search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himanta Biswa Sharma"

    • அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும்.
    • சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC ) விண்ணப்ப ரசீது எண்ணை (ARN) சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும் என்றும் சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    2019 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்ட போது தவறுதலாக பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்ட 9.55 லட்சம் மக்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்றும் அவர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிக அளவிலான ஆதார் கார்டு விண்ணப்பங்கள் வந்தது என்றும் ஆதலால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

    • அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.

    அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் தொழுகை செய்ய உணவு நேரத்துக்குப் பின் வழங்கப்பட்டு வந்த 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான  பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று  தொழுகை இடைவேளை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேறியுள்ளது. அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளையை பாஜக அரசு ரத்து செய்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த உத்தரவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 2 மணிநேர ஜும்ஆ இசைவேலையை ரத்து செய்யப்பட்டதன் மூலம் [சட்டமன்றத்தின்] செயல்திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மற்றொரு [ஆங்கிலேய] காலனிய கால சடங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 1937 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கை சேர்ந்த சையத் சாதுல்லாவால் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

     இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.  இதற்கிடையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்தை கட்டாய பதிவு செய்யும் மசோதா நேற்று அசாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  மேலும் மதக் கலவரம் உருவாக்கும் விதத்தில் ஹிமந்த பிஸ்வா பேசி வருவதாக அசாமில் உள்ள  18 எதிர்க்கட்சிகள் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததது குறிப்பிடத்தக்கது.

     

    • பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி.யில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் உள்ளது.
    • அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

    லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதனையொட்டி பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், " பேஸ்புக்கில் இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இந்து பெண்களை கவர்ந்து சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தான் அந்த பையன் இந்து இல்லை என்பது அந்த பெண்ணிற்கு தெரியவருகிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

    • எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

    தெலுங்கானாவில் பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி எப்போதும், தெலுங்கு மொழியை நேசிக்கிறார். தெலுங்கானா வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறார். தெலுங்கு, தெலுங்கானா மீது அவருக்கு இருக்கும் பாசம் அது. அவர் எப்போதும் தெலுங்கானாவை ஆதரிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    ராகுல் காந்தியால் தன்னைப் பற்றியே எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. அதனால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.-சந்திரசேகர ராவ்( பி.ஆர்.எஸ்) கட்சி கூட்டணி அமையாது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் அவர் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளை அவர் கிண்டல் செய்தார்.

    • ராகுல் காந்தி நடை பயணம் அசாமில் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா.
    • இவரின் ஆகாய வழி பயணத்திற்கான மட்டும் அசாம் மாநில அரசு 58 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

    இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் எம்.பி.யான கவுரவ் கோகாய், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் விமான போக்குவரத்து செலவு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆனால், மக்களவை சபாநாயகர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக கோகாய் கூறுகையில் "அசாம் மாநில முதல்வர் மற்ற முக்கிய நபர்களுடன் விமான பயணம் மேற்கொண்டதன் வகைக்காக அசாம் மாநில அரசு 58.23 கோடி ரூபாய செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதில் அரசு சாராத பயணமம் அடங்கும் எனச் சொல்லப்படுகிறது.

    செலவழிக்கப்பட்டது அனைத்தும் பொதுமக்கள் பணம். அது முக்கியமான வளர்ச்சி திட்டத்திற்கு அல்லது சமூக நலன் தொடர்பான திட்டத்திற்கு செலவழித்திருக்கலாம். அரசு சாரா பயணம் மேற்கொண்டது. நிதி மற்றும் பொறுப்பு தொடர்பாக முக்கிய கவலை அளிக்கிறது" என்றார்.

    அரசியல் நிகழ்ச்சிக்காகவும், அசாம் மாநிலத்திற்கு வெளியே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் வாடகை விமானத்தை பயன்படுத்தியதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    சமீபத்தில் அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடை பயணம் செல்வதற்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் கோகாய் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    ×