என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drunken dispute"
- குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.
- வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெப்பக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கருப்பசாமி. கிருஷ்ணா சாமிக்கு மதுப்பழக்கம் இருந்தது அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் கிருஷ்ண சாமி தகராறு செய்தார் அப்போது அங்கு வந்த கருப்பசாமி தந்தையை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கருப்பசாமி இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை கிருஷ்ண சாமியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அங்கி ருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு காயல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணசாமி இறந்தார்.
இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகனே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் சுதர்சன் (வயது 28). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் குடிபோதையில் கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ரத்தினபுரி போலீசார் சுதர்சன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு ஜே.எம். கோர்ட்டு-2 நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீசாருடன் தகராறு செய்த வாலிபர் சுதர்சனுக்கு நூதன தண்டனை வழங்கினார். எந்த இடத்தில் தகராறு செய்தாரோ அதே இடத்தில் 10 நாட்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து சுதர்சன் ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இன்று 2-வது நாளாக போக்குவரத்தை சரி செய்தார்.
மதுரை:
மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்திரன் (வயது34) இவரது மனைவி அன்னப்பாண்டி, கணவன்-மனைவி இருவரும் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மூவேந்திரன் தினமும் மது குடித்து விட்டு சென்று மனைவி அன்னபாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த மூவேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்