என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெங்கையா நாயுடு"
- நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள்.
- அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைகழகம் சார்பில் மாணிக்க விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி தொடக்க விழா நேறறு நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதியை திறந்து வைத்தும், மாணிக்க விழா மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதன்பின் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மாணிக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் யோசனை, அனுபவம் மற்றும் திட்டங்கள் தான் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணம் ஆகும். அவர் இளைய தலைமுறையினருக்கு கல்வியோடு தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளார். 4 தலைமுறைகளை கண்டவர். அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். அவருடைய ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணமாகும். அவர் 1984-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரியை தொடங்கினார். 2001-ல் இது பல்கலைக்கழகமாக மாறியது. முதலில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்பொழுது 1 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
அடுத்து அவர் டெல்லியில் தன்னுடைய பல்கலைகழகத்தை தொடங்க வேண்டும். இவர் சமூக உயர்வுக்காக பாடுபட்டவர். இந்தியாவில் 27 சதவீதம் பேருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்தியாவை அங்கீகாரம் செய்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படைக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. அதனால் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். இந்தியா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள். அரசு வேளாண்மைத் துறையில் உள்ள சிக்கலை தீர்த்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால் இன்னும் மக்களுக்கு அதிகமான உதவிகள் விரைந்து தேவைப்படுகிறது.
எல்லாவற்றையும் அரசே செய்து விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. அரசே அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி கிராம மக்களுக்கு உதவிட வேண்டும். மாணவர்கள் பெரியவர்களை மதித்து நடப்பதோடு தங்களுடைய குறிக்கோளை மறந்து விடக்கூடாது. இன்றைய மின்னணு சாதனங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. அதனை கவனமுடன் கையாள வேண்டும். தேவைப்படும்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போனை கொடுக்க வேண்டும். தற்போது செல்போனிலேயே அதிக நேரம் மாணவர்கள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடித்தால் தங்களது அப்பா, மனைவி பெயரை சொல்வதற்கு கூட கூகுளை தான் தேடும் நிலை ஏற்படும்.
அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். நடு ஜாமத்தில் தூங்க செல்லக்கூடாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். மாணவர்கள் உயர்வாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
பீட்சா, பர்கர் எல்லாம் இந்தியாவின் உணவு இல்லை. இவை அனைத்தும் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படும் உணவாகும்.
நாம் புரோட்டின் மிகுந்த சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
நீர் நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும்.
ஓட்டு என்பது சக்தி வாய்ந்தது. உங்களுடைய ஓட்டு உங்களுடைய தலை எழுத்தை மாற்றும்.
எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்கள் எத்தனை மொழியை கற்றுக் கொண்டாலும் தங்களது தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வி.ஐ.டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
முடிவில் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் நன்றி கூறினார்.
- ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?
- இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது.
முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகர் விஷால், "தமிழ்நாட்டில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகாரத்தை கவனிக்குமாறு பிரதமரை வேண்டுகிறேன். தமிழகத்தில் மட்டும்தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. "ஒரே வரி ஒரே நாடு" என்று நீங்கள் கூறிய போது உங்களை நம்பினேன், எனினும் ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?"
"உண்மையில் இது திரைத்துறையை பெரிதும் பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. திரைத்துறை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது."
"யாரும் இழப்பை பற்றி வெளியில் பேசுவதில்லை. அனைவரும் வலியை மனதிற்குள் வைத்துக் கொள்கின்றனர். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை, அனைவரும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
- இளம் அரசியல்வாதிகள் அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாக இருங்கள்.
- ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
மும்பை:
எம்.ஐ.டி அரசுப் பள்ளி மற்றும் எம்.ஐ.டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது பாரதிய சத்ர சன்சாத் தொடக்க விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் அரசியலில் சேருங்கள். அதில் ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடனும் இருங்கள். ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள்.
இப்போதெல்லாம் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. நாடு முழுவதும் சென்று சில நபர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் கட்சியைக் கூறுகிறேன். அங்கிருக்கும் மற்றவர்கள், நீங்கள் குறிப்பிடும் நபர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை என என்னிடம் திருத்திக் கூறுகின்றனர். ஜனநாயகத்துக்கே இது வெட்கக்கேடானது.
கட்சி தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். அதுவே வழி. இல்லை என்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி கட்சி மாறினால் மக்கள் அரசியல் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.
- சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டும் உங்கள் திறத்துடன், தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.
இந்தச் சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும்.
- பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது.
சென்னை:
இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழா நடந்தது.
மத்திய மந்திரி எல்.முருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து வெங்கையாநாயுடு பேசியதாவது:-
நாட்டில் அரசியல், நீதித்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதிலும், குறிப்பாக நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் முறை கூடாது.
அதேவேளையில் அரசும் நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. இதற்காக நீதித்துறை ஆணையம் என ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான விவாதம் தேவைப்படுகிறது.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்கான சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.
குற்றப்பின்னணி உள்ளவர்களின் வழக்குகள் நீண்டகாலமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவர்கள் பதவியில் இருந்து கொண்டு அனைத்து பலன்களையும் அனுபவித்த பின்புதான் அந்த வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது.
எனவே, இதுபோன்ற வழக்குகளுக்காக சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் கூட தற்போது வரை நிலுவையில் இருப்பது அவமானத்துக்கு உரியது.
ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும். எல்லா மொழியும் தேசிய மொழிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த மொழியையும் திணிப்பது தவறு. மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். தமிழ்மொழியும் தேசிய மொழிதான். தமிழ்நாட்டில் உள்ள வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காலனி ஆதிக்கத்தில் இருந்த கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்து புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் தங்களது கருத்துக்களை நியாயமான முறையில் எடுத்துரைக்க வேண்டும். உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய வேண்டுமே தவிர, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஆண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் முறையிட்டனர். இதனை மேலும் தாமதம் செய்யாமல், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆந்திர மாநில எம்.பி. பீடா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் திராவிடர் தேசம் கட்சி தலைவர் கிருஷ்ணாராவ், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோர் வெங்கையாநாயுடுவுக்கு பொன்னாடை, பூங்கொத்து, புத்தகம் போன்றவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
- தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
- காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும்.
சென்னை:
தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மறைந்த கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் நூற்றாண்டு பிறந்த விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, டிரம்ஸ் சிவமணி, நாட்டிய கலைஞர்கள் நந்தினி ரமணி, சுதாராணி ரகுபதி, அவசரலா கன்யாகுமாரி, தாயன்பன் உள்ளிட்டோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதை வெங்கையா நாயுடு வழங்கினார்.
மேலும் கண்டசாலா எழுதிய பகவத் கீதை நூல் நாட்டிய வடிவலான தொகுப்பாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த யூ-டியூப் தளத்தையும், பழைய பாடல் தொகுப்பில் கண்டசாலா பாடல் இணைப்புக்கான புதிய தொகுப்பையும் வெங்கையா நாயுடு வெளியிட்டு பேசியதாவது:-
தெலுங்கு சினிமா உலகில் 2 தலைமுறை ரசிகர்களை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. அவரது படைப்புகளை, தொகுப்புகளை இளம் தலைமுறையினர் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். தனது மயக்கும் குரலால் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞர் அவர்.
உலகளவில் அவரது குரலுக்கு அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரது பாடல்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களும் என்றுமே என்னால் மறக்கமுடியாதவை. கண்டசாலாவின் குரலுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. மனதை மகிழ்ச்சியாக்கும் வல்லமை அந்த குரலுக்கு இருக்கிறது. அவரது காலம் தெலுங்கு சினிமாவின் பொற்காலம். தமிழ் உள்பட பிறமொழிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். பாரம்பரியம் நமக்கு மிக முக்கியமானவை. அதற்காக பாரம்பரியத்தை மதமாக பார்த்துவிட கூடாது. பாரம்பரியம் நமது வாழ்க்கை முறையை சார்ந்தது. அது மதம் ஆகாது.
'அம்மா' என்ற வார்த்தையை சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமான உணர்வு நம்மில் ஏற்படுகிறது. ஆனால் நாம் நாகரிகமாக நினைத்து 'மம்மி' என்று அழைக்கிறோம். தாய்மொழியில் நம் அன்னையை அழைக்கும்போது கிடைக்கும் அந்த உணர்வு, பிற மொழிகளில் நிச்சயம் கிடைக்காது. எப்போதும் தாய்மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் தாய்மொழி. அடுத்தது சகோதர மொழி. பின்னர்தான் வேற்றுமொழி. தாய்மொழியின் சிறப்பு அளவிட முடியாதது. நாகரிகம் என்ற பெயரில் நமது அடையாளத்தை மறக்கக்கூடாது.
எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். தாய்மொழியிலும் இசை கலந்திருக்கிறது. தாய் பாடும் தாலாட்டு அளப்பரிய இசை. இப்போது தாலாட்டை எங்கே கேட்க முடிகிறது. அதையெல்லாம் மறந்து போய்க்கொண்டு இருக்கிறோம். குழந்தை பருவத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே இசையின் தாக்கம் இருக்கும்.
காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும். அப்போது நம்மிடையே உற்சாகம் ஏற்படுவதை உணர முடியும். இதையெல்லாம் செய்யாமல் யூ-டியூப்பில் மூழ்கி கிடக்கிறோம். எனவே இதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் பங்கேற்ற வெங்கையா நாயுடுவுக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் பரிசளிக்கப்பட்டன.
விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் மனைவி சாவித்ரி, சகோதரர் ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
- சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
- பயணிகளின் உடமைகள் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை :
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் நேற்று மாலை ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நுழைவு வாயில்களில் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு அதன் பிறகே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.
- இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்'.
- இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சீதா ராமம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, "சீதா ராமம்" படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில், ஒரு அழகான காட்சி உருவாகியுள்ளது. எளிமையான காதல் கதையைப்போல் இல்லாமல் , வீரமிக்க சிப்பாய் பின்னணியுடன், பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் இந்தப் படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சீதா ராமம்
மேலும், மற்றொரு பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது சீதா ராமம். போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை வெளிப்படுத்தியதற்கு இயக்குனர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினி தத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார்.
- இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலை மோசமடைய வழி வகுத்தது.
- மக்களின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை ஓய்வு பெறுகிறார். முன்னதாக குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தம்மை சந்திக்க வந்த இந்திய தகவல் சேவை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல் முறையாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.
வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கின்றன. இது போன்ற இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலையை மோசமடைய வழிவகுத்தது. ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயமாக ஆதரவளிக்க வேண்டும்,
ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான சந்திப்பின்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான, தரமிக்க கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மீது நமது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும்.
- நாம் இயற்கையை பாதுகாப்பதுடன் நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதே ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.
1942 ஆகஸ்டு 8-ந்தேதியன்று மகாத்மா காந்தி தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்', 1947-ல் ஆங்கிலேய ஒடுக்குமுறையில் இருந்து தேசம் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள வழிவகுத்தது. 'வெள்ளையனே வெளியேறு இயக்க' உரையில் காந்தியடிகள் விடுத்த "செய் அல்லது செத்துமடி" என்ற அறைகூவல், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த எழுச்சியின் உணர்வை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றாக எழுந்து நிற்கச்செய்தது. தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வதற்கும், தங்களின் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்வதற்குமான பேராவலால் உந்தப்பட்ட இந்திய மக்களின் ஒன்றுபட்ட மன உறுதி, அதைத்தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான நிகழ்வுகள் 1947 ஆகஸ்டு 15 அன்று நாட்டின் சுதந்திரத்தை தவிர்க்க முடியாததாக மாற்றியது.
'வெள்ளையனே வெளியேறு' என காந்தியடிகள் அறைகூவல் விடுத்த 80 ஆண்டுகளுக்கு பின், விடுதலை போராட்ட வரலாற்றில் சிறப்புமிக்க தருணத்தை குறிக்கின்ற சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை இந்தியா கொண்டாடும் காலத்தில், நமது சாதனைகளை நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் சாதித்த முக்கிய செயல்களில் பெருமிதம் கொள்வோம். இன்னமும் நாம் வெற்றிகொள்ளவேண்டிய பல சவால்களை சமாளிக்கும் வழிகளை கண்டறிவோம். உலக அரங்கில் இந்தியா தற்போது முன்ணணி நாடாக திகழ்வதுடன், பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் மற்றும் காலனி ஆதிக்கத்திலிருந்து ஆகஸ்டு 15, 1947-ல் விடுதலை பெற்றதுடன் சுதந்திர நாடாக கடந்த 75 ஆண்டுகால பயணத்தில் பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது.
நமது நீண்ட நெடிய விடுதலை போராட்டத்தில் இருந்து நாம் ஊக்கம் பெறுவது அவசியம். நம்மிடம் உள்ள பெருமளவிலான மனித வளம், உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்ததாகும். எனவே, இந்தியா அதன் மக்கள் தொகையை பயன்படுத்தி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மனிதவளத்தின் முழுத்திறமையையும் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
தற்போதைய வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், பல்வேறு துறைகளிலும் நாம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக பெருமிதம் அடைவதோடு, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மீது கவனம் செலுத்தி அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். போராடி பெற்ற சுதந்திரத்தை நாட்டின் அடித்தளம் வரை ஒளியேற்றி, வறுமை, எழுத்தறிவின்மை, பாலின பாகுபாடு, ஊழல் மற்றும் சமத்துவமின்மை போன்ற கொடுமைகளிலிருந்து விடுபடுவதே நமது முன்னுரிமை பணியாக இருக்கவேண்டும். அனைத்து வகையான சமத்துவமின்மைகளிலிருந்து விடுபட்டு உண்மையான சமத்துவ சமுதாயத்தை படைக்கவேண்டும் எனில், நாட்டை வளர்ச்சியடையச் செய்ய நல்லாட்சியும், நேர்மையான ஆளுகையும் அவசியமாகும். பண்டைக்கால இந்திய நாகரிகம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் உள்ளடக்கிய தன்மைகளைக்கொண்ட கலாசார நற்பண்புகள் நிறைந்ததாகும். தேசிய உணர்வு வழிகாட்டுதலுடன், நமது முன்னோர்களின் படைப்புத்திறனை முழுமையாக பயன்படுத்தி, வலுவான மற்றும் துடிப்புமிக்க தேசத்தை படைக்கவேண்டும்.
உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான, தரமிக்க கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மீது நமது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும். தாய் மொழியை ஊக்குவிப்பது கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி மேலும் உள்ளடக்கியதாகவும், சமத்துவமிக்கதாகவும் ஆக்கவேண்டும். நாம் ஊக்கம் பெறுவதற்கும், வருங்கால தலைமுறையினரை பாதுகாக்கவும், நமது பண்டைக்கால நம்பிக்கைகளை நோக்கி செல்வதை தவிர வேறு வழியில்லை. நாம் இயற்கையை பாதுகாப்பதுடன் நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதே ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். நமது சுதந்திர போராட்டத்தின் முக்கியமான காலக்கட்டத்தை நாம் நினைவில் கொள்வோமேயானால், பாரத அன்னை மீதான நமது அளவற்ற அன்பும், உணர்வுகளும் தான் நம்மை பிணைக்கும். அடக்குமுறை மற்றும் உழைப்பை சுரண்டும் காலனி ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்க நமது தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வழங்கிய பங்களிப்பை நமக்கு நாமே கூறிக்கொள்வதன் வாயிலாக நமது கடந்த காலத்தை திரும்பிப்பார்ப்பது நமது கடமையாகும்.
நமது பிரபலமான மற்றும் வெகுவாக அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு கண்ட சுதந்திரமான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணமாகும். நாம் துடிப்புமிக்க, வளமான மற்றும் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு கூட்டாக தோள் கொடுக்கவேண்டியது நமது தார்மீக கடமையாகும்.
- அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை.
- பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந் தேதியுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது
அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை, அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. இந்த பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன், அவர்களுடன் தொடர்ந்து பழகுவேன்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கவும், விவாதிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது, அவர்களை பற்றி மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பகுதி மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் நான் கண்டிப்புடன் இருக்கி வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வரும் 10-ம் தேதியுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஓய்வு பெறுகிறார்.
- மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நமது துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு இந்த அவையிலிருந்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த அவையின் வரலாற்று தருணங்கள் அவரது அழகான இருப்புடன் தொடர்புடையவை.
உங்கள் அனுபவங்கள் தேசத்தை இன்னும் பல ஆண்டுகளாக வழிநடத்தும். வெங்கையா நாயுடுவைப் பற்றிய போற்றுதலுக்குரிய விஷயங்களில் ஒன்று, இந்திய மொழிகள் மீது அவருக்கு இருந்த நாட்டம். அவர் சபைக்கு தலைமை தாங்கிய விதத்தில் இது பிரதிபலித்தது.
நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமர் அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் நாம் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இந்த முறை அத்தகைய தனி சிறப்புவாய்ந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்