search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan"

    • அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள திருநாட்டியத்தான்குடியில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • யோக நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் பகுதியில் ஸ்ரீ யோகநரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த இந்த கோவிலில்.

    இன்று புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிங்கப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

    • கற்பக விநாயகருக்கு 18 படி பச்சரிசி கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலையில் தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று காலை கற்பக விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மதியம் மூலவருக்கு கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்காக கோவில் மடப்பள்ளியில் 18 படி பச்சரிசியை கொண்டு பிரமாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத கடை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே உள்ள குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    இதேபோல், இக்கோ விலில் பங்குனி மாதம் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் போது விரதமிருந்த பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

    நோயிலிருந்து குணமடைந்தவா்களை நெற்றியில் திருநீறு பூசி பச்சை பாடையில் படுக்க வைத்து உறவினா்கள் 4 போ் சுமந்து வந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்து கொடிமரத்தின் முன்பாக பாடைக்காவடி இறக்கி வைப்பர்.

    பின்னர், பூசாரி பாடையில் படுத்திருப்ப வருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வாா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு அா்ச்சனை செய்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

    மேலும், ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்கஅலகுக் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு அலகுக்காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் வழிபடுவர். அன்று நடைபெறும் செடில் சுற்றும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.

    • அமாவாசை தோறும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மூலை அனுமார் கோவில் பிரசித்தி பெற்றது.

    ஒவ்வொரு அமாவாசை தோறும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் பல்வேறு முக்கிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

    அந்த வகையில் நேற்று ஆவணி அமாவாசையை முன்னிட்டு மூலை அனுமாருக்கு காய்கறி களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தனர்.

    • திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு.
    • சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பமரியாதை அளித்து வரவேற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இக்கோயிலில் அமைந்துள்ள மலை மீது தோனியப்பர் உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்ற ஸ்தலம் ஆகும்.

    பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே .பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர்.

    கோயில் நிர்வாகம் சார்பில் குமர கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டை நாதர் சுவாமி, பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அம்மன், மலை மீது அருள்பாளிக்கும் சட்டைநாதர் சுவாமி ,தோணியப்பர் ஆகிய சுவாமி சந்நிதிகளில் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி படங்கள் மற்றும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. திருச்சி மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம், திமுக பிரமுகர்கள் நம்பி, வழக்குரைஞர் இராம.சேயோன், மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வள்ளிமுத்து மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் சுவாமி கோவி லில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

    பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலு வேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில்,

    புஷ்பவனம் சுகந்தனே ஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞா யநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    • 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த ஆவராணி கிராமத்தில் பழமை வாய்ந்த அலங்காரவள்ளி சமேத அனந்தபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 8ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது.

    பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று மகா பூர்ணாஹூதி நடை பெற்றது.

    தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது.

    பட்டாச்சாரி யார்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமா ளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்க ப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • விக்னேஸ்வர பூஜை, சிறப்பு யாகங்கள், வளர்க்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வடக்கு பூசாரி தெரு நெல்லியடிக்கொல்லை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத சுப்பிரம ணிய சுவாமி, ஸ்ரீவளவன்ட அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக மங்கல இசை, மகா கணபதி ஹோமம், கணபதி பூஜை புண்ணிய ஹவசனம், பஞ்சகாவியம், லட்சுமி ஹோமம், சுமங்கலி பூஜை, கோமாதா பூஜை, விக்னேஸ்வர, பூஜை, சிறப்பு யாகங்கள், வளர்க்கப்பட்டு சிறப்பாக கும்பாபிஷேக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் பக்த கோடிகள், ஆன்மீக அன்பர்கள், சிவனடி யார்கள், அரசு அதிகாரிகள், ஏராளமான கலந்து கொண்டனர்.

    மேலும் கும்பாபிஷே கத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக மரக்கன்றுகள் வழங்க ப்பட்டது. மேலும் சிவனடியார்கள், ஆன்மீக அன்பர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாக சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை காரியாவிடுதி வடக்கு பூசாரி தெரு நெல்லிய டிக்கொல்லை கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    • கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி- வேதை சாலை தச்சன்கு ளத்தில் உள்ள சுவேதவிநா யகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் பாரதிதாசன் பாரதியார் தெருமக்கள், மகேஸ்வரன், ராமு ஐயப்பன் செந்தில், கோவில் நிர்வாகிகள், கருணாநிதி ஓம் சக்தி கண்ணன், செயல் அலுவலர் முருகையன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் குருபரிகார தலமாக விளங்கும் ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம்.

    வேறெங்கும் இல்லாதவாறு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

    ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயில் 19 ஆண்டுகளு க்குப்பிறகு புனரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம்தேதி தொடங்கி 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தருமபுர ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கையிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கோவில் தலைமை குருக்கள் பாலச்சந்திர தலைமையில் வேதா விற்பனர்கள் 8ம் கால யாகசாலை பூஜையில் ஹோமங்கள், மகா பூரணாகுதி மகாதீபாரதனை செய்யப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தது.

    மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமானத்தில் உள்ள கோபுரத்தை வந்து அடைந்தது.

    சுவாமி கருவறைக்கு மேல் தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், மேதா தட்சிணாமூர்த்தி தங்க கலசம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் மந்திரங்கள் ஓத புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷே கத்தில் மதுரை ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, துழாவூர் ஆதீன மடாதிபதி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×