search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtesy"

    • 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
    • தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம்.

    திருப்பூர்:

    நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது.

    இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25-வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்துகொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

    இதனைத்தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    தொடர்ந்து மறைந்த நடிகரும் தே.மு.தி.க., நிறுவனத்தலைவருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து நடிகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் . அந்த வகையில் கான்ஜுரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை. நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்து தான். இவ்வாறு அவர் கூறினார்.

    • இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை விழுப்புரம் கலெக்டர் பழனி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு விழு ப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1.50 கோடி முழுமையாக எட்டப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்திட வேண்டும். காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுகு்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) கலைமாமணி, கதர் ஆய்வாளர் ஜெயகுமார், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், அமைச்சருமான சாத் தூர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமி ழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையும், விருதுநகரின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான தங்க பாண்டியனின் 26-வது நினைவு தினம் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி மல்லாங் கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்றைய தினம் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டமன்ற உறுப் பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு செயற்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியே மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    மதுரை

    தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆனையூரில் உள்ள மன்னர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

    இந்த விழாவில் தமிழர் தேசம் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் சிங்ககண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி துனை செயலாளர் ஆதிமுருகன், மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா, ஒன்றிய செயலாளர் பொய்கை தங்கம், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட இணை செயலாளர் அழகுராஜா, மாவட்ட இளைஞரணி சங்கிலி, நத்தம் ஒன்றியம் பூமி, தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் கலந்துகொண்ட கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் பேசும்ேபாது, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத்தான் செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பற்றியோ, பொதுக்குழுவின் தீர்மானங்கள் பற்றியோ சிவில் கோர்ட்டில் நடந்துவரும் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் தீர்ப்பு வழஙகியுள்ளது. இவ்வளவு நாள் மலர்பாதையில் நடந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் இனி சிங்கப்பாதையில் செல்வார் என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி துணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாலர் மாத்தூர் பாண்டி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், அம்மா பேரவை ரவி, நகர துணை செயலாளர் கணேசன், நகர பொருளாளர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு சகுபர் ஜாவித், சேக், மாவட்ட ஐ.டி. விங்க் இணை செயலாளர் கார்த்தீஸ்வரன், மகளிரணி காளீஸ்வரி, ரேவதி, ராமாமிர்தம், மாலதி, பத்மா, தேவி உமையாள், இளைஞரணி பாலமுருகன், பாசறை கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    அ.தி.மு.க வினர் நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.

     காரைக்குடி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக், கலா காசிநாதன், கார்த்திகேயன், அவைத் தலைவர் சன் சுப்பையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை ஊரவயல் ராமு, இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திராதேவி, விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம்,சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, அரியக்குடி கிளை செயலாளர்ஆறுமுகம், காரைக்குடி துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், பேரவை ரவி, மஞ்சுநாத், அபி மன்யு, சரவணன், இளைஞரணி ஆறுமுகம், சுல்தான்,மாணவரணி வெங்கடேஷ்,அழகேசன்,லெட்சுமணன்,சிறுபான்மை பிரிவு சகுபர்,ஜாவித்,மகளிரணி ராமாமிர்தம், காளீஸ்வரி, ரேவதி, மாலதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முத்துபாரதி, சிறுபான்மை பிரிவு பொருளாளர் மாலிக்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    • 106- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    கோவை,

    கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி அ.தி.மு.க .வினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்ஜூணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி அலுவகத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து அலங்க ரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலு ச்சாமி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.ஆர். ஜெயராம், அவைத்தலைவர் சிங்கை முத்து, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் லாலிரோடு ராதா, ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன், ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார், காந்திபுரம் பகுதி செயலாளர் ராஜ்குமார், இலக்கிய அணி செயலாளர் புரட்சித்தம்பி, சிங்கை பாலன் ,பார்த்திபன் , எஸ்.ஆர்.ரவி, உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கையில் வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 226-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. நகர் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரை ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    அவரது தலைமையில் தி.மு.க.வினர் வேலு நாச்சியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சி லர்கள் கார்த்திகேயன், ராமதாஸ், விஜயக்குமார், சரவணன், ராஜபாண்டி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அவரது வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருணாகரன் அருள்ஸ்டிபன், கோபி, சிவாஜி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர்ரா மநாதன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சதிஷ்.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    • நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மதுரையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணியினர் 3 ஆயிரம் பேர் மாவட்டச்செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேரணியாக சென்று மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பி.எஸ். கண்ணன், முத்து இருளாண்டி, மாண வரணி மாநில இணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், சோலை இளவரசன், ராமநாதன், வையதுரைமாரி,மார்க்கெட் ராமமூர்த்தி, வேல்முருகன், ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செய்யப்பட்டது.
    • ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் மெக்கானிக் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை இருந்தது. இது தமிழக அளவில் நடைபெறும் ஜல்லிக் கட்டு பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளது. இந்த காளை நேற்று திடீரென்று இறந்தது. ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள், ரசிகர்கள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சி யைப் போல கருதி அந்த காளைக்கு துண்டு, வேட்டி, மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக ஜல்லிக்கட்டு தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி. ராஜசேகரன் உள்ளிட்ட பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    • சிவகங்கையில் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சட்டமேதை அம்பேத்கரின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன், கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ், விஜயகுமார், கார்த்திகேயன், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஸ்டீபன், கோபி, அவைத்தலைவர் பாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ணாகுமார், ராபர்ட், நிர்வாகிகள் மோகன், கே.பி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், தங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, கணேசன் ஆரோக்கியசாமி, ரமேஷ் உட்பட்ட பலர்மாலை அணிவித்தனர்.

    கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நகரபொது செயலாளர் பாலமுருகன், சதிஷ், பொருளாளர் கவுதம் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.
    • தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    தஞ்சாவூர்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம்எலிசபெத் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று நாடு முழுவதும் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    தஞ்சை கலெக்டர் அலுவல கத்தில் தேசிய க்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள 100 அடி உயர கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    தஞ்சை மாநகராட்சி அலுவல கத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசி யக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    மாவட்டத்தில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. 

    ×