என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "free training course"
- மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
- தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதுரை
மதுரை தொழில்சார் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் கலைச் செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.
கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28-ந்தேதி முதல் நேரடி வகுப்புகளாக தொடங்கப் பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடை பெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிழ்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (0452 -2564343) என்ற எண்ணிலோ அல்லது (peeomadurai27@gmail.com) மெயில் ஐ.டி.யில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து தேர்வுகளுக்கும் தயாராக ஏதுவாக புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெட் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை தொடங்குகிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 6,553 இடைநிலை ஆசிரியர் பணிக்கும், 3,587 பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் நடப்பு ஆண்டில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இரு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தேர்விற்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும். மையங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங் களில் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது.
'டெட்' பேப்பர் -1 மற்றும் 2 ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை (திங்கட்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல் அறிய வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் உதவியாளரை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்ப யிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது:-காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
மாதிரித் தேர்வு கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
- பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
- இத்தேர்வுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும்.
திருப்பூர்:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் 2-ம் நிலை காவலர்கள் பணிக்கு 2,600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இந்த தேர்வுக்கு www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 4-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, 0421 2999152 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 25-ந்தேதி தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் துணை கலெக்டர், துணைக் கண்காணிப்பாளா் (காவல் துறை), துணைப்பதிவாளா் (கூட்டுறவு துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்தோ்வுக்கு இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
எனவே திருப்பூா் மாவட்டத்தில் டி.என்பிஎஸ்சி .போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 94990-55944 அல்லது 0421-2999152 என்ற அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் இறுதியில் மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் குரூப்- 1 தோ்வு எழுதும் நபா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3552 காவலர் காலி பணியிடங்கள் வெளியீடு
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நேரடியாக வருகிற 27.07.2022 முதல் நடத்தப்படவுள்ளது.
இந்த அறிவிக்கையில் 3552 காவலர் பணியிடங்கள் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படவுள்ளது (ஆண்கள் / பொது 2890 பணியிடங்களும், பெண்கள் 662 பணியிடங்களும்) இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் நேரடியாக வேலைவாய்ப்புத்துறை சார்பில் சிறந்த பயிற்சி வல்லுனர்களால் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும், http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை முன்பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்