search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy snowfall"

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப் பட்டது. சாலை களில் மூடுபனி சூழ்ந்தது.

    திருச்சி, துறையூர், சேலம், மோகனூர், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சூழந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப் பட்டதால் விபத்தை தடுக்கும் வகையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வேலைக்கு செல்வோரும் அவதிப் பட்டனர்.

    • மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும் உள்ளது.
    • மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன.

    இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 14 சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலிலிருந்து தர்ச்சா (தேசிய நெடுஞ்சாலை 3), தர்ச்சா முதல் ஷிங்குலா முதல் ஜாங்க்சார் வரை, கோக்சர் முதல் லோசார் (தேசிய நெடுஞ்சாலை 5) மற்றும் தண்டியிலிருந்து காது நுல்லா வரை சாலைகள் உள்ளன.

    மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும், மற்றவை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இரவுக்குள் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டது.

    போலீசார் மீட்பு பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு பிரேக் போட வேண்டாம் என்றும், சறுக்குவதைத் தவிர்க்க முதல் கியரில் நத்தை வேகத்தில் செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    • தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. காலை 9 மணி வரை மூடுபனி நீடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    கடந்த சில தினங்களாக அதிகாலையில் மட்டுமின்றி, காலை 8 மணி வரை தொடரும் மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    • ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்ட த்தின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டியது. தொட ர்ந்து மழை குறைந்தது. ஆனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    மாவடடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வரு கிறது. மேலும் பனி மூட்ட மாக காணப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிகளான தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், பண்ணாரி, தலமலை உள்பட பல்வேறு கடும் பனி மூட்டமாக இருந்து வருகிறது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடி யாமல் கடும் அவதி அடைந்து வருகிறா ர்கள். அதிகாலையி ல் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் கடும் குளிரால் வெளியே வர தயக்கம் காட்டி வரு கிறார்கள்.

    மேலும் பலர் ஸ்சுவட்டர், குல்லா அணிந்த படியே வருகிறார்கள். மேலும் வனப்பகுதி களில் கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டப்படியே செல்கிறார்கள்.

    மேலும் கோபிசெட்டி பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இன்று காலை வரை கடும் பனி பொழிவு பொழிந்து வருகிறது.

    அதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரை க்கரை, தட்டக்கரை போன்ற மலைப்பகுதியில் இன்று காலை பனி பொழிவு காரண மாக கடும் குளிர் வாட்டியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் பனியால் குளிர் வாட்டியது.

    இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் குளிரால் குல்லா அணிந்தபடியே வந்தனர்.

    சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

    காலை சூரிய உதயத்தை கடந்தும் 8 மணி வரை பனிப்பொழிவு தொடர்வதால் காலை நேரத்தில் வேலைக்கு, தொழிற்சாலைக்கும், கைத்தறிநெசவுத் தொழிலுக்கும், விசைத்தறி குடோனுக்கு, நெசவு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், அதிகாலை நடைப்பயிற்சி செய்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    அதனால் வெளியில் செல்லும் பெரும்பாலானோர் குல்லா, ஸ்வெட்டர் அணியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றும் அதிகாலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவும், குளிர் நடுக்கம் இருந்தது.

    • மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
    • தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.

    • மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது.
    • பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நாளை மறுதினம் மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரம் தொடங்கிய குளிர்காற்று காலை வரை வீசி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து பனி பொழிவாக காணப்பட்டது.

    இதன் காரணமாக கடலூர், பாதிரிகுப்பம், திருவ ந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் காலை 7.30 மணி வரை பனி குறையாமால் காணப்பட்டது. இதன் காரணமாக சாலை முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு எரிந்த படியும், ரயில்வே தண்ட வாளத்தில் பனிமூட்டம் சூழ்ந்து ள்ளதால் ரயில்களும் முகப்பு விளக்கு அணிந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் காலை நேரங்களில் கடும் பனி பொழிவும், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை, மீண்டும் மாலையில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சீதோஷ்ண மாற்றம் உருவாகி பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி கார், பஸ்கள் சென்றன

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமான வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் பனிபொழிவு காணப்பட்டது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.

    நேற்று மாலை பொழுது ஆகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து ஏலகிரி மலைக்கு அதிகமாக உள்ளது.

    • ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
    • பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர்.

    விழுப்புரம்:  

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோட்டகுப்பம், ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சற்று ஒய்ந்துள்ள நிலையில் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இன்று காலை 8.00 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சூரியனை பார்க்க முடியவில்லை. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.

    இந்த பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர். ஊட்டியில் இருப்பது போல குளிர்ச்சியான நிலை நிலவியது. பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட் டனர். இதேபோல் செஞ்சி பகுதியிலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது.

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதத்தில் கடும் பனிப் பொழிவு இருக்கும். ஆனால் கடந்த மாதம் பனிப்பொழிவு குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிக மாகவே உள்ளது. இந்த பகுதி களில் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் காலை 8 மணி வரை கடும் குளிர் நிலவுகிறது. காலை நேரத்தில் உள்ள கடும் குளிரால் ஏதோ ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருப்பதுபோல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உணருகின்றனர். இதனால் காலை நேரத்தில் வெளியே செல்லாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.     

    மேலும் பொதுமக்கள் காலையில் தாமதமாக எழுந்திருக்கும் நிலையும் காணப் படுகிறது. அதே வேளையில் பகல் நேரத்தில் வெயில் நன்கு அடிக்கிறது. இருவேறு கால நிலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தற்போது வழக்கத்துக்கு மாறாக இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் நேற்று காலை நேரத்தில் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி பயணிக்கிறார்கள். எல்லோரும் குளிரைத் தடுக்கும் கம்பளி ஆடைகளை அணிந்தபடி செல்ல வேண்டி இருக்கிறது. அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள், இந்த கடும் குளிருக்கு பயந்து காலை 8 மணிக்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். தேசிய, மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களும், கனரக வாகனங்களும் பனிப்பொழிவுக்கு பயந்து மெதுவாக பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். #tamilnews
    ×