search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebrate"

    • கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
    • கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.

    பெரம்பலூர்

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


    • 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
    • அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.

    நாமக்கல்:

    2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    • தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    நெல்லையில் மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட அவை தலைவர் கணபதி சுந்தரம், பொருளாளர் நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் சிவ அருண், கந்தசாமி, கதிரேசன், செல்வ சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுைர கோவில்களில் புதுமண தம்பதிகள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
    • இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

    மதுரை

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.

    ஆடி மாதத்தில் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை செய்வதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி ஆடிப்பெருக்கான இன்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலிகள் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

    மதுரையில் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான புதுமணத்தம்பதிகள் வந்திருந்தனர். அவர்கள் பொற்றாமரைகுளத்தில் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர். இதே போல் முத்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் புதுமண தம்பதிகள் வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை ஆற்றில் வழக்கமாக ஏராளமானோர் திரள்வது உண்டு.

    ஆனால் தற்போது மழை காரணமாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கு பூஜை நடத்த போலீசார் தடை விதித்ததோடு தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.

    மதுரையில் திருமணமான பெண்கள் பலர் வீடுகளில் வழிபட்டு தாலி பிரித்து புதியதை அணிந்து கொண்டனர்.

    • வெங்கட்டா நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்த முகாமை மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • பா.ஜனதா மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா மகளிர் அணியினருக்கான பயிற்சி முகாம் 3 நாள் நடந்தது. வெங்கட்டா நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்த முகாமை மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    பா.ஜனதா மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் முறை, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், முகாமில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. புதுவை பா.ஜனதா பொதுச்செயலாளர் மோகன் குமார், மகளிர் அணி பொறுப்பாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பயிற்சியாளர்கள் பிரிவு இணை அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய மகளிர் அணி செயலாளர்கள் பத்மஜா மேனன், ஜஸ்வர்யா விஷ்வாஷ், தேசிய மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் சுஜாதா பட்டேல், சட்ட ஆலோசகர்மேரி அன்னா தயாவதி, தமிழ்நாடு பா.ஜனதா செயலாளர் சூரியா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாம் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவி மாநில துணைத் தலைவி கீதா, இணை பொறுப்பாளராக அமுதா ராணி ஆகியோர் செயல்பட்டனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திரா காந்தி சிலை அருகே வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொது செயலாளர் மோகன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. துணைத் தலைவர் தங்க விக்ரமன், மாநில செயலாளர்கள் அகிலன், லதா, ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட தலைவர், நாகேஷ்வரன், மாநில பட்டியல் அணி தலைவர், தமிழ்மாறன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம் என பலர் கலந்து கொண்டனர்.

    பாகிஸ்தான் தேசிய தின விழாவில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைக்கப்பட்ட அழைப்பை இந்தியா புறக்கணித்தது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

    ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-

    பாகிஸ்தான் தூதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நிகழ்ச்சிக்கு இந்திய அரசு சார்பில் யாரையும் அனுப்புவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.

    அதுபோல், இஸ்லாமாபாத்தில் நடக்கும் பாகிஸ்தான் தேசிய தினம் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் அங்குள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியா செல்ல மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, டெல்லியில் இன்று விழா நடைபெறுகிறது. #GST #Celebrate
    புதுடெல்லி:

    உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜி.எஸ்டி. வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து இன்றுடன் (ஜூலை 1-ந் தேதி) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. நாள் விழா கொண்டாடப்படுகிறது.

    விழாவுக்கு நிதி மற்றும் ரெயில்வே இலாகா மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவபிரதாப் சுக்லா மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள். #GST #Celebrate #tamilnews  
    ×