என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Determination"
- பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
- மதுக்கூரில் தெரு நாய்கள், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
மதுக்கூர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம்,மதுக்கூர் கிளையின் சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மதுக்கூர் கிளை பொறுப்பாளர் சேக்தாவுது தலைமையில் நடைபெற்றது.
மாவட்டதலைவர் ராஜிக்முகமது, மாவட்டச் செயலாளர் ஹாஜாஜி யாவுதீன், துணைத்தலைவர் வல்லம் ஜாபர், மாவட்ட பொருளாளர் அப்துல் அமீது, மாவட்ட துணைச் செயலாளர்கள் வல்லம் அப்துல்லா,அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளை நிர்வாகிகள்ஆசிப் அலி, சலீம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில், மாநில பொதுச்செயலாளர் அப்துல்கரீம், மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் , பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதுக்கூரில் தெரு நாய்கள், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் கிளை பொறுப்பாளர் ஆசிப் அலி நன்றி கூறினார்.
- தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
தஞ்சாவூர்:
படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியைக் கல்வித் தகுதியாகப் பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வாரக் கால, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் (அ) தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் (மானியம் ரூ.503.00 லட்சம்) என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500 லட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (மகளிர் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்த ப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்குத் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.75 லட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் மானியம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்படும். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும், தொலை பேசி எண் - 04362 257345, 255318. எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
- ரூ. 2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது.
- கூட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை.
கும்பகோணம்:
கும்பகோணம் மாந கராட்சி கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
குடிநீர் கட்டணத்துக்கு 2 முறை பில்போடப்படுவது ஏன் ?, மாநகரின் பைராகி தோப்பில் உள்ள குளத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது.
மழைக்காலத்தில் குளத்தில் இருந்து மெயின் ரோட்டை கடந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது.
இதைப்போல ரூ.2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது. ரூ.2 ஆயிரம் கூடசெலவு செய்ய மாநகராட்சியில் நிதி இல்லையா.
புதிய பஸ் நிலையத்தில் இருந்த 3 கழிவறைகளில் தற்போது 2 கழிவறைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கழிவறைகளை திறந்துவிட வேண்டும் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மாநகராட்சி அவசரக்கூ ட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. இந்த தீர்மானங்களுக்கு மறுப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கொசுவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது வீடுதோறும் கொசு வலைகள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.
மாநகராட்சியில் போதிய வரிவசூல் கிடைத்து விட்டதால் கவுன்சிலர்களின் குறைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.
கூட்டத்தில் என்ஜினீயர் லலிதா, நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் மாநகரட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
- முதியோர் உதவி தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும்.
- 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட 20-வது மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மண்ணை சாலையில் அமைந்துள்ள சீனிவாசராவ் நினைவிடத்திலிருந்து சுடர் ஒளி ஏற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றி மாநாட்டை தொடங்கினர்.
மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயத் தொழிலாளிக்கு தனித்துறையை உருவாக்கிட வேண்டும், முதியோர் உதவித் தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் மாநில பொதுச் செயலாளர், சங்கர் மாநில பொருளாளர், குமாரராஜா மாவட்ட செயலாளர், கந்தசாமி மாவட்ட துணைத்தலைவர், பாலைய்யா மாவட்ட பொருளாளர், லிங்கம் மாவட்ட துணை செயலாளர், மணியன் மாவட்ட துணை செயலாளர், மாரியம்மாள் மாநிலக்குழு, மணி மாவட்டத் துணைத் தலைவர், ரவி ஒன்றிய செயலாளர், சுப்பிரமணியன் நகர செயலாளர், ஜீவானந்தம் ஒன்றிய தலைவர், கார்த்தி நகர தலைவர், மாநில மாவட்ட நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- நகர்மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
- நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகராட்சி அலுவலர்கள், மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகசந்தர், அலுவலர் கனகதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரீஸ்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.
இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது.
அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
ஆனால் தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரம் மூலம் சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது பங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதற்கான நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீர்மானம் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் ஆலோசகர் பிலிப் எடின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாவுடன் நேற்று டெலிபோனில் ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். #JammuKashmir #CRPF #PulwamaAttack
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரி ராகவன், மகேஷ் ஆகியோர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம், மீளாவிட்டான் உள்ளிட்ட கிராமங்களிலும், சுற்றுப்பகுதியிலும் சில வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. தெருக்களிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டன. தூத்துக்குடி பாத்திமாநகரில் அப்பகுதியினர் சிலர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற சென்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. பின்பு பொதுமக்கள் சாலை ஓரம் கருப்புக்கொடியுடன் நின்று கோஷம் எழுப்பினர். இதனிடையே தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வருகிற 21-ந்தேதி மக்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர்.
அதில் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்து உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தூத்துக்குடி டபிள்யூ.சி.சி. ரோட்டில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் அருகே அக்கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், துணைச்செயலாளர் செல்வக்குமார், எட்வின் பாண்டியன், கோட்டாள முத்து, தொழிற்சங்க துணைத் தலைவர் சண்முக குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சென்னியங்கிரி, செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தனிஅலுவலர் இல்லை என்று எந்த பணியும் செய்ய மறுக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தனிஅலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் பயிரிட ஜீன் மாத இறுதிக்குள் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் கால்வாய்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உழவு எந்திரங்கள் போன்ற விவசாய கருவிகள் வழங்கவேண்டும்.
பொதுமக்களின் சேமிப்பு கணக்கின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்