search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Call"

    • எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், 'ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கூலி வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உலவுகிற சில அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது.

    ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.

    நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள்.

    எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.. போராட்டங்களை நடத்தலாம்.. இதனை நான் ஒரு வேண்டுகோளாக உங்களுக்கு வைத்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இது நம்முடைய கட்சியின் தனித்துவத்தை எந்த விதத்தையும் பாதித்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இந்த கருத்தை நான் வைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

    • தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
    • எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்!

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

    அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல.

    சமத்துவத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ. இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம். சாதி. மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம்.

    வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம்.

    அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள். சமூகச் செயற்பாட்டாளர்கள். பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்!

    • வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 26ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடை பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், வடக்கு மாநகர தலைவர் பாலமுருகன், மேற்கு மாநகர தலைவர் வெங்கடேசன், மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் அலமேலு மெடிக்கல் சண்முகம், செயலாளர் சசி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி கேந்திரம் பொறுப்பாளரும் தொழில் பிரிவு மாநில செயலாளருமான ரங்கராஜன் செய்திருந்தார்.

    • ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    அமைச்சர் பதவிபெற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள் அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது.

    அதில் அமைச்சர்கள் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த கடிதத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடந்த 27-ந் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள் , மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2-ந் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கட்சியின் கொள்ளை, சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    • தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
    • மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

    விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற் கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்"-எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.

    அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட் டிற்கு வருகை தந்து பயிற்சி கள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள் ளார்.

    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல்-(sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது
    • இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செய லாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலை மையில் வடலூரில் நடை பெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், காசிராஜன், நாராயண சாமி, சுப்ரமணி யன், தனஞ்செயன், விஜய சுந்தரம், பகுதி செய லாளர்கள் நடராஜன், வெங்கடேஷ், சலீம், இளைய ராஜா, நகர செய லாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், நகராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்புராயலு, பேரூராட்சித் தலைவர் குறிஞ்சிப்பாடி கோகிலா குமார், துணைத்தலைவர் ராமர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் தலைமைமையில் நடை பெறும் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகு திகளின் வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் கலந்துக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    வருகிற 1.1.2024 தகுதி யேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணிகள் 21.07.2023 வெள்ளி முதல் 21.08.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில் நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • குரூப் “பி” மற்றும் குரூப் “சி” நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்கா லியிடங்களை அறி வித்துள்ளது.
    • இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் "ஒருங்கி ணைந்த பட்டதாரி நிலை யிலானத் தேர்வு தொடர் பான அறி விப்பினை வெளி யிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்ச கங்கள், துறைகள், நிறு வனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பா யங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "பி" மற்றும் குரூப் "சி" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்கா லியிடங்களை அறி வித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இவ்வி வரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ noticeCGLE03042023.pdf (https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ noticeCGLE03042023.pdf) என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

    இப்பணிக்காலி யிடங்க ளுக்கு www.ssc.nic.in (http://www.ssc.nic.in/) என்ற பணியாளர் தேர்வாணை யத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இத்தேர்வுக ளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3-ந்தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4-ந்தேதி ஆகும்.

    ஜூலை மாதம் தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்க ளிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், இவ்விணை யதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொ லிகளைக் கண்டு பயன்பெ றுமாறும், தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்ப யிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் மாவட்ட கார்மேகம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு பணிக்கான போட்டி

    தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்புமத்திய அரசு பணிக்கான போட்டி

    தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
    • இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.

    சேலம்:

    மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், அதன் தன்னாட்சி நிறுவனமாகிய இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த சமூக மேம்பாட்டு வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் தலைமை யிலான இளையோர் கலந்துரையாடல், 5 உறுதிமொழிகள் குறித்த நேர்மறை விவாதம் நடை பெறும். இதில் குறைந்த பட்சம் 500 இளையோர் (இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்) பங்கேற்பர்.

    இதன் நிறைவில் எதிர்கால இந்தியாவிற்கான திட்டங்கள் உருவாக ஆணை செய்வார்கள். இந்நிகழ்ச்சியை சிறப்பாக திட்டமிட்டு அமைப்ப தற்கான செலவு தொகை யாக ரூ.20 ஆயிரம் பொறுப்பேற்று நடத்தும் சமூக அடிப்படை நிறுவ னத்திற்கு நிகழ்ச்சி முடிந்தபின் தரப்படும்.

    இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்போர் எவ்வித அரசியல், கட்சி சார்பற்றவர்களாகவும், எந்த வித களங்கமும், இல்லாத முன்வரலாறு கொண்டவர்களாகவும் இருப்பதோடு நிறுவனங்கள் மீது எவ்வித குற்ற வழக்கும் இருக்கக் கூடாது.

    மேலும் இளையோர் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி முடிக்க போதிய நிறுவன அமைப்பு பலம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் டர்வின் சார்லஸ்டன் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுகேந்திரா மூலம் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளையோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டர் பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்படவுள்ளது.

    குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் மாத தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.தகுதியும், விருப்பமும் உள்ள இருபாலரும் www.nyks.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்குரோடு, மாவட்ட இளையோர் அலுவலகம், நேருயுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்பித்தினை பெற்று பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் தகவலுக்கு 04328- 296213, செல்நம்பர் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.





    • 403 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 403 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள், கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சுய உதவி குழுக்கள், எஸ்டேட் நிறுவனத்தினர் ஆகியோரோல் நடத்தப்படுகிறது.இவற்றில் பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடைகளை சீரமைப்பது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கோத்தகிரியில் கோழிக்கரை, குஞ்சப்பனை, கொட்டக்கம்பை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தாலும் செம்மனரை ரேஷன் கடை பர்ன்சைடு எஸ்டேட் நிர்வாகத்தாலும் சீரமைக்கப்பட்டுள்ளன.

    கூடலூரில் ஸ்ரீமதுரை 1 மற்றும் 11 கொங்கர்மூலா, மண்வயல், குச்சி முச்சி, போஸ்பரா ஆகிய ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டியில் பிங்கர் போஸ்ட் 1 மற்றும் 11, குன்னூர் வட்டத்தில் எடப்பள்ளி ரேஷன் கடை ஆகியவை நீலகிரி மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர் சங்கம் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.
    • பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

    சேலம்:

    தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்,பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள். நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக சேலம் மாவட்டத்தில் செயல்ப டுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலை மையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான www.tnpcb.gov.in -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும் எனவே தகுதி

    யானவர்கள் விண்ணப்பிக்கு மாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம், வட்டார அளவில் காலியாக உள்ள, 2 வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் 12 உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், ஒரு கணக்காளர் மற்றும் எழுத்தர் என 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கம் திறன் பெற்று இருக்க வேண்டும். உதவி தொழில் நுட்ப மேலாளர்களுக்கான பணியிடங்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் திறன் முடித்திருக்க வேண்டும். கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    இந்தபணியிடங்கள் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, அனுபவம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பணி நியமன முகமைகள், தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்(வே.தொ.மே.மு), வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நெ. 1, செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், சேலம் மாவட்டம்-636 001 என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×