search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel Attack"

    • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    • இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

    ஜெருசலேம்:

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் படுகாயம் அடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர்.

    தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். போர் பதற்றம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

    இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

    இந்நிலையில், லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தலைவரான நபில் கவுக் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முக்கிய தலைவர்களை இழந்து வருவது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள்.
    • இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர்.

    பெய்ரூட்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.

    சமீபத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியதில் 39 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா, அந்நாடு மீது ஏவுகணைகளை வீசியது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள். இதனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியது.

    இந்த தாக்குதலை ஒடுக்கும் விதமாக நேற்று லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உள்ள பகுதிகளில் தீவிர வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.

    தலைநகர் பெய்ரூட், தெற்கு லெபனான் உள் ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 274 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

    ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் செயல்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறும்போது, லெபனான் மக்களுக்கு நான் செய்தி ஒன்றை சொல்கிறேன். இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர். நீண்ட காலமாக, ஹிஸ்புல்லா உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.

    உங்கள் வீட்டு அறைகளில் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் பதுக்கி வைத்துள்ளது. அந்த ஏவுகணைகள் எங்களது நகரங்களை குறிவைக்கின்றன. எங்களது மக்களை ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் அழிக்க வேண்டும்.

    லெபனானியர்கள் ஹிஸ்புல்லாவின் நோக்கத்திற்காக தங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. தயவு செய்து, இப்போது ஆபத்து வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம். நாங்கள் போர்களைத் தேடவில்லை. அச்சுறுத்தல்களை களையப் பார்க்கிறோம் என்றார்.

    இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 200 ஏவுகணைகளை வீசினர். இதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

    • ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் கூறியுள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபானானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

    இதையடுத்து லெபனானில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூடப்படுகின்றன.

    இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு மேலும் படைகளை அனுப்ப உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி பாட் ரைடர் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தாலும், மிகுந்த எச்சரிக்கை காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அதுதொடர்பான விவரங்களை வெளியிடவில்லை என தெரிவித்தார்.

    • இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை.
    • அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.

    லெபனான் மீது பயங்கரமான வகையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை பாதுகாக்கும் வகையில் கேடயமாக மாறாதீர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு லெபனான் மக்களை வீடியோ மூலம் மெசேஜ் தெரிவித்துள்ளார்.

    லெபனான் மக்களுக்கான நேதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை. அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. உங்கள் வீடுகளில் ராக்கெட்டுகளை பதுக்கி வைக்கிறது. அவைகள் எங்கள் நாட்டின் மக்களை குறிவைக்கிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு எதிராக எங்கள் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் வெளியே எடுக்க வேண்டும்" என்றார்.

    இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருந்து (லெபனான் எல்லை) வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக அமர்த்துவது எங்களுடைய நோக்கம் என போர் நோக்கத்தை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. மேலும், போரின் மையப்பகுதிய வடக்கு நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    சில தினங்களுக்கு முன் போர் கட்டம் மாற்றப்படுகிறது என லெபனான் எச்சரித்திருந்தது. லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என இஸ்ரேல் பதில் அளித்திருந்தது.

    இநத் நிலையில்தான் லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
    • தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தெற்கு லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது.

    தெற்கு லெபானானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    அதன்படி, 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

    பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், 2 நாட்களுக்கு லெபனானில் பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் பள்ளிகள் மூடப்படுகிறது.

    • மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
    • அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    காசா:

    இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. கரம் ஷாலோம் எல்லை வாசலில் 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒன்று ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மீதமுள்ள 3 ராக்கெட்டுகள் வெறிச்சோடிய பகுதிகளில் விழுந்தன. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


    காசா நகரில் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3 புதைகுழிகளில் இருந்து 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

    இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள ஆஸ்ப த்திரியில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்பட பலரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு, இறந்த உறவினர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக காத்து நின்றனர்.

    • காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
    • போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர். 

    இதேபோல் கடைசி நகராக, ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.

    இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தகவல்.

    பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ஜெனின் நகர அகதிகள் முகாமில் இருந்து வெளியேறியதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சுமார் 18,000 பாலஸ்தீனியர்கள் வசிக்கும் அந்த முகாமில் இருந்து இதுவரை 3000 பேர் வெளியேறியிருக்கின்றனர் என்றும் அவர்களை ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார், ஜெனின் துணை ஆளுநர் கமல் அபு அல்-ரூப்.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களிலேயே இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமான இராணுவ நடவடிக்கை என்று கூறும் விதமாக ஒரு தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியிருக்கிறது.

    நேற்று தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கணக்கான துருப்புக்களையும் பாலஸ்தீன போராளிகளை தாக்க அனுப்பியிருக்கிறது.

    இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்றும், காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் செய்தித்தொடர்பாளர் ஜூலியட் டூமா, முகாமில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.

    பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனமான யு.என்.ஆர்.டபிள்யு.ஏ. (UNRWA), பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    வடக்கு மேற்குக் கரை நகரமான ஜெனின் நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள முகாம், 1950களில் அமைக்கப்பட்டது. ஒரே இனம் சார்ந்த பெருங்குழுவினர் மோசமான சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்தும் "கெட்டோ" (ghetto) போன்ற இந்த பகுதி, நீண்ட காலமாக பாலஸ்தீனியர்களுக்கு ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான பகுதியாக அந்நாடு கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் அரசாங்கமோ இப்பகுதியை பயங்கரவாதம் தோன்றி வளரும் இடமாக பார்க்கிறது.

    ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஃபத்தாஹ் உள்ளிட்ட போராளிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய போராளிகள் அந்த இடத்தை தளமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது.
    • இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

    ஜெனின்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

    ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான வீரர்களை கோட்டைக்குள் அனுப்பியது.

    இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தங்கள் நாட்டின் வான் எல்லையில் நுழைந்த சிரியா நாட்டு போர் விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. #Syriawarplane

    டெல்அவிவ்:

    அரபு நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சிரியாவும இடம்பெற்றுள்ளது.

    இஸ்ரேலின் எல்லையில் சிரியா அமைந்துள்ளது. இதனால் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடப்பது உண்டு.

    சிரியாவை ஒட்டி கோலன் ஹைட்சில் என்ற இடம் உள்ளது. இந்த இடம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் கிளர்ச்சி படையினர் கட்டுப்பாட்டில் யார்மேக் என்ற இடம் இருக்கிறது. இது, இஸ்ரேலின் கோலன் ஹைட்சில் அருகே அமைந்துள்ளது.

    யார் மேக் பகுதியில் கிளர்ச்சி படையினரை தாக்குவதற்காக சிரியாவின் சுகோய் ரக போர் விமானம் பறந்து சென்றது. அது, இஸ்ரேலின் கோலன் ஹைட் சில் பகுதியில் நுழைந்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் இஸ்ரேல ஏவுகணை மூலம் அந்த விமானத்தை சுட்டது. இதில் நடுவானில் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது. ஆனால், இந்த தகவலை இருநாடுகளுமே உறுதிப்படுத்தவில்லை.

    ஆனால், அந்த பகுதி மக்கள் நேரில் காட்சியை பார்த்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். சிரியாவில் இருந்து வரும் பத்திரிகைகளும் இஸ்ரேல் செய்தி நிறுவனமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

    விமானத்தில் இருந்த விமானியின் கதி என்ன? என்பது தெரியவில்லை. #Syriawarplane

    ×