search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted murder"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது.
    • விஷயத்தில் உண்மை நிலவரங்களை அறிய அருண் மற்றும் அனுஷாவின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நர்சு வேடத்தில் வந்த பெண், சினேகாவிற்கு ஊசி போட முயன்றார். ஆனால் அவர் வைத்திருந்த சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதுகுறித்து சினேகாவின் தாயார் கேட்டபோது அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர், அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் அனுஷா (25) என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது. அவரை காதலித்ததாகவும் திருமணம் கை கூடாததால் சினேகாவை கொலை செய்ய முயன்றதாகவும் அனுஷா போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான அனுஷா, ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். முதல் கணவரை பிரிந்து விட்டார். 2-வதாக திருமணம் செய்தவர் வெளிநாட்டில் உள்ளார். இருப்பினும் அருண் மீதான காதலை அவர் கைவிடாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அருணிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் அனுஷாவிடம் சாதாரண முறையில் நட்பாக இருந்ததாக மட்டும் கூறினார்.

    இந்த விஷயத்தில் உண்மை நிலவரங்களை அறிய அருண் மற்றும் அனுஷாவின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அழிக்கப்பட்ட செய்திகளை மீட்க தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி அஜீப் தெரிவித்துள்ளார். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அனுஷாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை தலைவர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர் பினாகுமாரி பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.
    • காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சினேகா(வயது25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அங்கு சினேகாவுக்கு குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களாக சினேகாவும், அவரது குழந்தையும் மருத்துவமனையில் இருந்தனர். அவர்களை குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வந்தனர். பின்பு சினேகாவும், அவரது குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து சினேகாவின் குடும்பத்தினர் புறப்பட தயாராகினர். அப்போது பிறந்த குழந்தைக்கு சில பராமரிப்பு தேவைப்பட்டதால், செவிலியர்கள் கூறுவதை கேட்பதற்காக குழந்தையுடன் சினேகா மருத்துவமனையில், தான் தங்கியிருந்த அறையில் காத்திருந்தார்.

    அப்போது அங்கு நர்சு உடையணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் திடீரென சினேகாவின் கையை பிடித்து ஊசி போட முயன்றார். அவர் வைத்திருந்து சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா அதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    ஆனால் அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார். அப்போது அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அந்த பெண் அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி புரியும் அனுஷா(25) ஆவார்.

    காயங்குளத்தை சேர்ந்த அவர், சினேகாவின் உடலில் சிரிஞ்சு மூலம் காற்றை ஏற்றி கொல்லமுயற்சி செய்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக சினேகாவை கொல்ல முயன்றார்? என்று விசாரணை நடத்தினர். அதில் சினேகாவின் கணவர் அருணும், அனுஷாவும் நண்பர்கள் என்பதும், இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    குழந்தை பெற்ற பெண்ணை, மற்றொரு பெண் நர்சு வேடமிட்டு வந்து நரம்பில் காற்றை செலுத்தி கொல்ல முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் முனீஸ்வ–ரன் (வயது 34). இவரது மனைவி இசக்கியம்மாள் (30). கூலி வேலை பார்த்து வரும் முனீஸ்வரன், திரும–ணமான நாள் முதல் தின–மும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    2 குழந்தைகள் பிறந்த நிலையிலும் அவர் குடிப்ப–ழக்கத்தை மறக்கவில்லை. இதற்கிடையே தனது உற–வுக்கார பெண் ஒருவருடன் முனீஸ்வரனுக்கு ெதாடர்பு இருப்பது மனைவி இசக்கி–யம்மாளுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இத–னால் கணவன், மனைவிக்கி–டையே மேலும் பிரச்சினை முற்றியது.

    இதையடுத்து இசக்கியம்மாள் குழந்தைகளை அழைத் துக்கொண்டு, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். அவ்வப்போது முனீஸ்வரன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று காலை மனைவி, பிள்ளைகளை பார்த்து தான் வாங்கிச்சென்ற பல–கா–ரங்களை கொடுத்து–விட்டு வந்தார். பின்னர் அதேநாளில் இரவு 11 மணிக்கு மீண்டும் அங்கு சென்றார். அப்போது மனைவி அவரை கண்டித் தார். இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், உன்னையும், உன் தாய் கூடம்மாளையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி கத்தரிக்கோலால் அவர்களை குத்தி காயப்ப–டுத்தி உள்ளார்.

    உடனே அங்கு சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள், அக்கம்பக்கத்தினர் திரண்ட–னர். இதையடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியினர் போலீசா–ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார், முனீஸ்வரன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
    • ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் சுதாகரனை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை திட்டமிட்டதாக காங்கிரஸ் பிரமுகர் சக்திதரன் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை காங்கிரஸ் தலைவர் சுதாகரனும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 முறை என்னை கொல்ல நேரடியாக முயற்சித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    • பிரபுவை குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர்.
    • கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் ராஜம் (வயது 57). இவரது மகன் பிரபு வை கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28- ந்தேதி குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் எஸ்.என். சாவடியை சேர்ந்த தங்கபாண்டியன் (27), கம்மியம்பேட்டையை சேர்ந்த சதீஷ் (21), வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது.

    மேலும் தங்கபாண்டியன் மற்றும் சதீஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பிரபுவின் தாய் ராஜம் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர். இதனை மீறி மீண்டும் சாட்சி சொல்ல சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியதோடு கத்தியால் வெட்ட முயன்ற போது அங்கிருந்து ராஜம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியன் , சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி உள்ளார்.
    • காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோ. பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அபிநயா (வயது 22). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 9 மாதத்தில் ஆதித்யா என்கிற ஆண் குழந்தை உள்ளது. ஏழுமலை இலங்கையில் என்ஜினீ யராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், திரும ணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி, வரதட்சணை கேட்டு, அபிநயாவின் கணவர் ஏழுமலை, மாமனார் வீராசாமி, மாமியார் தனக்கொடி, நாத்தனார் சுசிலா ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதுடன், இரும்பு பைப்பால் தாக்கி, மண்ணெண்ணையை ஊற்றி அபிநயாவை கொளுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து, அபிநயா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அபிநயா கண வர் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸ்காரர்களான சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் கார்காவயல் என்ற பகுதியில் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மினி லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அந்த மினி லாரியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழி மறித்தனர்.

    பின்னர் லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர். ஆனால் இதனை கேட்காத நிஷாந்த் திடீரென லாரியை போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி அவர்களை கொல்ல முயன்றார். பின்னர் அங்கிருந்து லாரியுடன் தப்பினார்.

    இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசார் சரவணன், சதீஷ்குமார் இருவரும் தடுமாறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் பண்ணவயல் கிராமத்தை சேர்ந்த ராஜாவை (வயது31) கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    லாரியை ஓட்டி வந்த நிஷாந்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கலையரசன் மற்றும் 2 பேர் வேல் முருகனை வழிமறித்து, அசிங்கமாக திட்டி, கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
    • கலையரசன் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    வடலூர்கோட்டக் கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் தமிழரசன் (26).இவர் விநாயகர் கோயில் அருகில் உள்ள புங்க மரத்துக்கு அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த வெங்கடாசலம் மகன்கலையரசன் மற்றும் 2 பேர் வேல் முருகனை வழிமறித்து, அசிங்கமாக திட்டி, கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இது சம்பந்தமாக வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை மேற் கொண்டு பார்வதிபுரம் கலைப]யரசன் (வயது 31) மற்றும் பரஞ்ஜோதி, ஜெய பிரகாஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். வழக்கில் சம்பந்தப்பட்ட கலையரசன் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.இவர் மீது 2 கொலை முயற்சி வழக்கு, ஒரு அடிதடி வழக்கு உள்ளன. இவரின் குற்றசெய்கையை கட்டுப் டுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூர் மா வட்ட கலெக்டர்பாலசுப்பிர மணியம் 1 ஆண்டுகாலம் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் கலையரசன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

    • போலீசார் விசாரணை
    • தலைமறைவாக உள்ள 3 ேபரை பிடிக்க தீவிரம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 38).

    இவர், அதே பகுதியில் வழக்கறிஞர் கார்த்தி என்பவரின் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

    வெட்டுவானம் அம்பேத்கர் நகரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி விஜய் நேற்று காலை காரில் புறப்பட்டார். அப்போது, அவரை வழி மடக்கிய கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.

    படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஜய், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் விஜய்யை கத்தியால் வெட்டியதாக சுதர்சன், பாரத், சரத்குமார், பழனி, ஜெயபிரகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள சரண்ராஜ், பன்னீர்செல்வம் அவரது மனைவி வடிவழகி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இதில் ஏற்பட்ட தகராறில் பன்னீர் தரப்பினர் வழக்கறிஞர் கார்த்தியின் கார் டிரைவரான விஜய்யை கொலை செய்ய முயன்றுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர். இது ெதாடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா.
    • மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.

    கடந்த 17 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்நிலையில் கடந்த 5-ந் தேதி காலை 10 மணியளவில் சிதம்பரம் பகுதியில் ஜெயசந்திரன் ராஜா தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவரை தாக்கியவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இது மட்டுமின்றி சிதம்பரம் விருத்தாசலம் புதுக்கோட்டை கும்பகோணம் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஜெயசந்திரன் ராஜா தாக்கப்பட்டாரா அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி யாரையாவது ஏமாற்றினாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயசந்திரன் ராஜாவை தாக்கியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர்.
    • மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள்.


    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.

    கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 

    • இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
    • 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் சாலையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முயற்சித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதினார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்ட ர் சிவக்குமார், மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்களும் பலத்த காயம டைந்தனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனு ப்பிவை க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சிறுவர்கள் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    ×