search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carlos Algarz"

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீரர் அலெக்சன் மைக்கேல்சன் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-3) , 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் ஷாங் ஜங்செங் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. 

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • விம்பிள்டன் டென்னிஸ் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இன்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் அசத்தல் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார்.

    • இன்று நடந்த அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ், டியாபோ உடன் மோதினார்.
    • இதில் அல்காரஸ் டியாபோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ உடன் மோதினார்.

    இந்த போட்டியில் 6-7, 6-3, 6-3, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் டியாபோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கார்லோஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோத உள்ளார்.

    ×