என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாட்டரி சீட்டு"
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் திருட்டுத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டாம் கேட் அருகே 2 வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் தஞ்சை தென்பெரம்பூர் கிழக்கு தெரு வசந்த் (வயது 23), தெற்கு தெரு ராஜா (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ .61 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.
நெல்லை:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இலத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கணேசன் (வயது65) என்பவர் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை:
மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் உள்பட 4 பேர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை யார் கொடுத்தனர்? என போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
4 பேரிடம் இருந்து 19 ஆயிரத்து 570 வெளிமாநில லாட்டரிகள் மற்றும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 660 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக வாடிப்பட்டி கட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது58), பரவையைச் சேர்ந்த பாண்டி (65), சேதுராமன் (50), அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மகாலட்சுமி தவிர 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டு வாங்கினார். அதன் குலுக்கல் நடந்தது. அதில் பம்பர் பரிசு தொகையான 70 லட்சம் திர்ஹாம் விழுந்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடியாகும். இவரது சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதை முதலில் அவர் நம்பவில்லை. விளையாட்டாக கேலி செய்கிறார்கள் என நினைத்தார். பின்னர் உண்மையில் பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.
லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் இருந்து ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பரின் 2 சிறுநீரங்களும் செயலிழந்துவிட்டன. அவரது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் கூறினார்.
வழக்கமாக நண்பர்களுடன் இணைந்து தான் பரிசு சீட்டு வாங்குவேன். முதன் முறையாக நானே தனியாக லாட்டரி சீட்டு வாங்கினேன். அதற்கு தான் பரிசு கிடைத்துள்ளது என்றார். #Keralaman #LotteryPrize
கேரள மாநில மந்திரிசபை கூட்டம், முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) மீது 10 சதவீத கூடுதல் வரி (செஸ்) விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுபோல், நிதி தேவைக்காக, சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. #KeralaFlood #Lotttery
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்