என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Foot kick"
- 3 பேர் வந்த பைக்கில் கேட்டதால் ஆத்திரம்
- 2 பேர் கைது- ஒருவர் தலைமறைவு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலை முடிந்து உதயகுமார் உமையப்ப நாய்க்கணூர் அருகே நடந்து சென்றார். ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது உதயகுமார் வாலிபர்களின் பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டார்.
அதற்கு வாலிபர்கள் நாங்கள் 3 பேர் பைக்கில் இருக்கிறோம் அதனால் ஏற்ற முடியாது என்று கூறினர். அப்போது 3 வாலிபர்களை உதயகுமார் அவதூறாக பேசியதாகவும், அதற்கு அந்த 3 வாலிபர்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.
இதில் உதயகுமார் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றனர்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மயங்கி கிடந்த உதயகுமாரை மீட்டு வீட்டில் விட்டனர். இதைத் தொடர்ந்து 13-ந் தேதி உதயகுமார் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.
உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதயகுமாரின் சகோதரி உஷா(30) என்பவர் காவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை தாக்கிய உமையப்பா நாய்க்கணூரை சேர்ந்த சிற்றரசு (19), கிருஷ்ணா வரத்தை சேர்ந்த ஞானவேல் (19) ஆகியோரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகேஷ் (20) என்பவரை தேடி வருகின்றனர்.
- போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை வேங்கிக் கால் குபேர நகரை சேர்ந்தவர் அசோக் (வயது 28). நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தில் பெயிண்டர் ஒருவர் அவ ரது 5 வயதுடைய பெண் குழந் தையுடன் வந்து பணியாற்றி கொண்டிருந்தார்.
தந்தையின் கண்காணிப்பில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அப் போது அருகில் இருந்த காலி கட்டிடத்தில் இருந்த சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதைய டுத்து பெயிண்டர் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது சிறுமியிடம் அசோக் தகாத முறையில் ஈடுபட முயன்று உள்ளார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த பெயிண்டர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அசோக்கை சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்தனர்.
அப்போது அசோக் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் அசோக்கை ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.
- மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் கிராமம், ஜே.பி. நகரை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 35). இவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பில் மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மலர்கொடி வீட்டில் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (29) மலர்கொடியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ராஜேஷ், கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளார். 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கார்த்திக் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜேஷை சரமாறியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ராஜேஷ் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை தேடி வருகின்றனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன் னியம்மாள் (வயது 57). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை வீடு திரும் பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.33 ஆயிரத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கன்னியம்மாள் கீழ்க்கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- மாசி மகம் திருவிழா நடந்தது
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அருகே உள்ள ஆத்துரை, கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரை, கிராமத்தில் மாசி மகம் திருவிழா நடந்துள்ளது.
இதற்காக பாண்டியன், பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து திருவிழா நடத்தியுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த சீனு (57). என்பவர் பாண்டியனிடம், திருவிழா வரவு செலவு கணக்குகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், சீனுவை, தாக்கியுள்ளார். காயமடைந்த சீனு, திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து பாண்டியனை, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த புளியமரத்தூர் அருகே உள்ள கட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35). இவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி(40). இவர் நூறு நாள் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தாமோதரன் நூறு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை வருகை பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டார்.
அப்போது, ஜெயலட்சுமி பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த தாமோதரன் உங்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மற்றவங்க லேட்டா வந்தா ஏத்துப்ப நான் லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரின் கணவர் ராஜேந்திரன் சேர்ந்து பணித்தள பொறுப்பாளர் தாமோதரனை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த தாமோதரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
- கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சாய்பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முரளி வயது (35) கூலித்தொழிலாளி.
இவருடைய மனைவி பிரியா. ஆம்பூர் சாய்சக்தி திருமணம் மண்டபம் அருகே உள்ள ஓரு திருமணம் தகவல் மையத்தில் பணிபுரிகிறார்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் பிரியா ஆம்பூர் குண்டாளம்மன் தெருவில் தனியாக தனது தாயார் சாந்தி (50) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பைபாஸ் சாலையில் மாமியார் சாந்தி நடந்து சென்றார்.
அவரை முரளி வழி மடக்கி சரமாரியாக அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த சாந்தி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து புகாாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- குடிபோதையில் விபரீதம்
- 2 பேர் கைது
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பன்னீர்செல்வம் நகர் 3- வது தார்வழி பகுதியை சேர்ந்த குமார் வயது (42) கூலி தொழிலாளி நேற்று மாலை அப்பகுதியில் ஒரு முதியவர் இறந்தார்.
சாவு ஊர்வலத்தில் ஆடல் பாடலுடன் குடிபோதையில் பலர் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது வாய் தகராறு ஏற்பட்டு குமாரை அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகள் கனகராஜ் மகன் சுனில் குமார் (வயது 26) அவருடைய தம்பி அணில் குமார் (22) இருவரும் சேர்ந்து தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இவரின் புகாரின் பேரில் அண்ணன் தம்பிகள் 2 பேரை கைது ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
- போதையில் அட்டூழியம்
- 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூரை அடுத்த பெருமுகை ஆட்டோ நகர் வழியாக நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பாஞ்சாலி, தணிகாசலம் ஆகியோர் அங்கு ஓடி சென்று 4 பேரையும் தூக்கி விட்டு உதவி செய்தனர்.
அதற்கு 4 வாலிபர்களும் எங்களை எப்படி தூக்கி விடலாம் என்று கூறி பாஞ்சாலி, தணிகா சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென 4 பேரும் சேர்ந்து சரமாரியாக அவர்களை தாக்கினர்.
இதில், தணிகாசலத்தின் தலையிலும், பாஞ்சாலியின் கைவிரலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 4 பேரையும் பிடித்து அடித்து உதைத்தனர்.பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 வாலிபர்களும் போதை யில் இருந்ததாகவும், அதனால் தான் உதவி செய்த பெண் உள்பட 2 பேரையும் தாக்கினார்கள்.
விபத்தில் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டவர்கள் மீது இப்படி தாக்கினால் எப்படி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வரும்.அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
குடிபோதையில் தாக்கிய ஒருவர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த மற்ற 3 பேர் யார் என்று தெரியவில்லை.
4 பேரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை விழுந்தது.
- ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.
மதுரை
மதுரை சம்மட்டிபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரிடம் ஒத்தக்கடை, அரசரடி ஜெயச்சந்திரன் (35) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினார். இதனை அவர் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே செல்வம் அவரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அவரிடம் செல்வம் பணத்தை திருப்பி கேட்டார். ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன், அருண் மற்றும் ரஞ்சித் ஆகிேயார் செல்வத்தை அடித்து உதைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தாக்கிய ஜெயச்சந்திரன், அருண், ரஞ்சித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்