search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paarkavan"

    • மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.
    • எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.

    விஷ்ணு பகவானின் வாமன அவதார காவியத்தில் மகாபலியை காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.

    நவக்கிர கங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார்.

    இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகனாக பிறந்தார்.

    ஆதலால் இவருக்கு பார்க்கவன் என்ற பெயரும் 'கவி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    சுக்கிரன் மிகச்சிறந்த சிவபக்தர் ஆவார்.

    சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் 'அமிர்த சஞ்சீவி' மந்திரத்தை கற்றவர்.

    இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண் தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்.

    முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கெல்லாம் குரு என்பதால் சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார்.

    ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர்.

    சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும்.

    சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும்.

    சமமானவர்கள் செவ்வாயும் குருவும்.

    மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.

    எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.

    ஒரு முறை சுக்கிராச்சாரி யாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது.

    இத் தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம்.

    • அங்கு ஒரு மரத்தடியில் சத்தியசீலை என்ற பெண், தனது வேதிய கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
    • அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான்.

    திருகஞ்சனூர் கோவிலில் கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி சன்னதிக்கு பின்புறம் வெளிச்சுற்றில் தழைத்து நிற்கிறது தல விருட்சமான பலாச மரம்.

    புரசமரம் என்னும் இந்த மரத்தில் கோடை காலத்தில் சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.

    இந்த மரம் 'எரிதழல்' என்று இலக்கியங்களிலும், காட்டுத்தீ பூ என்றும் குறிப் பிடப்படுகிறது.

    தினந்தோறும் 11 முறை ஒரு மண்டல காலத்திற்கு இந்த மரத்தைச் சுற்றி வந்து இறைவனை வழிபட்டால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மதுராபுரியை ஆண்டு வந்த கம்சராஜன், பலஷேத் திரங்களை தரிசித்து விட்டு கேடரம் என்ற ஊருக்கு வந்தான்.

    அங்கு ஒரு மரத்தடியில் சத்தியசீலை என்ற பெண், தனது வேதிய கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.

    அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான்.

    அப்போது வேதியர் கொடுத்த சாபத்தால், அவன் பால்வினை நோயால் பாதிக் கப்பட்டான்.

    எவ்வளவோ மருத்துவம் செய்தும், பல தீர்த்தங்களில் நீராடியும், பரிகாரங்கள் செய்தும் நோய் நீங்காமல் துன்பப்பட்டான்.

    பின்னர், தனது குலகுருவான சுக்ராச்சாரியாரின் உபதேசப்படி பலாசவனமான (கஞ்சனூர்) இத் தலத்தை அடைந்து காவிரியில் நீராடி காலையும், மாலையும் அக்னீஸ்வரரை வழிபட்டு பலாச மரத்தையும் மும்முறை வலம் வந்தான்.

    ஒரு மண்டலத்துக்குப் பின் அவனது நோய் குணமடைந்தது. பிரதிபலனாக இந்த ஆலயத்தைக் கட்டினான் என்பது வரலாறு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.
    • தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.

    வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    அதற்கு சுக்ராச்சார்யர், இதற்கு ஒரு பரிகாரம் இருப்பதாகவும், காவிரி நதியின் வடகரையில் தங்கள் தந்தையார் பராசர முனிவரால் பூஜிக்கப்பட்ட பலாசவனம் என்னும் கம்ஸ புர க்ஷேத்திரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகாம்பிகா சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமியை வழிபாடு செய்துவர சுக்ர சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று கூறினார்.

    தேவர்களும் அவ்வாறே (இன்றைய கஞ்சனூர்) கம்சபுரத்தை அடைந்து சிவத்தை நோக்கி தவத்தைச் மேற்கொண்டு வழிபட்டு வந்ததால் பரம கருணா மூர்த்தியான சர்வேஸ்வரன் தம்பதி சமேதராக சுக்கிரனின் ராசிகளான ரிஷப ராசியில் சூரியனும் துலா ராசியில் சந்திரனும் இருக்கும் வைகாசி விசாக பெருநாளில் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

    ஆகையால் தான் கஞ்சனூரில் மட்டும் சுக்கிர பகவான் இருக்க வேண்டிய இடத்தில் எம்பெருமான் அக்னீஸ்வரராக எழுந்தருள்கிறார் என்கிறது தல வரலாறு.

    வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார்.
    • தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தந்தருளினார்.

    நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள்.

    ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார்.

    அதன் விளக்கம் அறிவோமா?

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற் கடலைக் கடையத் தொடங்கினர்.

    அப்போது இறுக்கம் தாங்காமல் வாசுகியானது தன்னை அறியாமல் விஷத்தை உமிழ்ந்தது.

    பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களை இழுக்க சொல்லி, வால் பாகத்தை தாங்கள் பிடித்துக் கொண்டு கடையத் துவங்கினர்.

    நீண்ட முயற்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது .

    இதனை கண்டு மனம் மகிழ்ந்த தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தேவர்களுக்கு தந்தருளினார்.

    இதனால் கோபமுற்ற அசுர குரு சுக்ராச்சார்யர் தேவர்களை நோக்கி "வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் உழைப்பில் பங்கு கொண்ட அசுரர்களுக்கு அதன் பலனில் பங்களிக்காமல் துரோகம் செய்துவிட்டீர்கள்!

    அமுதம் உண்டதால் இறவாத்தன்மை பெற்ற நீங்கள் மனைவி, மக்கள், நாடு, நகரம் அனைத்தும் இழந்து தேவலோகத்தை விட்டு பூலோகம் சென்று அல்லல்படுவீர்களாக" என சாபமிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.
    • பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.

    நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.

    பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.

    அதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.

    அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குல குருவாக கொண்டனர்.

    தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச் சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

    இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

    தேவர்கள் அனைவரும் சென்று சிவ பெருமானிடம் முறையிட்டனர்.

    தான் கொடுத்த வர பலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கி விட்டார்.

    பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் சுக்கிரன் என்றும்,

    தூய வெண்மையாக வந்ததனால் வெள்ளி என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.

    • அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.
    • கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம். மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

    சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி நீங்கியருளியத் தலம்.

    பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத்தலம்.

    அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

    அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.

    கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம்.

    மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

    மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம்.

    வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம்

    என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.   

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
    • தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.

    தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாகும்.

    இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது.

    இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாககும்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

    பிரம்ம தேவருக்கு திருமணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்பகாம்பாள் காட்சி அளிக்கிறார்.

    ×