என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "goverment"
- அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை
திருப்பூர் :
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது:-
தி.மு.க. விடியல் அரசு இல்லை. வீடியோ அரசு. விளம்பரத்தை மட்டும் தான் செய்கிறார்கள். மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமூக நீதியும், பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாக சேர்ந்து வளர்வதே திராவிட மாடல். பெரியாரும், அண்ணாவும் அதைத்தான் நினைத்தார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதா வந்துவிடும் என்று தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்று தி.மு.க.வினர் வந்து அனைத்தையும் சுருட்டி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
விரைவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர வைப்போம் என்று சபதமேற்போம். திருப்பூருக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்து 4-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். 99 சதவீதம் முடிந்து விட்டது. மீதம் 1 சதவீத பணியை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது. தொழில் நகருக்கு தேவையான குடிநீரை தராமல், காலதாமதம் செய்கிறது. விரைவில் 4-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்காவிட்டால் தாய்மார்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிவசாமி, எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேசன், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி, மகேஷ்ராம், கருணாகரன், அரிகரசுதன், திலக்நகர் சுப்பு,
அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, வக்கீல் அணி செயலாளர் முருகேசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- முருகப்பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் ,தேன் ,விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில்,நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலப்பட்டியில் உள்ள முருகன் மோகனூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
- தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்- புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் மாணவிகளுக்கு கையேடு அடங்கிய பை வழங்கப்பட்டது.
அதில் ஏ.டி.எம். கார்டு, புதுமைப்பெண் திட்டத்தின் விளக்கம் கையேடு, மேல்படிப்பு படிப்பதற்கான கையேடு ஆகியவை அடங்கி இருந்தது.
தஞ்சையில் 472 மாணவிகளுக்கு இந்த வரவேற்பு கையேடு அடங்கிய பையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு இந்த பை வழங்கப்பட்டது.
மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 3765 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வாழ்த்துரை வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.
- வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது.
தஞ்சாவூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.
அதன்படி இன்று தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியின் தவறான கொள்கைகளே காரணமாகும்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல வகையான பொருட்களின் விலையை மத்திய அரசை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறது.
இதற்கு தீர்வு தான் என்ன என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விளக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தான் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகிறோம்.
சமீபத்தில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அவற்றை தீர்ப்பதற்கு நாங்கள் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தான் பிரதமர் பேசி இருக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் அவ்வாறு பேசவில்லை.
தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.
பிறகு எப்படி வேலை கொடுப்பீர்கள். விவசாயிகள் போராடினால் தற்காலிகமாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்கள் போராட்டம் முடிந்த பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்து அடிக்கிறது மத்திய அரசு. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார்.
கடையநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை மற்றும் நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவசர முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டு நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் உபகரணங்களை இயக்கி பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் அனிதா பாலீன், மருத்துவர்கள் சரவணக்குமார், மீனாட்சி, நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், கவுன்சிலர்கள் திவான் மைதீன், முகையதீன் கனி, தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அருணாசலபாண்டியன், பகவதியப்பன், நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது மற்றும் நிர்வாகிகள் கருப்பணன், முதலியான்கான், வேல்சாமி, பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, கிளை செயலாளர்கள் பாலாஜி, கணேசன், முத்துராஜ், தங்கம், சுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் காளிமுத்து, அப்துல் மஜீத், அப்துல் வகாப், முகைதீன் அப்துல் காதர், சாகுல் ஹமீது, மசூது, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் மக்களுக்கு தேவையான பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதுதவிர, அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பானி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 17 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பின்னர், பதப்படுத்தி, குளிரூட்டி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் 42 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டிய பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயரத்தி தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதற்காக கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1 லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஜூலை 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MaharashtraMilkProtest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்