search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youth arrest"

    • நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த வியாபாரி கண்ணையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பாளை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20) மற்றும் சீவலப்பேரி காட்டாம்புலியை சேர்ந்த ஜெரின் (23)ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணையாவை வழிமறித்து அரிவாள் முனையில் மிரட்டினர்.

    நெல்லை:

    நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த வியாபாரி கண்ணையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே பாளை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20) மற்றும் சீவலப்பேரி காட்டாம்புலியை சேர்ந்த ஜெரின் (23)ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணையாவை வழிமறித்து அரிவாள் முனையில் மிரட்டினர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கண்ணையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நம்பிராஜன், ஜெரின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • சாத்தான்குளம்-நாசரேத் ரோட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன் (வயது 55). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள கரையடி கோவில்குளம் அருகே சுடுகாட்டு பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்
    • சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரத்தை சேர்ந்த டிரைவர் தாவீது (25), திசையன்விளையை சேர்ந்த டேனி செல்வன் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்-நாசரேத் ரோட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன் (வயது 55). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள கரையடி கோவில்குளம் அருகே சுடுகாட்டு பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    அவரை கொலை செய்து எரித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் டேவிட், எபனேசர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. இதுதொடர்பாக சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரத்தை சேர்ந்த டிரைவர் தாவீது (25), திசையன்விளையை சேர்ந்த டேனி செல்வன் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரையடி கோவில்குளம் சுடுகாட்டில் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது மதுபோதையில் அங்கு வந்த கண்ணன் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாங்கள் கண்ணன் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தோம். பின்னர் அடையாளங்களை மறைப்பதற்காக கண்ணனின் உடலை தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றோம் என்றனர். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் 2 பேரையும் கைது செய்தனர்.

    சீர்காழி அருகே ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #eveteasing
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ராகவி (வயது 20). இவர் பூம்புகார் அரசு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைமேடு அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம் நடந்தது. இதனால் பெயரை சேர்ப்பதற்காக மாணவி ராகவி அங்கு சென்றார்.

    பிறது பெயரை விண்ணப்பிக்க மனு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்க அப்துல் என்கிற காளிமுத்து (30), பஞ்சு என்கிற வினோத் ஆகியோர் திடீரென மாணவி ராகவியை வழிமறித்து கிண்டல் செய்தனர். ராகவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டனர்.

    இதை கேட்டு ஆவேசமடைந்த ராகவி, அவர்கள் 2 பேரையும் திட்டியுள்ளார். பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    பிறகு தனக்கு நடந்த ஈவ் டீசிங் சம்பவத்தை நினைத்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். சிறிது நேரம் கழித்து வினோத்தின் தாயை சந்தித்து பேசினார்.

    அப்போது உங்களது மகன் என்னை கிண்டல் செய்து வருகிறான். தொடர்ந்து பலமுறை இதேபோல் நடந்து வருவதால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கோபத்துடன் கூறி விட்டு சென்றார்.

    பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பின்புறத்தில் இருந்த மரத்தில் ராகவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து ராகவியின் தந்தை முனியப்பன், வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை ஈவ் டீசிங் செய்த காளிமுத்து, வினோத் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். கைதான 2 பேரும் சிற்ப சுதை தொழிலாளிகளாக இருந்து வருகின்றனர். #eveteasing
    மதுரை அருகே பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 37). இவர் ஒத்தக்கடையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக இருந்து வருகிறார்.

    நேற்று இந்த பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரூ. 1,340-க்கு பெட்ரோல் போட்டனர். பெட்ரோல் போட்டதும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    உடனே பழனிக்குமார் மற்றும் ஊழியர்கள் அவர்களை மடக்கிப்பிடித்து பணத்தை கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து பழனிக் குமார் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து பெட்ரோலுக்கு பணம் கொடுக்காத 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஓடைப்பட்டியைச் சேர்ந்த பொன் தனுஷ் (16), வைரமணி (17) என்பது தெரியவந்தது.

    ×