search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியிடம் நகை பறிப்பு"

    சாத்தான்குளம் அருகே இன்று மூதாட்டியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பூச்சிக்காடு ஆர்.சி. கோவில்தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மனைவி தெரசம்மாள் (வயது 68). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இலை பறிப்பதற்காக இன்று காலை தெரசம்மாள் சென்றார். 

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டான். 

    இது குறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து விட்டு தப்பி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    திருப்பூரில் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 65). இவர் பெரியதோட்டம் என்ற பகுதியில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். அங்கு மகன் குடும்பத்தினருடன் பேசி விட்டு இரவு பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    நல்லூத்துபாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இருட்டுநேரத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் அருகில் வந்து சுருளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.

    அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டார். உடனே பேரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கொள்ளையனை தேடிய போது அவர் இருட்டில் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள முகமேதாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன். இவர் அரசு கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று இரவு அங்குள்ள ஒரு கடைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வீரம்மாளிடம் முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டினர்.

    அதனை வீரம்மாள் வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருந்த நபர் வீரம்மாளின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.

    வீரம்மாள் ‘திருடன், திருடன்’ என்று அலறினார். இதனை கேட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக வீரம்மாள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடிவவருகிறார்.

    தாம்பரத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த எல்லம்மாள் (வயது85).

    இவர் இன்று காலை தாம்பரத்தில் ஆஸ்பத்திரிக்கு நடந்து கொண்டிருந்தார். தர்ம தோட்டம் என்ற பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் எல்லாம்மாள் கழுத்தில் இருந்து 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எல்லம்மாள் தாம்பரம் போலீசில் புகார் செய்தார்.

    ஒட்டன்சத்திரம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பொருளூரை சேர்ந்தவர் திருவாண்டசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது70). வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் முகவரி கேட்பதுபோல் பழனியம்மாளிடம் வழி கேட்டார். திடீரென கையில் இருந்த மிளகாய்பொடியை பழனியம்மாள் முகத்தில் தூவினார். கண் எரிச்சலால் பழனியம்மாள் அலறிதுடித்தார். 

    இதனைபயன்படுத்தி அந்தநபர் அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி திருடனை பிடித்து கள்ளிமந்தயம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் குப்பாயிவலசை சேர்ந்த காளிமுத்து(52) என தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து வேறு ஏதேனும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகையை டிப்-டாப் ஆசாமிகள் பறித்து சென்றனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி கமலா (65). இவர் இன்று காலை கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் டிப்-டாப் உடை அணிந்து வந்தனர்.

    அவர்கள் கமலாவிடம் நாங்கள் போலீஸ் என்றும், தி.மு.க. தலைவர் கருணா நிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் கழுத்தில் நகை அணிந்து செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தனர். இதனை நம்பிய கமலா தனது கழுத்தில் கிடந்த நகை, வளையல்கள் என 9 பவுன் நகைகளை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.

    நீங்கள் முன்னால் செல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக நகையுடன் பின்னால் வருகிறோம் என்று 2 வாலிபர்களும் கூறி உள்ளனர். இதை நம்பி கமலா சென்றார். சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தபோது வாலிபர்கள் மாயமாகி இருந்தனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை திருநகர் நேதாஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பாப்பா (வயது 70). இவர் நேற்று கருவேலம்பட்டி ரெயில்வே கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து பாப்பா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    ×