search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempt to Kill"

    • வி.கரைப்பாளையத்தில் திருமணமான பட்டதாரி இளம்பெண் நித்யா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
    • சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் நித்யாவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரைப்பாளையத்தில் திருமணமான பட்டதாரி இளம்பெண் நித்யா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் நித்யாவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நித்யா கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திய, அவரது உறவினரான கரைப்பாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவரது தோட்டத்தில் இருந்த பவர் டில்லர், பிளாஸ்டிகள் குழாய்களை கடந்த 2 நாட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் எதிரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வரும், தமயந்தி வழக்கு மற்றும் வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்களுக்கு போலீசார் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாதாடி யவருமான பவானியைச் சேர்ந்த மோகன் தலைமையி லான வக்கீல்கள் குழுவினர் கரைப்பாளையம் பகுதிக்கு வந்து, குழந்தைவேலுவின் தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது வக்கீல்கள் குழுவினர் கூறியதாவது:-

    உண்மையான குற்ற வாளிகளை கைது செய்ய கோரி போராடி வருப வர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை யில் அடைத்துள்ளனர். நித்யாவை திட்டமிட்டே கொலை செய்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட வர்களையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுப வர்களையும் போலீசார் அச்சுறுத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். இந்த கொலையில் உரிய நடவ டிக்கை எடுக்க கோரியும், போலீசார் போடும்பொய் வழக்கில் சரியான தீர்வு கிடைக்க உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது.

    இதேபோல் கடந்த மாதத்தில் சரளைமேடு பகுதியில் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் அருகி லிருந்த குடிசைகள், 3 டிராக்டர்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் கரைப்பாளையத்தை சேர்ந்த பூங்கோதை என்பவ ரது வீட்டிலும், குழந்தை வேல் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டது.

    தற்போது குழந்தை வேலுவின் தோட்டத்தில் இருந்த பவர் டில்லர் எரிக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட நித்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கி வருகின்றனர்.

    இப்பகுதியில் நடை பெறும் தீ வைப்பு சம்பவங்க ளுக்கு நித்யாவுக்கு ஆதர வாக செயல்பட்ட இளை ஞர்கள் மீது வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் போலீசாரின் அராஜகத்தை காட்டுகிறது. எனவே நித்யாவின் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டி இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் குழுவினரிடம் கூறுகையில், இந்த பகுதி இளைஞர்கள் நித்யாவின் கொலைக்கு உண்மையான குற்றவாளி களை கண்டுபிடிக்க கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், அவர்களை குறி வைத்து போலீசார் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்து சிறையில் அடைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் யாரும் முன் நின்று போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று போலீசார் எண்ணு கின்றனர்.

    இப்பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கலப்படம் செய்து வெல்லம் தயாரிக்கின்றனர். அதை தட்டி கேட்ட காரணத்தி லேயே எங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு வெல்ல ஆலை அதிபர், இதுபோன்ற தேவை யில்லாத பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்.

    மேலும் பவர் டில்லர் எரிக்கப்பட்ட தோட்டத்தின் நுழைவாயிலில், பூட்டி இருந்த இரும்பு கேட்டை இரும்பு கம்பிகளால் கட்டி வைத்து, அந்த வழியாக செல்லும் மின்சார கம்பியிலிருந்து கொக்கி போட்டு இரும்பு கேட்டில் பொருத்தி இருந்தனர்.

    அதிர்ஷ்டவசமாக அந்த தோட்டத்தின் உரிமையா ளர்கள் தப்பிவிட்டனர். கேட்டில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்றனர்.

    இதைதொடர்ந்து குழுவி னர், பரமத்தி வேலூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு கலைச்செல்வனை நேரில் சென்று சந்தித்து நித்யா கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை யில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவித்தனர். அதேபோல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்த னர். அப்போது அவர்களிடம் டி.எஸ்.பி. கலையரசன், இந்த விவகாரத்தில் விசா ரணை தீவிரமாக நடை பெற்று வருகிறது. நிரந்தர தீர்வு அதற்கு காணப்படும் என்றார்.

    • தொட்டியம் அருகே ரேஷன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளியை கொல்ல முயற்சித்த 2 ேபரை போலீசார் தேடி வருகின்றனர்
    • இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் கூத் தன் செட்டியார் தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் ராமன் (வயது 50). இவர் கொடி–யம்பா–ளையம் ரேஷன் கடையில் மூட்டை தூக்கும் தினக்கூலி தொழி–லாளி–யாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வழக் கம்போல் நேற்று மாலை வேலை முடிந்து ராமன் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற் றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்றனர்.

    இதில் அவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரத்த வெள்ளத்தில் அவர் ஆற் றங்கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந் தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி சம்பூர்ணம் கணவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை முயற்சிக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மயக்க நிலையில் இருப்ப–தால் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்த முடிய–வில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. ஆற்றில் குளிக்கும் போது தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சாத்தான்குளம்:

    உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த வர் ஜெயபாண்டி மகன் சரத்குமார் (வயது 28).

    கொல்ல முயற்சி

    இவர் முன்விரோதம் காரணமாக தட்டார்மடம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்த அருண் பாண்டி (22), சீனி (28) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் சரத்கு மாரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் பவுலோஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    குண்டர் சட்டம் பாய்ந்தது

    இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரைத்தார்.

    அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், கைதான சரத்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ெஜயிலில் அடைக்கப் பட்டார்.

    ×