என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Devotees Sami Darshan"
- காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது.
- விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது அமாவாசை பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 19-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 19-ந்தேதி ஆடி மாத பிரதோஷம், இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு முதல் சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ஊர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் தாணிப்பாறைக்கு வருகை தந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்பகுதியில் குவிந்தனர்.
இதனையடுத்து காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்து மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.
அதன் பின்பு பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு சென்றனர் தற்போது விடுமுறை தினமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறு கிறது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
- அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல்:
அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
- கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இன்று கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- செம்பனார்கோயில் அருகே பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
- புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் மேற்கு தெருவில் மிக பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோயில் கும்பாபி சேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
யாகசாலையில் பூர்னா குதி நடைபெற்று, மேள தாளங்கள் முழங்க, சுந்தர் சிவாச்சாரியார் புனித நீர் கடங்களை தலையில் சுமந்து விமான கோபுரங்களை சென்றடைந்தனர்.
பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வானவேடிக்கை நடைபெற, புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கருவரையில் சுவாமிக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், கிராமவாசிகள்,விழா குழுவினர்கள், மற்றும் நாட்டான்மைகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்