search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65), விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் தம்பிக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது பாமினி ஆற்று பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செஞ்சி அருகே இன்று காலை கார், டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    சென்னையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). இவர் வாடகை கார் ஓட்டிவந்தார். நேற்று இரவு அவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை சென்றார்.

    அங்கு ஆட்களை இறக்கி விட்டு மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார். இன்று காலை 6.30 மணி அளவில் அவர் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டை காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது. காட்டு பகுதியில் உள்ள குண்டு-குழியான சாலையில் சென்றபோது காரும்-டேங்கர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த செந்தில்குமார் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், செஞ்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருக்குள் சிக்கி பிணமாக கிடந்த செந்தில்குமாரின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். கார்- டேங்கர் லாரி மோதிய விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
    தஞ்சை அருகே பஸ்சுக்காக காத்திருந்த போது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி (வயது 56).

    இவர் தனது உறவினர்களான புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த கருப்பையன் (55), மாரிமுத்து (65) ஆகியோருடன் நேற்று மாலை தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 பேரும் இரவு 11.30 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அந்த சமயத்தில் தஞ்சையில் இருந்து பாபநாசம் உடையார் கோவிலுக்கு ஒரு கார் தாறுமாறாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், திடீரென பஸ்சுக்காக காத்திருந்த கவுரி, கருப்பையா, மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் கவுரி, கருப்பையா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மாரிமுத்து காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கவுரி, கருப்பையா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் , பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ரமணி (48) என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    சார்ஜாவில் குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதியர், கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Indiancoupledead
    சார்ஜா:

    இந்தியாவைச் சேர்ந்த வினோத்பாய் படேல்(47), ரோகிணிபேகன் வினோத்பாய் படேல்(42), சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா,  தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறை நாட்களை கொண்டாட சார்ஜா வந்திருந்தனர். இவர்கள் குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த செவ்வாய்க்கிழமை சார்ஜாவில் அனைவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

    ரோகிணியின் மைத்துனர் தீபக் படேல் பாலைவன பகுதியில் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது, காரின் வேகத்தை தொடர்ந்து அதிகப்படுத்தினார். அப்போது கார் கட்டுப்பாட்டினை இழந்து உருண்டு விழுந்தது.

    இதில் ரோகிணிபேகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வினோத்பாய் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த தம்பதி  தங்கள் குடும்பத்தினரை காண 12 ஆண்டுகளுக்கு பின்னர்  சவுதிக்கு முதல் முறையாக வந்துள்ளனர். மேலும் காரை ஓட்டிச் சென்ற தீபக் படேல் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

    இந்நிலையில் படுகாயமடைந்த சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா, வைஷாலி ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேக்னா கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Indiancoupledead
    அஞ்சுகிராமம் அருகே இன்று காங்கிரஸ் நிர்வாகி கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அஞ்சுகிராமம்:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள எட்டுகூட்டு தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 50). இவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவராகவும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார்.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண வீடு, புதுமனை புகுவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள இருந்தனர்.

    இந்த நிலையில் தொழில் வி‌ஷயமாக பாலச்சந்திரன் அவசரமாக நெல்லை செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவர் இன்று தனது குடும்பத்தினரிடம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு தயாராக இருக்கும்படியும், தான் காலையிலேயே நெல்லைக்கு சென்றுவிட்டு வந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.

    அதன்பிறகு தனது காரில் இன்று காலை பாலச்சந்திரன் நெல்லை நோக்கி புறப்பட்டார்.

    அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் காரில் பாலச்சந்திரன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாழை தோட்டம் பகுதியில் சென்ற போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதன்பிறகு அங்கிருந்த போலீஸ் தடுப்பு மீது அந்த கார் மோதியது. இதன் பிறகு தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் 10 அடி பள்ளத்தில் இருந்த வாழை தோட்டத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் உருண்டு சென்ற கார் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த பாலச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். வாழைத் தோட்டத்தில் இருந்த சகதியில் அவரது முகம் புதைந்ததால் மூச்சு திணறி அவர் உயிரிழந்து உள்ளார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அஞ்சு கிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். காருக்குள் சிக்கி பலியான பாலச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து பற்றி பாலச்சந்திரனின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    அதேபோல பாலச்சந் திரன் மரணமடைந்த தகவல் காங்கிரஸ் கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பாலச்சந்திரன் விபத்தில் மரணமடைந்ததை கேட்டதும் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் திரண்டனர். மேலும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினரும் அங்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டிருந்தனர்.

    பாலச்சந்திரன் கேபிள் டி.வி. தொழிலும் நடத்தி வந்தார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் பஞ்சாப் மாநிலத்தில் படித்து வருகிறார். 2-வது மகன் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    மயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலம்:

    திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரான்சிஸ்ராஜம் (வயது 58). இவர்களது மகன் செல்லதுரை. இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். செல்லதுரையின் மனைவி ஷெர்லிக்கு வருகிற 10-ந்தேதி சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்சிஸ்ராஜம் தனது உறவினர்களுடன் சென்னை செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று காலை பிரான்சிஸ்ராஜம் தனது பேத்தி தாட்னி(2½), உறவினர்கள் மோசஸ்(82), சகாயமேரி(77) மற்றும் நண்பர் ரவிச்சந்திரன்(55) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து(38) என்பவர் ஓட்டினார்.

    இந்த கார் மயிலம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரான்சிஸ்ராஜம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    விபத்துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரான்சிஸ்ராஜம், மோசஸ் ஆகிய 2 பேரும் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர்.

    சிறுமி தாட்னி, சகாயமேரி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பூர் அருகே ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் டி.எம்.எஸ். நகரை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் பாண்டித்துரை (வயது24). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(20).

    இவர்கள் இருவரும் பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிகட்டை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட்டு மாலை 5 மணிக்கு திருப்பூருக்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். பின் இருக்கையில் பாண்டித்துரை அமர்ந்து இருந்தார்.

    அலகுமலை-பெருந்தொழுவு சாலையில் கைகாட்டி என்ற இடம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளுக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற பாண்டித்துரைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாண்டித்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு பார்த்து விட்டு திரும்பி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். #Chhattisgarhcaraccident
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதிக்குட்பட்ட அட்டல் நகரில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

    ஓட்டுனர் மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம்  என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chhattisgarhcaraccident
    சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிவகிரி:

    ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொள்ளம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது60). கூலி தொழிலாளி. நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் சிவகிரி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டையை சேர்ந்த டாக்டர் பாலாஜி(24) ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் குருசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே குருசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மானூர் அருகே கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அயுப் கான்புரத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். வீடு வீடாக சென்று எண்ணை வியாபாரமும் செய்து வந்தார். நேற்று இரவு இவர் அரிசி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். 

    அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யாத்துரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யாத்துரை பரிதாபமாக இறந்தார். 

    இதுபற்றி மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உத்தரகாண்டில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UttarakhandAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தின் பாராகோட் பகுதியை சேர்ந்த ஒருவரது உடலை தகனம் செய்வதற்காக காரில் எடுத்துச் சென்றனர். அங்குள்ள லோஹா காட் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 6 பேரும், மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மேலும், 12 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்த மீட்புக்குழு அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டது, பள்ளத்தில் விழுந்தவர்களை கயிறுகள் கட்டி மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #UttarakhandAccident
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழ மழையூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (25).இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி சென்று விட்டு மீண்டும் மழையூருக்கு திரும்பி கொண் டிருந்தார். அப்போது சாலையில் அதே பகுதியை சேர்ந்த காமேஸ்வரி (21) மற்றும் சரண்யா (24) தனது குழந்தை யோகப்பிரியாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். உடனே பாண்டியன் அவர்கள் 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து மழையூருக்கு அழைத்து சென்றார். 

    ஆலங்குடியை அடுத்த மேலப்பட்டி ராசிமங்கலம் அருகே சென்ற போது வடகாட்டை சேர்ந்த சையது ஹக்கிம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சையது ஹக்கிமை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×