search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank loan"

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    • 30 சதவீத மானியத்துடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டத்தில் 10 சதவீத பயனாளிகளின் பங்களிப்பு 60 சதவீத வங்கி கடன் திட்டமானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்படவுள்ளது.

    ரூ. 5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண்தொழி லாகவும் ரூ. 5 லட்சம் முதல் 15 லட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறுதொழிலாகவும் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் உள்ள தொழில் திட்டம் சிறுதொ ழிலாகவும் இத்திட்டத்தின் மூலம் வரையறு க்கப்பட்டுள்ளது.

    சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்தி றனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும். இணை மானிய திட்ட கடன் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை

    கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும். மேலும் பிற விபரங்களுக்கு வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில் மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • சுகானந்தலிங்கம் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
    • தினேஷ்ராஜாவிற்கும், சுகானந்தலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள கீழகட்டளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுகானந்தலிங்கம், விவசாயி. இவர் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி ஊழியர்கள் மதிப்பீடு தயார் செய்ய வீட்டை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ்ராஜாவிற்கும், சுகானந்தலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்ராஜா, சுகானந்தலிங்கத்தை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தினேஷ்ராஜாவை தேடி வருகின்றனர்.

    • கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
    • மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • வங்கியில் கடன் பெற்று தருகிறேன் தொழிலை விரிவு படுத்துங்கள் என்று விஜயகுமாரிடம் அவர் ஆசை வார்த்தை கூறினார்.
    • விஜயகுமார் கடன் வாங்கி தருமாறு கேட்டு பாலாஜியிடம் பல்வேறு தவணைகளில் ரூ 10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) பெயிண்டிங் காண்டிராக்டர்.

    இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு கே.கே நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலாஜி (வயது60) என்பவர் அறிமுகமானார்.

    அப்போது "வங்கி உயர் அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. வங்கியில் கடன் பெற்று தருகிறேன் தொழிலை விரிவு படுத்துங்கள்" என்று விஜயகுமாரிடம் அவர் ஆசை வார்த்தை கூறினார்.

    இதை உண்மை என்று நம்பிய விஜயகுமார் கடன் வாங்கி தருமாறு கேட்டு பாலாஜியிடம் பல்வேறு தவணைகளில் ரூ 10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட பாலாஜி இதுவரை விஜயகுமாருக்கு கடன் ஏதும் பெற்று தரவில்லை. மாறாக வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் பாலாஜி தான் "பொருளாதார குற்ற தடுப்பு பிரிவில் டி.எஸ்.பி" என்றும் கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் பண மோசடியில் ஈடுபட்ட பாலாஜி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அப்போது பாலாஜி டி.எஸ்.பி என போலி அடையாள அட்டையை காட்டி விஜயகுமாரை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
    • ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    படித்த முதல் தலைமுறையினரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம் என்ற திட்டத்தினை உருவாகியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

    அதன்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் (அதிகபட்ச உச்சவரம்பு ரூ.75 லட்சம்) வழங்கப்படும். மேலும் அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணபிக்கும்போது பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு வயது 45-க்குள் இருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற்சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொது பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம்புதூர், திருப்பூர் என்ற முகவரியிலோ அல்லது 0421-2475007 மற்றும் 9500713022 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு ஊரக வாழ் வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவி லான கூட்ட மைப்பு களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திருச்சியில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா வில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்க ளுக்கு வங்கி கடன் ரூ.12.20 கோடி மதிப்பீட்டிலும், 87 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.82.06 கோடி மதிப்பீட்டில் என 416 மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு ரூ.94.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணண், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் புவனேஸ்வரி பெருமாள், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கக திட்ட இயக்கு னர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, இந்தி யன் வங்கி துணை பொது மேலாளர் (கடலூர்) கவுரி சங்கர்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    • பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டம், சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல்நிதி வழங்கியதுடன், 15 சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடனாக ரூ.64.70 லட்சத்தை கலெக்டர் எஸ்.வினீத், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் ஆகியோா் வழங்கினா்.

    பின்னா் கலெக்டர் வினீத் பேசியதாவது:- தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சுயஉதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசாா்புத் தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    நகா்ப்புறத்தைச் சோ்ந்த 2,484 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.131.42 கோடி வங்கிகளின் மூலமாக நேரடியாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுயதொழில் தொடங்க தொழிற்கடனாக நகா்ப்புறத்தைச் சோ்ந்த 854 குழுக்களுக்கு ரூ.19.08 கோடியும், 1,982 தனி நபா்களுக்கு ரூ.1.38 கோடியும், 1,135 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுமிதா, மாவட்ட முன்னோடி வழங்கி மேலாளா் அலெக்ஸாண்டா் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்றனா்.

    • சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • ஜவுளி, வங்கி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ- மாணவிகளின் தேர்வு.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க.அண்ணாதுரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் திறன் விழாவில் தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் துவங்க வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பயிற்சி முடிவில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்த சான்றிதழை கொண்டு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கலாம்.

    இதில் மோட்டார் வாகனம், ஆடை, ஜவுளி, வங்கி மற்றும் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ மாணவிகளின் தேர்வு நடைபெற்றது.

    இலவச பயிற்சியில் பங்கு பெறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது சான்றிதழ்களுடன் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வருகை தந்தனர்.

    தொடர்ந்து திறன் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

    • மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
    • வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (டி.என்.யு.எச்.டி.பி.,) வீடு பெற, பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்த வேண்டும்.பயனாளிகள் பங்களிப்பு தொகையை வங்கி கடனாக பெற்று செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.

    கனரா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., - எச்.டி.எப்.சி., வங்கிகள் சார்பில் தனித்தனியே முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம் நடத்தப்பட்டது.வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.2 நாள் முகாமில் தகுதியுள்ள 78 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பயனாளிகள் 437 பேருக்கு மொத்தம் 2.90 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்கள், அடிப்படை வசதிகோரி 5 மனுக்கள் என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
    • மாணவனுக்கு ரூ.23,000-க்கான காசோலையை தாய் சித்ராவிடம் கலெக்டர் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

    மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 30 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 5 மனுக்களும், மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

    மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார்சித்ரா விடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் அர.நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார்.
    • ரத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்( வயது 47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார். இதற்கான மாத தவணை கடந்த மாதமாக சில செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த வங்கி கிளை சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்ட மாணிக்கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

    ×