search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan"

    • பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் மலையடி வாரத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மஞ்சள் இடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மஞ்சள் இடிப்பு திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகா காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் அக்னி தீர்த குளக்கரையில் கரகம் ஜோடிக்கப்பட்டு உடுக்கை அடித்து காளியம்மனை அழைத்து சென்று மல்லாக்காக படுக்க வைத்து மார்பின்மீது உறல் வைத்து அதில் மஞ்சளை கொட்டி மயிலம்குரு மகா சன்னிதானம் குமாரசிவ விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மஞ்சளை இடித்து இடிக்கப்பட்ட மஞ்சளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.

    பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று வீடு மற்றும் வியாபார தலங்களில் கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் என்பதால் அந்த கோவில் அருகில் பக்தர்கள் முண்டி மோதிக் கொண்டு அந்த மஞ்சளை எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம்20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குமாரசிவ விஸ்வநாதன் முன்னிலையில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • கடந்த 4-ந் தேதி தொட்டில் சேவை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கோவிலூர் நெல்லிதோப்பில் காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கோவில்களில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    கடந்த 4-ம் தேதி தொட்டில் சேவை நடை பெற்றது.

    நேற்று காத்தாயி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று மாலை 4 மணி அளவில் மாரியம்மன் கோவில் சன்னதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து காத்தாயி அம்மன் கோவி லுக்கு வருகின்றனர்.

    11-ம் தேதி நவதுர்க்கா ஹோமம் நடைபெறும்.

    13-ம் தேதி முனீஸ்வரர் சிறப்பு பூஜை, 14-ம் தேதி ஆடிக்கழிவு பெருவிழா, 15-ம் தேதி முனீஸ்வரர் படையல் பூஜை, 16-ம் தேதி விடையாற்றி விழா, சாந்தி ஹோமம் நடைபெறும்.

    விழாவுக்கான ஏற்பாடு களை காத்தாயி அடிமை சுவாமிநாத முனைய திரியர் தலைமையில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.

    • தஞ்சை வடக்கு வீதியில் ராஜகோபால சாமி கோவில் உள்ளது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதன்படி நேற்று ஆடி இரண்டாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு பகுளாமுகி காளியம்மனுக்கு அன்னப்பூரணி அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்கள்.

    • பெண்கள் குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர்.
    • திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன், கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெண்கள் வரிசையாக அமர்ந்து குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.

    • இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுர ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் சார்பில் இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் கருண வாய்வரனி ஆதீனம் இளையவர் சபேசன், கோவில் நிர்வாக அலு வலர் அறிவழகன், தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின், அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் தெற்கு வீதியில் புதிதாக தருமபுர ஆதீன கட்டளை மடம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சென்ற மாதம் ஜூன் 6 தேதி நடைபெற்ற நிலையில் 49 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று.

    இன்று 48வது நாள் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இதில் அதிராம்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள மகிழங்கோட்டை, ஏரிப்புறக்கரை, இராஜமடம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • இதனால் அம்மன் கோவில்கள் திரு விழா கோலமாக காட்சியளித்தன.



    தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பெண்கள்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டாட ப்படுவது வழக்கம். பக்தர்க ளுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும்.

    அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இன்று ஆடி 2-வது வெள்ளிக்கிக்கிழமையை யொட்டி மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு பூஜை கள் தீபாராதனை நடந்தது.

    மேலும் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில், அழகர்கோவில், நூபுர கங்கை, ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜெகனை மாரியம்மன் கோவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் திரளான பெண்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

    தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதனால் அம்மன் கோவில்கள் திரு விழா கோலமாக காட்சி யளித்தன.

    • சக்கரத்தாழ்வாரை தரிசித்தால் சனி தோஷம் நீங்கி சங்கடங்கள் விலகி தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் சித்திரை நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வாரை தரிசித்தால் சனி தோஷம் நீங்கி சங்கடங்கள் விலகி தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதன்படி ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மறைமலை நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.

    ஆடித்திரு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    வெளிப்பாளையம் ஏழைப்பி ள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு மறைமலைநகர் கருமாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்தனர்.

    பூச்சொரிதல் விழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    • அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்நிலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று கிழக்கு நோக்கிய அபூர்வமான துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

    உற்சவர் அம்மனுக்கு சிறப்பு வளையல்களான அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    இங்கு புகழ்பெற்ற பகுளாமுகி காளியம்மன் மற்றும் தஞ்சாவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன், சிவ துர்க்கை அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

    ஆண்டு தோறும் ஆடி மற்றும் தை, அனைத்து வெள்ளி கிழமைகளில் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    இன்று ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு பகுளாமுகி காளியம்மன், விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இவ்வழி ப்பா ட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணை யர் கவிதா, கோவில் செ யல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
    • அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கும் மற்றும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும், கோயில் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.

    ×