search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளில்"

    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 82).

    இவர் தனது மகன் சுப்பிரமணி யனுடன் (53) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்திருந்த ராமையன் மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • போலீசார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
    • 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொது மக்களிடம் குறைந்த விலை க்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதை ஆகி வருகிறது.

    இதனைதடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பாஷா பாய் (55) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் பாட்சா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிம் ஒப்படைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர்.
    • போதைப்பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு;

    ஈரோடு வெண்டி பாளையம் கதவணை மின் நிலைய பாதையில் ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர். அதில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த சக்தி (31) என்பது தெரியவந்து.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர் சக்தியின் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற மகன் மீது போலீசார் வழக்கு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

    ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.

    நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.

    குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
    • அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்காக அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    நித்திரவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் அங்குள்ள பாலாமடம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதனை ஓட்டி வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது வாகனங்களை சோதனை செய்தனர். இதில் 3 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோட்டை சேர்ந்த ரோஜர் ஸ்டெயின் (வயது 24), நித்திரவிளை ஆற்றுப்புரம் லிபின் (21) என தெரியவந்தது. அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர்.

    எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர். சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது.
    • போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கவுந்தப்பாடி-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது. அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டம் உறையூர் முஸ்லீம் வீதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், பெருந்துறை பெத்தாம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (33) என்பதும் தெரியவந்தது.

    இவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தியதில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்துல் ரகுமான், தர்மராஜ் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்ட லங்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை யில் ஈடுபட்டிருந்த மரப்பா லம் ஆலமரத்து வீதியை சேர்ந்த தினேஷ் என்ற கொசு தினேஷ் (24) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.   

    தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    கடலூர்:

    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே தனியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 23), இவரது நண்பர் சரத் (25) என்பவருடன் சென்னைக்கு சென்று கஞ்சா வாங்கினார்கள். மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டு பயந்த சரத் கஞ்சா பொட்டலத்துடன் விஜயை இறக்கிவிட்டார். போலீசாரிடம் மோட்டார் சைக்கிளை காட்டி விட்டு சிறிது தூரத்தில் நிற்கிறேன், நீ நடந்து வா என்று கூறிச் சென்றார். இதனால் விஜய் கஞ்சா பொட்ட லங்களை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து சென்றது போலீசாருக்கு தெரிந்தது.

    இதையடுத்து 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த புதுப்பேட்டை போலீசார் விஜயை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சரத்தை தேடி வருகின்றனர்.

    • தனுஷ் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து சென்று லாரிக்குள் விழுந்தார்.

    அம்மாபேட்டை

    அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன்.

    இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது மகன் தனுஷ் (26). டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தனுஷ் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது வளைவில் டிப்பர்லாரி ஒன்று வந்துள்ளது.

    அதனை பார்த்த தனுஷ் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து சென்று லாரிக்குள் விழுந்தார்.

    அப்போது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் சோதனை சாவடியில் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை திறந்து பார்த்த போது 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (24), நந்தகுமார் (27) என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • அவரிடமிருந்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி, அண்ணா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய போது 55 மது பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

    விசாரணையில் மதுவை கடத்தியவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பங்காரு (38) என தெரிய வந்தது. இது குறித்து தாளவாடி போலீசார்

    வழக்கு பதிவு செய்து பங்காருவை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற் கொண்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மொடக்குறிச்சி அடுத்த பி.மேட்டுப்பாளையம், பூந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும் வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவல் பேரில் அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
    • இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் பஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை லே-அவுட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த சக்திகுமார் (30), கேரள மாநிலம், சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல, பர்கூரை அடுத்துள்ள கர்கேகண்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் 850 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் பர்கூரைச் சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) என்பதும், கர் நாடக மா நிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, பர்கூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×