search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development plan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.

    பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.

    இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ., பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி பால்பண்ணைச் சேரியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23 நிதியின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், நகரச் செயாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
    • எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

    மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

    பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

    இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

    • சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லிக்குடி ஊராட்சியில் பலியபுரம் பகுதி, மேல தெருவில் பிளெவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், கன்னூர் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தடுப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும், கல்லிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்காக கட்டப்ப ட்டுவரும் கழிவறை மற்றும் நியாயவிலைக்கடை கட்டடத்தினையும், ஓடாச்சேரி ஊராட்சியில் மங்களநா யகிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், மங்களநாயகிபுரம் நூலகத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளையும், கட்டப்பட்டுவரும் நியாயவி லைக்கடையினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓடாச்சேரி சமத்துவபுரத்திலு பெரியார் சிலை சீரமைப்பு பணி, நுழைவாயில், சமத்துவபுரம் குடிநீர் குழாய் விரிவாக்கம் பணிகள் மற்றும் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவ தையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆமுர், திருவாதி ரைமங்கலம், சோழங்கநல்லூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர பகுதியின் விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியுள்ளன.

    இந்த விரிவாக்க பகுதியில் வளர்ச்சியை கொண்டு வர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது.

    இந்த பகுதிகளில் அனைத்து துறை வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு சாலைகள், பாலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.32 கோடி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.25 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ. 8 கோடி என நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் செங்கல்பட்டு புதுநகர் வளர்ச்சிக்கான பகுதியானது 136.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட 60 கிராமங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முடிச்சூர் கிராமத்தின் அமுதம் நகர், நேமி நத்தம் நகர் மற்றும் வரதராஜ பெருமாள் நகர் பகுதிகளுக்கு மழை நீர் வடிகால் அமைக்க ரூ.4.20 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டமும் இப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கை கோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது .

    இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான மேம்பாட்டுத் திட்டமும், என்.எச்-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக் குப்பம், திம்மசமுத்தி ரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    • மல்லாங்கிணர்-அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மல்லாங்கிணர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.82.30 லட்சம் மதிப்பில் சின்னக் குளம் ஊரணி மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148 லட்சம் மதிப்பில் திம்மன் பட்டி சாலை பொது மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளையும், வளமீட்பு பூங்காவில் 15-வது நிதிக்குழு மான்யத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வளமீட்பு பூங்கா வில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் ரூ.23.30 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும், முடியனூர் காலனியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர், மல்லாங் கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சீட்ஸ் நிறுவ னத்தினுடைய கொள்முதல் கிட்டங்கி விவசாயி களுடைய விளைபொருட்களை தரம் பிரித்தல், மதிப்பு கூட்டல், விற்பனை செய்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

    அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்பட்டு வரும் அரவை முகவை விஸ்வேஸ்வரா அரிசி அரவை ஆலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து உற்பத்தி முறைகள், தரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து கோபாலபுரம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவ முறைகள், மருந்து இருப்பு, நோயாளிகள் குறித் தும் அவர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் விஜயகுமார், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழ கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×