search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry case"

    • 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி மனைவியை கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.
    • புகாரின்பேரில் மாற்றுத்திறனாளி கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அங்குச்சாமி மகன் மதன்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த மாணிக்கம் மகள் சசிகலா (30) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு பிப்.2ம் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி சசிகலாவை கணவர் மதன்குமார் மற்றும் மாமியார் அன்னகாமு ஆகியோர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் லதா வரதட்சணை கொடுமைப்படுத்திய மதன்குமார் மற்றும் அன்னகாமு ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். மதன்குமாரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • கணவருடைய சகோதரர் அடிக்கடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • புகாரின்பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்ெதாழு வெம்பூர் மேற்குதெருவை சேர்ந்த மணீஸ்வரன் மனைவி மேகலா(34). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் வாய்பேச இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கணவர் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு மேகலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

    வரதட்சணை வாங்கி வராததால் அடித்து உதைத்து குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர் கோவிந்தசாமி அடிக்கடி மேகலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மணீஸ்வரன், அவரது சகோதரர் கோவிந்தசாமி, தந்தை வேலுச்சாமி, தாய் எட்டியம்மாள், உறவினர்கள் மகேஸ்வரி, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது.
    • மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் புகாரின் பேரில் ஆசிரியர் உள்பட அவரது குடும்பத்தினரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டியன். இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் பூச்சக்காடு கருவம்பாளையத்தை சேர்ந்த பிரியா(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் வெள்ளைப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியாவிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும், நகையையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் தன்னிடம் கூடுதலாக நகைகள் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு அடித்து துன்புறுத்தியாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோர்ட்டு உத்தரவுப்படி போடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வெள்ளைப்பாண்டியன் அவரது தந்தை ரவி, தாய் ெபாம்மி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • இழப்பீட்டுத் தொகையை பிரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் நலநிதிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று பிரியதர்ஷினி கூறினார்.

    புதுடெல்லி:

    தமிழக போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்தார்.

    ஐ.பி.எஸ் பணி கிடைத்தவுடன் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

    இதனால் வருண்குமார்-பிரியதர்ஷினி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் வருண்குமார், பிரியதர்ஷினியை மிரட்டியும், இருவருக்குமிடையே நடையெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்தாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டின் உத்தரவுப்படி வருண்குமார் மீதும், அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருண்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 26.06.2018-ம் ஆண்டு வருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் . இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் வருண்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தரப்பில், மனுதாரர் பிரியதர்ஷினியின் வக்கீல் விகஸ் சிங்கை அணுகினர்.

    இந்த விவகாரத்தில் 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வருண்குமார் ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து சமரச விவகாரத்தை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் இழப்பீட்டுத் தொகையை பிரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்தார். மேலும் அதனை சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் நலநிதிக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு ரூ. 11 லட்சத்தை வழக்கறிஞர் நலநிதிக்கு 10 நாட்களுக்குள் வருண்குமார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    மேலும் இந்த விவகாரத்தில் வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை தடுப்பு சட்ட வழக்கு, ஐ.டி. சட்டம் 66ன் படியும், ஐ.பி.சி 204ன் கீழ் பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த வழக்கின் சாட்சிகளை எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்றும், இரு தரப்பும் எவ்வித பரஸ்பரம் இடையூறுகளை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

    • திருமணத்தி ன்போது 100 பவுன் நகை, கார், ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டது.
    • மேலும் ரூ.20லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொடுத்தால்தான் சேர்ந்துவாழ முடியும் என பெண்ணை கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள தாமரைநகரை சேர்ந்தவர் வினோதினி(31). இவருக்கும் மோகன்பிரகாஷ்(40) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தி ன்போது 100 பவுன் நகை, கார், ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டது.

    திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டார் வழங்கிய 100 பவுன் நகை உண்மை தானா என்று சரிபார்த்து தருவதாக வாங்கிய மாமனார் ஜெயராமன், மாமியார் முருகேஸ்வரி ஆகியோர் திருப்பித்தராமல் தங்களிடமே வைத்து க்கொண்டனர். மோகன்பிர காஷ் சிறிது காலம் தனது மனைவியுடன் சென்னை யில்குடியிருந்து வந்தார்.

    இவர்களுக்கு தியாமினு என்ற ஒரு பெண்குழந்தை உள்ளது. சில வருடங்கள் கழித்து மோகன்பிரகாஷ் நெதர்லாந்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வினோ தினி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பின்னர் மீண்டும் பெரியகுளத்தில் தங்கியி ருந்தனர்.

    அப்போது ரூ.20லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொடுத்தால்தான் சேர்ந்துவாழ முடியும் என வினோதினியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர், அவரது தாயார், தந்தை ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • பள்ளிஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் விஜி(27). இவருக்கும் நெல்சன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நெல்சன் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு விஜியை நெல்சன் அவரது தாயார் சபரிஆரோக்கிய செல்வி, தந்தை அறிவழகன் ஆகியோர் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் விஜி புகார் அளித்தார். அதன்பேரில் 3பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இதில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தது உறுதிசெய்யப்பட்டது. அதனைதொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நெல்சன் மற்றும் சபரிஆரோக்கியமேரி ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அறிவழகனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.4ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் வழக்கு தொடந்தார்.
    • 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கார்த்திகை ராணி(30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீரிவரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் வாங்கி வரச்சொல்லி கணவர் ரவிச்சந்திரன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து கார்த்திகைராணி நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குதொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ரவிச்சந்திரன், பேபி, காமாட்சி, அழகுமலை, மலர்கொடி ஆகிய 5 பேர்மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார்.
    • இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார்

    ஊட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் பாலாஜி (வயது 29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும் திண்டுக்கல் சீலப்பாடி, என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி முத்துபாண்டீஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    முத்துபாண்டீஸ்வரி தற்கொலை செய்தது பற்றி அறிந்த அவரது பெற்றோர் ஊட்டிக்கு வந்தனர். தங்கள் மகள் முத்துபாண்டீஸ்வரியை கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் வினீத் பாலாஜி மற்றும் பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகியோர் சித்ரவதை செய்து வந்தனர். வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார். எனவே வினீத் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    அதன்பேரில் வினீத் பாலாஜி, பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகிய 3 பேர் மீது கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே முத்துபாண்டீஸ்வரி திருமணமாகி ஒரு வருடத்துக்குள் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    கூடலூரில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவருக்கும் அபிநயா (வயது22) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 57 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    தற்போது பிரதீப் குமாருக்கு நிரந்தர வேலை கிடைத்துள்ளது. இதனால் மேலும் 20 பவுன் தங்க நகை அவரது தாய் வீட்டில் இருந்து வாங்கி வருமாறு பிரதீப் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அபிநயாவை மிரட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் பிரதீப்குமார் மற்றும் அவரது தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×