search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
    • முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் 13 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 7 முதலை குட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் பிறந்தவை ஆகும்.

    இந்த 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி முதலைகைள பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து கிண்டி பூங்கா அதிகாரி அறிவழகன் கூறும்போது, கடந்த 1993-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 முதலகைள் கொண்டு விடப்பட்டது. ஆனால் அவை எதிர்பார்த்த இன பெருக்கம் செய்யவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் 24 முட்டைகளில் இருந்து முதலைக்குட்டிகள் பொறித்தன. இதில் பலவீனமாக இருந்த முதலைக்குட்டிகள் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 7 முதலைக் குட்டிகள் உள்ளன. இதன் 3-வது பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம். முதலைகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு முதலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • சுத்தானந்த பாரதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதில் நூலக பணியாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மைய நூலகமும்-நூலக தன்னார்வலர் குழுவும் இணைந்து கவி யோகி சுத்தானந்த பாரதியின் 126-வது பிறந்தநாள் விழா மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது. பேராசிரியர் ஹேமமாலினி குத்துவிளக்கு ஏற்றினார். நூலக கண்காணிப்பு அலுவலர் சாமிநாதன் சுத்தானந்த பாரதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நூலகர்கள் முத்துக்குமார், சாந்தி, எழுத்தாளர் ஈஸ்வரன் ஆகியோரும் மரியாதை செய்தனர். நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணா வாசகர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். இதில் நூலக பணியாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (34) பராமரித்து வருகிறார். இந்த காளை 6வயதை எட்டியுள்ள நிலையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1-ந்தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். அதேபோல இந்த ஆண்டும் காளைக்கு பிறந்தநாள் விழா நடத்தினோம் என்றனர்.

    • முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.சத்திரப்பட்டியில் 30-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
    • அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியாக பல்வேறு இடங்களில் மாட்டுவண்டி பந்தயம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.சத்திரப்பட்டியில் வருகிற 30-ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் நாளை (25-ந்தேதி) சத்திரப்பட்டி வாடிவாசல் முன்பு நடைபெறும் முன்பதிவில் பங்கேற்கலாம்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாடிப்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை தாங்கினார்.

    துணைச் செயலாளர் சிறுத்தை பாலன், பாசறை பேரூர் செயலாளர் யுவராஜா, தொகுதி செயலாளர் வளவன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் தளபதி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.

    நில உரிமை மீட்பு துணை அமைப்பாளர் விடுதலை வீரன் இனிப்பு வழங்கினார். தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மச்சராசன், குண்டுமலை, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    • சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும்,
    • கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழக சிறைத்துறை இயக்குனராக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பின், சிறை துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சிறை காவலர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும், சிறை காவலர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவர்களுக்கு பிறந்தநாள் கேக் மற்றும் சிறைத்துறை இயக்குனரின் வாழ்த்து அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்க ளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும், முதல் நிலை காவலர்கள் சுரேஷ் கண்ணன், லட்சுமணன், 2-ம் நிலை காவலர்கள் திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், சிறப்பு நிலை செவிலியர் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

    • மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்- மருத்துவ முகாம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    திருமங்கலம்

    தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட முத்தப்பன் பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் 70 அடி கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி னார்.

    இதனைத் தொடர்ந்து முத்தப்பன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து டி. குன்னத்தூரில் மதுரை தனியார் மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் மணி மாறன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நல்ல மரம் கிராமத்தில் நடை பெற்ற மருத்துவ முகாமை யும் தொடங்கி வைத்தார்

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நாகராஜ், தனசேகரன், சண்முகம், மதன்குமார் மற்றும் மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் பாண்டி முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
    • அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, கீழக்கரை நகர்மன்ற துணை தலைவரும், நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான் தலைமையில் நடந்தது.

    அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 500 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். கீழக்கரை நகர் தி.மு.க. நிர்வாகிகள் கென்னடி, முனீஸ்வரன், பாண்டியம்மாள், மணிகண்டன், இளைஞர் அணி நிர்வாகிகள் எபன், சுபியான், பயாஸ், நயீம், முகேஷ், காளிதாஸ், சரவணன் நகர் மன்ற உறுப்பினர் ராணி, சூரிய கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • காரைக்குடி நகர்மன்ற தலைவர் வழங்கினார்.

    காரைக்குடி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    அதனை முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை வழங்கினார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் சீமா, நகர் நல அலுவலர் மாலதி, சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், துரை.நாகராஜன், அனனை மைக்கேல், தெய்வானை இளமாறன், சாந்தி நாச்சியப்பன், மங்கையற்கரசி அடைக்கலம், கலா காசி நாதன், நாச்சம்மை சிவாஜி, மெய்யர், ராதா பாண்டியராஜன், முகமது சித்திக், பசும்பொன் மனோகரன், பிலோமினாள், ராணி சேட், ஹரிதாஸ், அஞ்சலிதேவி, ஹேமாதா செந்தில், அமுதா சண்முகம், கனகவல்லி, மலர்விழி பழனியப்பன், பூமிநாதன், திவ்யா சக்தி, அமுதா, மஞ்சுளா, சத்தியா கார்த்திகேயன், லில்லி தெரசு, தனம் சிங்கமுத்து, ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலங்குடி யார் நகர்மன்ற நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மங்கலம் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மங்கலம் ஊராட்சி தி.மு.க. சார்பில் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்புத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரியபுத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மங்கலம் பகுதியில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எம்.செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கும் ,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன் , தெற்கு ஒன்றிய கூடுதல் துணைச்செயலாளர் இடுவாய் ரவிச்சந்திரன் , மாவட்ட பிரதிநிதிகள் முதலிபாளையம் சுந்தரவடிவு , சுல்தான்பேட்டை ஹைடெக் ரவிச்சந்திரன், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினரும், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான எம்.ஏ.முகமது இத்ரீஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜுனைத், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன் , இடுவாய் சுரேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், முகமது உசேன், சீராணம்பாளையம் செயலாளர் முத்துவேல், தெற்கு ஒன்றிய முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், நெசவாளர் அணி மௌனசாமி, அக்ரஹாரப்புத்தூர் கிளை செயலாளர் ஆரூன், அக்ரஹாரப்புத்தூர் கிளை பிரதிநிதி சகாபுதீன், இந்தியன்நகர் பிரதிநிதி கனி, சின்னப்புத்தூர் கிளை செயலாளர் மணி, சின்னப்புத்தூர் பிரதிநிதி விவேகானந்தன், சுல்தான்பேட்டை பிரதிநிதி கிரிப்பாலு, சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி கிளைசெயலாளர் கிட்டான் மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் ,உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை விழா ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது. தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை துணைதலைவர் திருப்பதி, மேற்கு மாவட்ட மகளிரணி கவிதா, தெற்கு நகர அவைதலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

    41-வது வார்டு பொன்னகரம் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றி ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவில் மின்சார பிரிவு மண்டல பொருளாளர் ரமேஷ்குமார், வார்டு செயலாளர் காசிராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர துணை செயலாளர் சங்கர் ராஜ், வார்டு பொருளாளர் கணேஷ் குமார், பெருமாள், சக்தி, கோபி, விக்னேஷ்,நடராஜன், இணைசெயலாளர் யோகேஷ் ,ராஜேந்திரன், முத்துக்குமார், பாலமுருகன், கோவிந்தராஜ், வார்டு பிரதிநிதி சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    காரைக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரியக்குடியில் நடந்த விழாவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தனர்.

    ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில் அரியக்குடி கிளை அவைத் தலைவர் சீனிவாசன், கிளை கழக செயலாளர்கள் சுப்பிரமணியன், செந்தில்நாதன், மோகன், முத்துராஜ், அந்தோணிமகிமை, முருகன், துரைராஜ்குமார், ஊராட்சிமன்ற துணை தலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் என்.ஜி.ஓ.காலனியில் நடந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், மாவட்ட பேரவை துணை செயலாளர் நாகராஜன், கிளை செயலாளர் மகேந்திர குமார், ஐ.டி.விங் கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×