என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஜயகாந்த் பிறந்த நாள்"
கோவை:
தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நாளை (சனிக்கிழமை) கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டன் ஆர். செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நாளை காலை 6 மணிக்கு புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை, தொழிற் சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடியேற்று விழா, அன்னதானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடக்கிறது.
காலை 9 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் உள்நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்குதல், 10 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் கேக் வெட்டு தல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படு கிறது. நாளை மறுநாள்(26-ந் தேதி) மாலை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வஅன்பு ராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கேப்டன் ஆணைப்படி நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிவாரண பொருட்கள் 27-ந் தேதி கேரளாவுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, டாடாபாத்தில் உள்ள அரச மரத்தடி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் வி.வி.ராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், பகுதி நிர்வாகிகள் நரசிம்மராஜ், பாரதி, ஆறுக்குட்டி, அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 4 ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செவ்வை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் வரவேற்றார்.
பொருளாளர் தனசேகரன், துணை செயலாளர்கள் தங்கவேல், பேபி, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும் போது, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி விஜயகாந்த் பிறந்தநாள், கட்சி தொடக்க நாள், திருப்பூரில் கட்சி மாநாடு நடக்கிறது. விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பகுதி, ஒன்றிய, மாநகர் பகுதிகளில் கட்சி ஏற்றி பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்க வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் நடராஜ், ராஜி, சேகர், ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், கோபால்சாமி, கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர் செல்வம், திருஞானம், பிரபா, பகுதி துணை செயலாளர் சண்முகம், ஜேமஸ்குமார், இன்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமார் நன்றி கூறினார். #dmdk
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்