என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவன் மரணம்"
மதுரை, மார்ச். 13-
மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது மகன் ஆரோக்கிய தமிழரசு (வயது 15) 9-ம் வகுப்பு மாணவன்.
சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் பாம்பன்சாமி நகரில் உள்ள கிணற்றுக்கு ஆரோக்கிய தமிழரசு குளிக்கச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதில் மூச்சு திணறிய ஆரோக்கிய தமிழரசு, பரிதாபமாக இறந்தான்.
அவனியாபுரம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் விக்னேஸ்வரன் (15). 10-ம் வகுப்பு படித்து வந்த இவன், சின்னம்மை பாதிப்புக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டான். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் திருக்கார்த்திக்கேயன்(வயது 12) நங்கநல்லூரியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த திருக்கார்த்திகேயன் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது தாயின் துப்பட்டாவை துணிகள் தொங்கவிடும் கம்பியில் போட்டு விட்டு மறுமுனையை தனது கழுத்தில் சுற்றி விளையாடினான்.
இதனை அவனது தாய் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் விளையாட்டாக சுற்றிய துப்பட்டா திருக்கார்த்திகேயனின் கழுத்தை இறுக்கியது. இதில் அவன் மயங்கி விழுந்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கூச்சலிட்டார். திருக்கார்த்திகேயனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.டாக்டர்கள் பரிசோதித்த போது திருக்கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டது. தெரிந்தது. அவனது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுந்தது பரிதாபமாக இருந்தது.
அவனுக்கு இன்று அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
போரூர்:
சென்னை வில்லிவாக்கம் பாபா நகரைச் சேர்ந்தவர் மனோராதேன் (வயது 38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஜித் (வயது 9) திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 17-ந்தேதி காலை தனது தந்தை மனோராதேனுடன் பைக்கில் சிறுவன் ரஜித் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் திருமங்கலம் 21-வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக தடையில் ஏறி இறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுவன் ரஜித் கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரஜித் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். #accident
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாளிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. விவசாயி. இவரது மனைவி சூரியகலா. இவர்களுக்கு மணிகண்டன், மதன்குமார் (17) என்ற 2 மகன்களும், மணிமேகலை என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களில் மதன்குமார், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த வாரம் ரூ.8 ஆயிரத்தில் ஒர ஆண்ட்ராய்டு போனை, பெற்றோர் மதன்குமாருக்கு வாங்கி கொடுத்தனர்.
அந்த போனை பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை மதன்குமார் சீருடையில் பள்ளிக்கு போன் எடுத்து சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், மதன்குமாரின் நண்பர்களிடம் கேட்டனர். மதன்குமார் எங்கு சென்றான்? என தெரியவில்லை என நண்பர்கள் கூறினர். இரவு முழுவதும் பெற்றோர் மகனுக்காக காத்திருந்தனர். ஆனால், மதன்குமாரை பற்றி எந்த தகவலும் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.
இன்று காலை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு புங்கம் மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் மதன்குமாரின் பிணம் தொங்குவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுக் கொண்டு பள்ளிக்கு ஓடினர். தகவலறிந்ததும், செய்யாறு போலீசாரும் பள்ளிக்கு வந்தனர்.
மரத்தில் தொங்கிய மதன்குமாரின் பிணத்தை போலீசார் மீட்டு பார்வை யிட்டனர். சட்டை பாக்கெட்டில் ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.ஆண்ட்ராய்டு போன் மாயமாகியிருந்தது.
பெற்றோருக்கு தெரியாமல் புதிய போனை ரூ.6 ஆயிரத்திற்கு விற்று இருக்கலாம். செல்போன் எங்கே? என்று பெற்றோர் கேட்பார்கள் என பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
செல்போனை விற்கும் அளவுக்கு மாணவன் மதன் குமாருக்கு சுமை ஏதுமில்லை. வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது நன்றாக தான் வந்தார் என்று பெற்றோர் தெரிவித்தனர். இதனால், மாணவனின் சாவில் மர்மம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து, மாணவனிடம் ரூ.6 ஆயிரம் பணம் எப்படி வந்தது. அவருடைய செல்போன் யாரிடம் இருக்கிறது? என்பது குறித்தும், மாணவன் மதன் குமாரை யாராவது கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #schoolstudentdeath
பூந்தமல்லி:
குன்றத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரகலாதன் (வயது16). குன்றத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 13-ந்தேதி பள்ளிக்கு சென்ற பிரகலாதன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவனை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் சிறுகளத்தூர் பகுதியில் மதகு அருகே தண்ணீரில் சிறுவன் ஒருவன் பிணமாக மிதந்தான்.
போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் அவன் மாயமான மாணவர் பிரகலாதன் என்பது தெரிந்தது.
பிரகலாதன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் செம்பரம்பாக்கம் ஏயில் குளித்துள்ளான். அப்போது ஆழமான பகுதியில் சென்றதால் தண்ணீரில் மூழ்கி விட்டான். ஆனால் பயந்து போன சக மாணவர்கள் யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு சென்று உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்