என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Apparatus"
- கமுதி அருகே அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.
- இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர்.
கமுதி
கமுதி அருகே உள்ள திம்மநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீர மச்சான் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, உடைகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, தலைவ நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உட்பட 7 அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர்.
- தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
- இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் கிராவல் மண் கடத்துவதாக சேலம் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கனிமவளத்துறை புவியியல் உதவி அலுவலர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் தொளசம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் உதவி அலுவலர் பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில் மானத்தாள் கிராமத்தை சேர்ந்த சித்துராஜ் (38), உப்பாரப்பட்டியை சேர்ந்த விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
- தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
- திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகலாவுதீன் (வயது 24) கணேஷ் (23). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி. எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவிட்டு மற்றும் உமி ஆகியவைகள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
- குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை இயந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை அறிந்த இரவு நேர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பேராபத்தும் பெரும் நஷ்டமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
- முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.
இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
அதனால் மழை காலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்–பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாபநாசம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர்.
இதுகுறித்த செய்தி மாலைமலரில் வெளியிடப்–பட்டது.
இதனை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் வடிகால் வாய்க்காலில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
- 3 பொக்லைன் எந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளினார்கள்.
- 50 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களுக்கு மாற்றிடம் வழங்காமல் வீடுகளை இடித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பூ கொள்ளை ராணி வாய்க்கால் தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி 3 பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் அந்த வீடுகளை இடித்து தள்ளினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு வீடுகளை இடியுங்கள் என ஏற்கனவே கூறியும் அதிகாரிகள் கேட்காமல் வீடுகளை இடித்ததாக கூறி திடீரென ஆற்றுப்பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
50 ஆண்டுக ளாக குடியிருக்கும் தங்களை மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்