search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK councillor"

    • கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல்.
    • 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின்பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அருளின் செல்போன், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனிடம் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.
    • ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் கீரப்பாக்கம் பகுதியில் அன்பரசன் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    முன்பகை காரணமாக கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    கொலை வழக்கில் சுதர்சன், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
    • எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மேகலா. அ.தி.மு.க. வை சேர்ந்த இவர் இன்று காலை தனது 10 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார். மேலும் எங்களது கோரிக்கைகளை மாதந்தோறும் மன்ற கூட்டத்தில் மனுக்களாக கொடுத்து வருகிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    ஏனென்றால் நான் கீழ் சாதியை சேர்ந்தவர், இதனால் எனது குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டேன், பேரூராட்சியில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி 38-வது வார்டு குருசாமி நகரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பயன்பெரும் வகையில் நவீன பூங்கா அமைக்கப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மேலும் பூங்கா முழுவதும் புதர்மண்டி மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இது குறித்து மாமன்ற கூட்டத்தில் எடுத்து கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. மாறாக தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள். பூங்காக்களை பொருத்தவரை தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பாக பராமரிக்க முடியும். இருந்த போதிலும் மாநகராட்சி டெண்டர் மூலம் பணிகளை மேற்கொள்ளும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த அவலம் என்பது அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டில் மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர் இருக்கக்கூடிய பகுதிகளிலும் இதே நிலை தான்.

    எனவே மாநகராட்சி நிர்வாகத்தை நம்பி பயனில்லை என்பதால் தானாக முன்வந்து பணிகளை சொந்த செலவில் பொதுமக்களின் ஆதரவோடு முன்னெடுத்துள்ளோம். மேலும் இன்று குருசாமி நகர் பகுதியில் உள்ள இந்த பூங்காவில் பணிகளை தொடங்கி உள்ளோம். அடுத்தடுத்து அனைத்து பூங்காக்களையும் தூய்மைப்படுத்தி புத்துயிர் அளிக்கும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகரை பாராட்டி உள்ளனர்.

    ×