search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disappeared"

    • சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.

    இதே போல பெரிய கிணறு பகுதியை சேர்ந்த செந்தமிழ் குமரன். இவரது மகன் மயிலேஷ் (8). இவரும் அதே பள்ளியில் தங்கி 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 3 பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.
    • ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளைய த்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உள்பட 5 கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம் வனப்பகுதி வழக்கு, கோபி செட்டிபாளையம், பங்களா புதூர் போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதை யடுத்து அந்த பெட்டகம் கோபிசெட்டிபாளையம் கருவூலத்தில் பாது காப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோர்ட்டு ஊழியர் மற்றும் பங்களா புதூர் போலீசார் வழக்கு விசாரணைக்காக முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தொடர்புடைய பெட்டகத்தை கோபிசெட்டி பாளையம் கருவூலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தனர்.

    இதை தொடர்ந்து அந்த பெட்டியை நீதிபதி தனது அறையில் வைத்து திறக்க முயன்றார். அப்போது பெட்டியின் பூட்டின் மேல் வைக்கப்பட்டு இருந்த அரக்கு சீல் உடைக்கப்படா மல் அப்படியே இருந்தது. ஆனால் பெட்டியின் பூட்டு மாட்டி இருந்த கொண்டியில் இருந்து ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பெட்டியை திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் கடம்பூர் போலீசாரால் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்த 48 கிராம் எடை கொண்ட 2 தங்க ஆரம், சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் பங்களா புதூர், கோபிசெட்டிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 3 ஆயிரத்து 255 பணம் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இத னால் பரபரப்பு நிலவியது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா 22-ந்தேதி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்தவர் பரசுராமன், அவரது மனைவி மேகலா மற்றும் உறவினர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் பரசுராமன், அவரது மனைவி மேகலா உள்பட 5 பேரையும் ஜிம் மோகன் தரப்பினர் அரிவாளால் வெட்டினார். இதில் பரசுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாமல்பட்டி போலீசார் 19 பேர் மீது வழக்குபதிவு செய்து ஜிம் மோகன் (37), வெற்றிவேல் (25), வேடியப்பன் (45) உள்பட 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக தலைமறைவான வரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 

    ஓசூரில் பதுங்கி இருந்த சித்திரைபாண்டியன் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் சிறையில் அடைத்தனர்.
    தகராறில் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு ஜாமீனில் வந்து தலைமறைவான பெண் 5 ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கேரளா மாநிலம் எர்ணாக்குளம் அடுத்த களம்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 45). இவர் முதல் கணவனை விட்டு விட்டு அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே திருமணமான கார்த்திகேயன்(51) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான்குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில், கள்ளக்காதலி மணிமேகலையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டார். 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி ஏற்பட்ட மோதலின் போது மணிமேகலை, கத்தியால் குத்தி கள்ளக்காதலன் கார்த்திகேயனை கொலை செய்தார்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து மணிமேகலையை கைது செய்தனர். 2013-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த மணிமேகலை, தலைமறைவாகி விட்டார். அவர் கேரளா சென்று தனது முதல் கணவருடன் வசித்து வந்தது தெரிந்தது. இதற்கிடையே மணிமேகலையை கைது செய்ய திருவள்ளூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் பரிபூரணம் சப்-இன்ஸ் பெக்டர்கள் சபாபதி, சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கேரளா சென்று கடந்த 5 வருடங்களாக தலை மறைவாக இருந்து வந்த மணிமேகலையை கைது செய்தனர். பின்னர் அவரை கும்மிடிப் பூண்டிக்கு அழைத்து வந்தனர்.

    ×