search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hygiene"

    • தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
    • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

    பல்வேறு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில், மழை பெய்து வருகிறது. என்னதான் மழை வெப்பத்தில் இருந்து நமக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் நோய் தொற்றுக்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

    எனவே, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் அவர்களை எளிதில் பாதிக்கலாம். இந்த பருவத்தில் சிறிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    அதேசமயம், மழைக்காலத்தில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கலாம்.

    எனவே, மழைக்காலங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    எப்படி பராமரிப்பது?

    * உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு முடிந்தவரை முழு உணவாக தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். தாயின் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    * மழைக்காலங்களில் தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெளியில் இருந்து வந்த பிறகு உங்கள் கைகளை கழுவ முயற்சிக்கவும். அதற்கு பின்னர் உங்கள் குழந்தைகளைத் தொடவும்.

    * கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முழு கை ஆடைகளையும் அணிய வேண்டும்.

    * பருவமழை காலத்தில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். கூட்ட நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    * அதேசமயம், புல் அதிகம் வளரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசுக்கடி பயம் இருக்கும்.

    * மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே, குழந்தையை எப்போதும் உலர்வாக வைக்க முயற்சி செய்யுங்கள். வலுவான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும்.

    * சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழந்தையை ஆடை அணிவதற்கு முன் லேசாக அயர்ன் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள ஈரப்பதம் நீங்கும். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி கூட ஏற்படலாம்.

    • சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
    • பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார மற்ற முறையில் உணவகங்கள் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.

    இந்நிலையில் உணவு ஆய்வார்கள் பிரபலமான உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

    FSSAI அதிரடிப்படை குழு உப்பல் பகுதியில் சோதனை நடத்தியதில் செயற்கை உணவு வண்ணங்களை பயன்படுத்தியதும், 4 காலாவதியான விஜயா பால் பாக்கெட்டுகள், 65 கிலோ லேபிள் இல்லாத இஞ்சி பூண்டு விழுதுகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.


    சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி, சரியாக சேமிக்கப்படாத அரைத்த தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஹேர்கேப்கள், கையுறைகள், ஏப்ரான்கள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழ்கள் இல்லாமல் உணவு கையாளுபவர்கள் என பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட படங்கள் சமூகவளைதலங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, காலாவதியான பால், செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துவது மற்றும் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள இந்த உணவகங்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறும், மேலும் இது ஹைதராபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன்... என்று சமூக வலைதலங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    • வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது.
    • அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படும் ஹெல்த் அசெம்ப்ளி திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பாரத மாதா நிறுவனர் மணிமாறன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்த மான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக அரசு க்கு பதிவு செய்து வழங்கப்பட்டளது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்த ளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடு க்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.பல்லாயிரக்க ணக்கா னோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம், கிராம மக்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தவள்ளி ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கனி, உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×