என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "glass broken"
- கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.
- அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு ரெட் பஸ் ஒன்று சந்திப்பு பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.
கண்ணாடி உடைப்பு
அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டி ருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடி யை உடைத் தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.
அவர்களை கைது செய்த பின்னரே, மதுபோ தையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும்.
- ஐ.டி ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 25). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று இரவு புத்தாண்டு கொண்டாட தனது சகோதரர் வருண் மற்றும் நண்பர் அதீஸ்வரன் ஆகியோருடன் காரில் ஆர்.எஸ்.புரம் சென்றார்.
அங்கு அவர்கள் காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிலர் விக்ரமிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கல்லால் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர்.
மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விக்ரமை தாக்கினர். தடுக்க முயன்ற வருண் மற்றும் அதீஸ்வரனையும் தாக்கி மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து விக்ரம் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஸ்ரீ பிரமோத் (23) மற்றும் அவரது நண்பர் கோவில்மேடு வ.உ.சி நகரை சேர்ந்த கவுதம் (35) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை என கூறியுள்ளார்.
- நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 42) . இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று குருமூர்த்தி கடையில் இல்லாதபோது, சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை .பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது. இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது இதற்கு ஊழியர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள், கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் உள்ள சுவர் கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி, 3-வது நுழைவு வாயிலில் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. சுமார் 4 அடி நீளம், 7 அடி உயரத்தில் அந்த கண்ணாடி பெயர்ந்து இருந்தது.
அந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடியை விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #ChennaiAirport
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்