, அபிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்களது லாரியும் மணல் கடத்தலில் சிக்கி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதுகுளத்தூர், கீழத் தூவல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாள்தோறும் திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
தற்போது போலீஸ் நிலைய வளாகத்திலேயே போலீசார் பறிமுதல் செய்த வாகனத்திலேயே டயர், பேட்டரிகளை திருடியதுகூட தெரியாமல் போலீசார் மெத்தனமாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்