search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    லாரி மீது கார் மோதிய விபத்தில் அரிசி ஆலை அதிபர் உடல் நசுங்கி பலியானார்.

    பேரையூர்:

    தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் வன்னியராஜன். இவருடைய மகன் கமல் (வயது 40) அரிசி ஆலை அதிபர்.

    இவரது மனைவி பிரகன்யா (35), மகள் கிரிஸ்தாலா (5), மகன் கிரிஸ் வன்னியராஜ் (4). இவர்கள் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்னைக்கு சென்றனர். அங்கு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மகள் திருமணத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் அனைவரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். கமல் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 4.30 மணி யளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் 4 வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது கரிசல்பட்டி பகுதியில் ஊட்டியில் இருந்து மார்த்தாண்டம் சென்ற டீ தூள் லாரி சாலையில் நின்றது. இதனை காரை ஓட்டிவந்த கமல் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த கார் லாரியின் பின்னால் மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி உருக்குலைந்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த கமல் மற்றும் பிரகன்யா இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

    சுமார் 1 மணி நேரம் போராடிய பின்பு, காருக்குள் சிக்கிய கமலின் உடலையே மீட்க முடிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அவரது மனைவி பிரகன்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குழந்தைகள் இருவரும் லேசான காயத்துடன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    உளுந்தூர்பேட்டை அருகே நடந்து சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர்தக்கா பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 32). இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். இதையடுத்து ராஜீவ் காந்திக்கும், கல்பனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் ராஜீவ்காந்தி தனது மனைவியுடன் உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி அவரது மனைவி கல்பனாவுடன் சென்றார். பின்னர் கல்பனாவை கள்ளக்குறிச்சியில் விட்டுவிட்டு ராஜீவ்காந்தி மட்டும் உளுந்தூர்பேட்டைக்கு பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகர் பகுதியில் ராஜீவ் காந்தி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராஜீவ்காந்தி மீது மோதியது. இதில் ராஜீவ்காந்தி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். விபத்து குறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான ராஜீவ்காந்தியின் மனைவி கல்பனா கர்ப்பிணியாக உள்ளார். திருமணமான 9 மாதத்தில் ராஜீவ்காந்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விசைத்தறி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாளியை சேர்ந்தவர் சீனிவாசன் (45) விசைத்தறி தொழிலாளி. இவர் சுக்கம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் சீனிவாசன் மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான சீனிவாசனுக்கு சுனிதா என்ற மனைவியும், சுருதி, நிவேதிதா ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை அருகே நின்று கொண்டிருந்த காரை பழக்கடையில் பணிபுரிந்து வருபவர் ஓட்ட 
    அப்போது எதிர்பாராத விதமாக அவரது கட்டுப் பாட்டை இழந்த கார் அதிவேகமாக புதிய பஸ் நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறை சுவற்றில் மோதியது. 

    அங்கு படுத்திருந்த பனைக்குளத்தைச்சேர்ந்த மகாலிங்கம் என்ற வாலிபர் மீது  அந்த  கார் ஏறி இறங்கியது. ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகாலிங்கத்தை அருகிலிருந்த பொதுமக்கள் ராமநாதபுரம் அரசு  மருத்துவ மனைக்கு அனுப்பினர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். 

    இவர் புதிய பஸ்  நிலையத்தில் கட்டண கழிப்பறை துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடைக்குள் கார் புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கொசவப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது29). இவர் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் டீக்கடை வைத்துள்ளார்.

    நேற்று ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

    அங்கு டீக்குடித்துக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த அய்யாவு மற்றும் சின்னான் ஆகியோர் மீது கார் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொல்லிமலை வாலவஞ்சிநாட்டை சேர்ந்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனார். #Gujarat #CarAccident
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து 7 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகருக்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் தங்களின் உறவினரை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    பாத் என்கிற கிராமத்துக்கு அருகே போடேலி-ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் கார் அதில் மூழ்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவர்கள் பலத்த காயம் அடைந்திருந்தனர்.

    சிறுவர்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். #Gujarat #CarAccident #tamilnews 
    சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே நடிகர் விக்ரம் மகன் சென்ற கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் காயமடைந்தார்#ActorVikram #Dhruv
    சென்னை:

    நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்தது.

    இதில், ஆட்டோ டிரைவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர்.

    துருவ் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர்.
    ஆண்டிப்பட்டி அருகே சாலையில் சென்ற கார் மரத்தின் மீது மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆண்டிப்பட்டி:

    தேனியிலிருந்து மதுரைக்கு ஒரு காரில் தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38), செக்கானூரணி கரடிக்கல்லை சேர்ந்த முத்து (22), அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (28), சுதாகர் (23) ஆகியோர் பயணம் செய்தனர்.

    இந்த கார் ஆண்டிப்பட்டியை கடந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செல்லும் போது கார் டிரைவர் முத்துவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பாலத்தை இடித்து, வேப்ப மரத்தில் பலமாக மோதி உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திருவெண்ணைநல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டல குழியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). விவசாயி.இவரது தங்கை வீடு திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூரில் உள்ளது. நேற்று காலை முருகன் தனது தங்கை வீட்டுக்கு சென்று இருந்தார். இரவு 8 மணி அளவில் முருகன் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அங்குள்ள பஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று முருகன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.

    பலத்த காயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் நடந்து விபத்தில் 6 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் பயணிகள் கூட்டத்தில் சொகுசு கார் புகுந்து 6 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களை இன்று கலெக்டர் ஹரிஹரன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தனியார் வாகனம் பயணிகள் மீது மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டருடன் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.

    திருப்பத்தூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசர்குலம் பகுதியை சேர்ந்த தப்ளிக் ஜமாத் கமிட்டியினர் திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக அறந்தாங்கி நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை திருப்பத்தூர் அருகில் சிங்கம்புணரி சாலையில் அவர்கள் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாலாற்று கால்வாய்க்குள் பாய்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற அறந்தாங்கியை சேர்ந்த ஹாஜிசுல்தான்(வயது 70) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மேலும் காரில் சென்ற முகமது அலி(54), பீர்முகமது(71), அப்துல்ஜபார்(51), டிரைவர் ஷேக் அப்துல்லா(47) ஆகியோர் பலத்த காயங்களுடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புன்னம்சத்திரம் அருகே புளிய மரத்தில் கார் மோதி குப்புறக் கவிந்த விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் அருகே வெங்கமேடு ராம்நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் எலக்ட்ரிக்  கடை வைத்து நடத்தி வந்தார்.  இந்நிலையில் வேலைக்காக இவரும் குளித்தலை பொய்யாமணி பங்களாபுதூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி (29) மற்றும் அதேபகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேர் காரில் கரூரில் இருந்து ஈரோடுக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டி வந்தார். 

    புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடை பகுதிக்கு கார் வந்தபோது, கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி, கார் குப்புறக் கவிழ்ந்தது. காரை  ஓட்டி வந்த செந்தில் குமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில்பலத்த  காயம் ஏற்பட்டது. காரில் இருந்த தெய்வசிகா மணி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். செந்தில்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி  செந்தில்குமார் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×