என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "contests"
- மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.
ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளார்.
- வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழுவிற்கு போட்டிகள் நடைபெற்றன.
- வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கவிதை கட்டுரை ஓவிய போட்டிகள் நடைபெற்றன.
இதையடுத்து பரிசளிக்கும் விழா மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.
நிர்வாக கணக்கு திட்ட உதவிஅலுவலர் முருகேசன், உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு தலைமை திட்ட இயக்குனர் முருகேசன் பரிசுகள் வழங்கினார்.
- ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
- ஆட்டோ டிரைவர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
உலக ரெட்கிராஸ் தினத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு கடந்த ஆண்டு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ பவுண்டேஷன், ஆர்கிடெக் அருண் பாலாஜி, துணை இயக்குனர் சுகாதாரம் டாக்டர் நமச்சிவாயம், பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் டாக்டர் வேல்முருகன், மத்திய மருந்து ஆய்வாளர் கவியரசன், முதல் நிலை மருந்து ஆய்வாளர் சுபத்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், இன்ஸ்பெக்டர் சந்திரா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வளாகத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்)டாக்டர் சுகபுத்ரா, ரெட்கிராஸ் கொடியினை ஏற்றி வைத்து, ரெட்கிராஸ் இயக்கத்தை தோற்றுவித்த ஜீன்ஹென்றிடூனாந் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.
உலக ரெட்கிராஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித் திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் மாணவர்களிடம் ரெட்கிராஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ரெட்கிராஸ் வளாகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோரும், அரசு ராசாமிராசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி மையத்தில் பராமரிப்பில் உள்ள மனநலம் குன்றிய நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் டாக்டர். ராதிகா மைக்கேல், டாக்டர். சிங்காரவேலு, டாக்டர். தமிழரசன், ஜெயக்குமார், அரிஸ்டோ வீரா, ஸ்டாலின் பாபு, கோவி மோகன், முனைவர் பிரகதீஷ், ஜான்ஸ்டீபன், செல்வராணி, பயோகேர் முத்துக்குமார், இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், ரெட்கிராஸ் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.
- ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
பள்ளி, கல்லூரி மாண வர்களிடையே பேச்சாற்ற லையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவி கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்குதல் வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ள லாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பு தொடர்ந்து சிறந்த முறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசுகளும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசு தொகைக்காண காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரதீப் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்சபீர் பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடங்கியது.
இந்நிறுவன இயக்குநா் முனைவா் வி. சுப்பிரமணியனின் 120 -வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக இந்த உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி இன்று வரை நடத்தப்படுகிறது. நிகழாண்டு சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 அரங்குகள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தொழில்முனைவோராகி வெற்றிகரமாகச் செயல்படுபவா்களின் அரங்குகளாகும்.
மேலும், இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவையும் காட்சிப்படு த்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகச் செயலா் அனிதா பிரவீன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேட்டையும், சிறுதானிய பதப்படுத்தும் முறைகள் பற்றிய கையேட்டையும் வெளியிட்டாா்.
இந்நிகழ்வில் மலேசியா டெய்லா்ஸ் பல்கலைக்கழகத்துடன் கல்விசாா் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் காவேரி ஸ்மாா்ட் புட் மற்றும் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தென்னை மதிப்பு கூட்டுப்பொருட்களுக்கான தொழில்நுட்பங்களின் தொகுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மேலும், இந்நிறுவனத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன், ஈச்சங்கோட்டை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் வேலாயுதம், குமுளூா் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ப ராஜ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) மருதுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கண்காட்சியைப் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா். இதேபோல, விவசாயிகள், தொழில்முனைவோா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோா் இன்று பாா்வையிட்டனர். மேற்கண்ட தகவலை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்