search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி சாவு"

    • சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள்.
    • கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ள வனத்தாம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகள் சஞ்சனா (வயது8). சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று தனது தோழிகளுடன் அருகில் உள்ள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த சவுரி ராஜன் என்பவர் செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் பணிக்கு மண் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி இருந்த தண்ணீரில் சிக்கி உள்ளாள். உடன் சென்ற சஞ்சனாவின் தோழிகள் காப்பாற்றும் முயற்சியில் சத்தம் போட்டுள்ளனர்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சஞ்சனாவை மீட்டு அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி சஞ்சனாவின் பெற்றோர்கள் கண்டமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி சஞ்சனா செங்கல் சூளை பள்ளத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்வதை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்டவ்வில் தண்ணீரை சூடேற்றும் போது துணியில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம் பள்ளி அருகே உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 42). இவரது மகள் பிருந்தா (17). சம்பவத்தன்று இவர் ஸ்டவ்வில் தண்ணீரை சூடேற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் துணியில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார்.

    உடனே இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிருந்தா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.ஆர் .பி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டின் வெளியே விளையாடிய போது சங்கரி யை தாய் திட்டியதாக தெரிகிறது.
    • சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கால்வேஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் சங்கரி (வயது16).

    இந்த சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாய் திட்டியதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சங்கரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனேஅவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே மேலபூஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 50). இவருடைய மகள் சாதனா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.

    இதையடுத்து பாய்ச்சல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தர்மலிங்கத் துக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மாணவி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து செங்கம் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவி உடலை மீட்டனர்.

    போலீஸ் விசாரணையில் கால்நடைகளை பிடித்து சென்ற போது கால் தவறி கிணற்றில் சாதனா விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
    • நேற்று இரவு இவர் மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.

    காளிமுத்து சின்ன உலகாணி கிரா மத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

    அப்ேபாது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த சதுமுகை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுமித்ரா (15). இவர் டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள சத்திரம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று காலை அரையாண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற சுமித்ராவின் உடல் நிலை மோசமானதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருத்திகா எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
    • கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சத்தியநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் கிருத்திகா (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள கிணறு வழியாக நடந்து சென்ற கிருத்திகா எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் மாணவி தவறி விழுந்து பலியானார்.
    • 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுசீலா. இவர்க மகள் கீர்த்தனா (வயது12) இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரபாணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்கள், முன்னதாக கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்தனர். அப்போது கீர்த்தனா குளத்தில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    • கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராம த்தைசேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), இவர்க ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொ ண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் மருத்துவ பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்நி லையில் மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி நேற்று முன்தினம் தனியார் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் நேற்று இறந்துபோன மாணவி விருத்தாசலம் தொகுதிக்குஉட்பட்டவர் என்பதால் தகவல் அறிந்ததும் விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் பெற்றோ ர்களுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து தனியார் பள்ளியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நியாயமானமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரேத பரிசோதனை முடிவை பொறுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தார்.

    இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறிபள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியி ல்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்க ப்பட்டிருந்த மாணவியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை நிறை வடைந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிவு தெரியும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×