என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electronic"
- சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
- எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.
சேலம்:
சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.
இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.
- மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைத்தனர்.
- அங்கு போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடந்தது.
இரவு 9.15 மணிக்கு இறுதி சுற்று அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவ னுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை வழங்கினார்.
இதற்கிடையில் அவ்வப்போது எண்ணி முடிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டு ப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை பாதுகாப்பு அறையில் கொண்டு சென்று அதற்கான இடத்தில் வைத்தனர்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் அந்த அறையில் தேர்தல் தொடர்பான எந்த பொருட்களும் இல்லாமல் அகற்றினர்.
பின்னர் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தனர்.
அங்கு ஒரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஓரிரு நாளில் ஓட்டுப்பெட்டிகள் அங்கிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவல கத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிகயில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கபிலர்மலை அட்மா தலைவரும், ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய கழக செயலாளருமான சண்முகம், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவக்குமார், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும்.
- 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கான கால அளவு 20-5-2022 ன் படி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஆகும். திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் (சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் உட்பட) நாளது தேதி வரை 2508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ளனர். ஆண்டு நேர்காணல் புரிவதற்கான காலக்கெடு முடிவதற்கு குறைவான நாட்களே உள்ளதால் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு, நாளது தேதி வரை ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ள ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்னணு வாழ்நாள் சான்றினை ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக இந்திய தபால் துறை வங்கி, இ-சேவா மற்றும் பொது சேவைமையங்கள் (சேவை கட்டணம் உண்டு) மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென்றும் நேர்காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க அளிக்க வேண்டிய விவரங்கள் : ஆதார் எண், பி.பி.ஓ.,எண், வங்கி கணக்கு எண் மற்றும்செல்போன் ஓ.டி.பி., அளிக்க வேண்டும் என கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.
- பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பயிற்சியில் இணையத்தில் தகவல்களை சேகரிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் டிஜிட்டல் கல்வியறிவு என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒருநாள் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக்கழகம், மாவட்ட திறன் பயிற்சி மையம் மற்றும் தேசிய தகவலியல் மையம் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் பிராங்கிளின் திட்டவிளக்க உரையாற்றினார். திட்ட உதவி அலுவலர் சாமதுரை மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்தார்.
பயிற்சியினை தேசிய தகவலியல் மைய இயக்குனர் ஆறுமுகநயினார், மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு திட்ட தேசிய உறுப்பினர் வரதராஜ் ஆகியோர் நடத்தினர்.
பயிற்சியில் இணையத்தில் தகவல்களை சேகரிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
சிவகங்கை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் (பகிர்மானம்) தலைமையில் காரைக்குடி கோட்டத்தில் நடைபெறுவதால் அக்கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்