search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H1B Visa"

    • எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாட்டினருக்கு சிரமம் இருந்து வருகிறது
    • புது நடைமுறையில் இந்தியர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள்

    அமெரிக்காவில் ஹெச்-1பி (H1B) எனப்படும் விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டியுள்ளது. 2004-ல் இருந்து இது நடைமுறையில் உள்ளது.

    ஹெச்-1பி விசா எனப்படுவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை (இந்தியா உட்பட), பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியாகும். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல.

    எனவே ஒவ்வொரு 3 ஆண்டு-கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை "ஸ்டாம்பிங்" (stamping) செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த "ஸ்டாம்பிங்" பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை.

    இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இந்த பயணங்களினால் பயனாளர்களுக்கு நேர விரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வந்தது.

    இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தனர்.

    அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அதனை குறித்து அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

    எனினும், இத்திட்டம் உடனடியாக நாடு முழுவதும் கொண்டு வரப்படாமல், "பைலட் பிராஜக்ட் முறை" எனப்படும் சிறிய அளவில் முதலில் ஒரு சில பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டதும், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

    அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    • ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

    இதற்கிடையே அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேரும் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (ஒரு சதவீதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர்.

    இதில் ஆரம்ப வேலைக்கான எச்-1பி விசாக்கள் மற்றும் விசா நீட்டிப்புகள் ஆகியவை அடங்கும். ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்றனர். கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள்.

    பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது.

    அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.

    • வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது.
    • எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை  வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்.

    இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

    எனவே இந்த எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எச்1பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

    • ஒபாமா ஆட்சி காலத்தில் எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது.
    • அனுமதியை எதிர்த்து சேவ் ஜாப்ஸ் அமெரிக்க அமைப்பு, மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள். இதற்கிடையே ஒபாமா ஆட்சி காலத்தில், எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை எதிர்த்து சேவ் ஜாப்ஸ் அமெரிக்க அமைப்பு, மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    அந்த அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி தனது உத்தரவில், "சேவ் ஜாப்ஸ் அமைப்பின் முதன்மை வாதமாக எச்1பி விசா வைத்திருப்பவர்கள் போன்ற வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது பணிபுரிய அனுமதிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு பாராளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தது. ஆனால் குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் உரை, வெளிப்படையாக மற்றும் மறைமுகமாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குள் செல்கிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு பாராளுமன்றம் வெளிப்படையாக தெரிந்தே அதிகாரம் அளித்துள்ளது" என்று கூறினார்.

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ள அதிபர் டிரம்ப் தகுதி, திறமையின் அடிப்படையில் 57 சதவீதம் வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.

    இந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுகளுக்கு பதிலாக ‘அமெரிக்காவை கட்டமைக்கும்’ (Build America visa) குடியுரிமைகளை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    தற்போதைய குடியுரிமை சட்டங்கள் மேதாவிகள் மற்றும் புத்திசாலிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. மிகவும் குறைந்த கூலி வாங்குபவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இங்கு அதிகமாக வருகின்றனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

    நாம் உருவாக்க விரும்பும் அமெரிக்காவுக்காக வெளிநாட்டினருக்கு கதவுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், இவர்களில் பெரும்பகுதியினர் தகுதி மற்றும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    இப்படிப்பட்டவர்களுக்கு தற்போது 12 சதவீதமாக வழங்கப்படும் குடியுரிமையை 57 சதவீதமாக உயர்த்தவும் தேவைப்பட்டால் அதற்கு மேல் அதிகரிக்கவும் வேண்டிய மிகப்பெரிய மாற்றத்தை நாம் செய்ய வேண்டியுள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


    இந்தமுறை அமல்படுத்தப்பட்டால் ‘எச்.1பி.’ விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ‘எச்.1பி.’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக ‘கிரீன்கார்டு’ பெறுவதற்காக விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைய உள்ளது.

    டிரம்பின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு டிரம்ப் விளக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இத்திட்டத்துக்கு ஜனநாயக கட்சியினர் ஒப்புக்கொண்டால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பிரச்சனையாக எழுப்பவும் ஆளும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
    அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது. #H1BVisa
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா ஆகும். இந்தியாவில் ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடம் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. குறிப்பாக 70 சதவீதம் ‘எச்-1 பி’ விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கிறது.

    அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணி அமர்த்துவது வழக்கம். குறிப்பாக மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் நிறுவனங்கள் இந்த விசாவின்கீழ்தான் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அமெரிக்க அரசு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது. இது தவிர்த்து அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும். இந்த விசாக்கள் வழங்குவதற்கான பிரிமியம் பிராசசிங் என்று அழைக்கப்படுகிற சிறப்பு பரிசீலனை நடைமுறையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது.

    இந்த நிலையில் மறுபடியும் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் தனது ‘எச்-1 பி’ விசா விண்ணப்பத்தை ‘பிரிமியம் பிராசசிங்’ நடைமுறையை பின்பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டு, உரிய கட்டணத்தை செலுத்திவிட்டால், இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு 15 நாளில் பரிசீலித்து முடிவு எடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். #HIBVisa #DonaldTrump #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உள் நாட்டினருக்கு பணி வழங்குவதில் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவை முன்னுரிமை வழங்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

    அதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிவது கனவாகி போனது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.


    அதில் ‘எச்-1 பி’ விசா வழக்குவதற்கான நடைமுறைகள் விரைவில் மாற்றப்படும். அது மிகவும் எளிமையாக இருக்கும். வெளிநாட்டினர் இங்கேயே தங்கியிருக்கலாம். குடியுரிமையும் பெறலாம்.

    ஆனால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    எனவே ‘எச்-1 பி’ விசாவுக்கான விண்ணப்பம் கடுமையாக ஆராயப்படும். அதன் பிறகே வெளிநாட்டினருக்கு அதற்கான விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின் கடந்த 2 ஆண்டுகளாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பணி நீட்டிப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதன் காரணமாக அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர்களும், புதிதாக பணிக்கு அமெரிக்கா செல்ல தயாராக இருந்த இளைஞர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

    தற்போது டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கிறிஸ்ட்ஜென் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    திறமையான வெளி நாட்டினர் மட்டுமே இங்கு தங்கி வேலை பார்க்க வேண்டும் என எம்.பி.க்கள் விரும்புகின்றனர். எனவே அவர்களுக்கே ‘எச்-1பி’ விசா வழங்கப்படும் என்று கூறினார். #HIBVisa #DonaldTrump #Trump
    எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. #HIBVisa #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசாக்களை அந்த நாடு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது.

    இப்போது இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கிற நிறுவனங்கள், விண்ணப்பங்களை முன்கூட்டியே மின்னணு வடிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி முறை கொண்டு வர உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிக சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே இந்த விசா கிடைப்பதை நோக்கமாகக் கொண்டுதான் டிரம்ப் நிர்வாகம் இந்த மாற்றத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #HIBVisa #DonaldTrump
    அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இந்தியர், ‘எச்1-பி’ விசா மோசடியில் கைது செய்யப்பட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ‘எச்1-பி’ விசா வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

    அதில் முறைகேடு செய்து ஊழியர்களை பணியில் நியமித்ததாக பிரதியும்னா குமார் காமல் (49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    இந்த நிலையில் அவர் சீட்டில் விமானநிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியேறவிடாமல் இவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியரான இவர் அமெரிக்காவில் 2 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘எச்பி-1’ விசா மோசடி மூலம் அமெரிக்காவில் பணிபுரிவதாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ‘எச்-1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து டெல்லியில் 6-ந்தேதி நடக்க உள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தியா பிரச்சினை எழுப்புகிறது. இதற்கு பதில் அளிக்க அமெரிக்கா தயார் ஆகிறது. #H1B #India #US
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.

    2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.

    ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்குவது வழக்கம். இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது. லாட்டரி குலுக்கல் நடத்தித்தான் விசாதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இது தவிர அமெரிக்காவில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள், உயர் கல்வி பெற்றவர்களுக்கு என தனியாக 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வசதியாக இந்த விசா தரப்படுகிறது. மேலும் 2 ஆண்டுகள் இந்த விசா நீட்டிக்கத்தகுந்தது ஆகும்.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

    இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கிற விதத்தில், ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது.


    எனவே இந்த விசாக்களை முறைகேடாக பயன்படுத்தாத அளவுக்கு அதன் விதிமுறைகளை கடுமையாக்கும் விதத்தில் விசா சீர்திருத்தங்கள் என்ற பெயரில் டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.

    சமீபத்தில் கூட இந்த விசாக்களுக்கான சிறப்பு பரிசீலனை நடைமுறையை (பிரிமியம் பிரசாசிங்) மேலும் 5 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது.

    இப்படிப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதுபற்றி கடந்த மாதம் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசுகையில் குறிப்பிட்டார்.

    அப்போது அவர், “‘எச்-1 பி’ விசா விவகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையிடமும், நாடாளுமன்றத்திடமும் இந்தியா எடுத்துச்செல்லும். டெல்லியில் செப்டம்பர் 6-ந் தேதி நடக்கிற அமெரிக்க, இந்திய பேச்சுவார்த்தையின்போதும் இந்த விவகாரம் எழுப்பப்படும்” என்று கூறினார்.

    இந்த நிலையில், ‘எச்-1 பி’ விசா கொள்கையில் இப்போதைக்கு மாற்றம் இருக்காது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “டெல்லியில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின்போது இந்தியா ‘எச்-1 பி’ விசா பற்றி பிரச்சினை எழுப்புகிறபோது அதற்கு பதில் அளிக்க அமெரிக்காவும் தயார் ஆகி வருகிறது. டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்து உள்ள உத்தரவானது, அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ‘எச்-1 பி’ விசா வழங்குவது நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. எனவே அதை உறுதிப்படுத்துகிற விதத்தில் பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விசா பரிசீலனையில் மாற்றம் இல்லை. எனவே இதில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை கணிக்க இயலாது” என குறிப்பிட்டார்.  #H1B #India #US
    ×