என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shocking Video"
- ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது.
- YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.
இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்
இதனையடுத்து, ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் அவரை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய தடை விதித்த ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. வரும் 6ம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார்.
- இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.
இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மாச்சர்லா தொகுதியின் எம்.எல்.ஏ.பால்வாய் கேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றார். அப்போது அங்கு ஒரு தேர்தல் அதிகாரி அவரை வரவேற்க எழுந்து நிற்கிறார்.
ஒரு வார்த்தை கூட பேசாமல், எம்.எல்.ஏ, ஈ.வி.எம். வைக்கப்பட்டுள்ள மூடப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, விவிபேட்-ஐ எடுத்து, தரையில் பலமாக வீசுகிறார்.
இயந்திரம் உடைந்து ஒரு பாகம் வெளியேறுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவர் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார்.
எம்.எல்.ஏ அருகே சென்று தடுத்து நிறுத்தும் முன்பு, எம்.எல்.ஏ., அலட்சியமாக வெளியே செல்கிறார். அவர் வெளியே செல்வதற்கு முன் தனது உதவியாளரை தாக்கியவரை எச்சரிக்கை செய்து செல்கிறார்.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி, மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களைகளை சேதப்படுத்துவது கேமராவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இதுபோன்ற அனைத்து வாக்குச்சாவடிகளின் வீடியோ காட்சிகளையும், பல்நாடு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்து, நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் தேர்தல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் காரணமாக, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும், 25 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- டெங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்
- அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.
குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியிருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுள்ளார். குழந்தையை டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறைந்து, அந்த செயலை படம்பிடித்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.
இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வலியால் குழந்தை அழுதபோதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பலர், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
"ஒரு தாயாக, இந்த வீடியோவைப் பார்த்து நான் அழுதேன். இந்த மனிதன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு மனிதன் செய்யும் காரியமே அல்ல" என்று சமூக ஊடக பயனர் ஒருவர் கூறினார்.
"தந்தைக்கான உரிமையை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தை எதிர்காலத்தில் அதிகமாக இது போன்ற துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடும்" என்று மற்றொரு பயனர் கூறினார்.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகராட்சி, திகிலூட்டும் இந்த வீடியோ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
டெங்கை விட்டு அக்குழந்தையின் தாயார் சென் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெங், இந்த வீடியோவை கண்டதும் சென் திரும்பி வருவார் என நம்பி இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். இந்த துன்புறுத்தலின் விளைவாக தாக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளாட்சி அமைப்பு அந்த குழந்தையை தற்போது கவனித்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தை டெங்கை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்