search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Prize"

    • சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
    • தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

    முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.

    போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    • சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தில் மின்னொளி கபடி போட்டி கள் 2 நாள் நடைபெற்றது.
    • போட்டியை சாத்தான் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தில் தி.மு.க. கிளை கழகம், மாவட்ட தி.மு.க. சிறுப்பான்மை பிரிவு இணைந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு 2-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி கள் 2 நாள் நடைபெற்றது.

    இதில் புளியங்குளம், பேய்க்குளம், நாசரேத், சாத்தான்குளம், நெல்லை காவல்துறை அணி உள்ளிட்ட 36 அணிகள் கலந்து கொண்டன.

    போட்டியை சாத்தான் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் புளியங் குளம் சுந்தரி கிளப் அணி யும், கருவேலம்பாடு அணி யும் மோதின. இதில் புளியங் குளம் அணி வென்று முதல் பரிசை தட்டிச்சென்றது. 2-ம் பரிசு கருவேலம்பாடு அணிக்கும், 3-ம் பரிசு நெல்லை காவல்துறை அணிக்கும், 4-ம் பரிசு செம்பூர் அணிக்கும் கிடைத்தது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட தி.மு.க. சிறுப்பான்மை பிரிவு துணை செயலர் திருநாவுக் கரசு தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் பிரிவு மாவட்ட துணை செயலர் மோகன் முன்னிலை வகித்தார். முதல் இடத்தை பரிசு பெற்ற புளியங்குளம் அணியினருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய முதல் பரிசு ரூ. 20,070-ஐ ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், பேய்க்குளம் டாக்டர் ரமேஷ் பிரபு ஆகியோர் வழங்கினர்.

    வெற்றி கோப்பையை ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான எஸ். பார்த்திபன் வழங்கினார். 2-ம் பரிசு பெற்ற கருவேலம் பாடு அணிக்கு ரூ.15,070-ஐ ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழு தலைவர் ஜனகர் வழங்கினார்.

    3-ம் பரிசு பெற்ற நெல்லை காவல்துறை அணிக்கு ரூ.7070-ஐ, விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஆறுமுகநயினார் வழங்கினார். 4-ம் பரிசு பெற்ற செம்பூர் அணிக்கு ரூ.5070-ஐ சாலைபாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் வழங்கினார்.

    இதில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஆழ்வார்திருநகரி வட்டார செயலர் சேகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • உடற்கல்வியியல் கல்லூரிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் இறுதிப்போட்டி கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியின் முதல் பரிசை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியும், 2-ம் பரிசை செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் செந்தில்குமரன் வெற்றிக்கான கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் செய்திருந்தார். வெற்றிபெற்ற அணிகளுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

    • கபடி போட்டியில் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளி அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
    • விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர்களுக்கான கபடி போட்டி சி.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில், சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியும்-வன்னிய ம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் வெற்றி பெற்ற காளீஸ்வரி அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

    மம்சாபுரம் சிவந்திபட்டி மேல்நிலைப்பள்ளி அணியும்-வன்னி யம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் அணியும் மோதின. இதில் வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    ×