search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamabandi"

    • தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் புகார்
    • நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மணமை, வடகடம்பாடி, எச்சூர், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் அளித்தனர்.

    அப்போது மணமை ஊராட்சியை சேர்ந்த வீராசாமி என்பவர் 500க்கும் மேற்பட்ட மனுக்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு அளித்தார்.

    அந்த மனுவில், மணமை ஊராட்சியில் அரசு நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்றவும், சட்டவிரோதமாக நடத்தப்படும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் நிலைகள் பாதிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    30 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுவரை தான் கொடுத்த 500க்கும் மேற்பட்ட மனுக்களின் நகல்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு கொடுத்ததாக வீராசாமி கூறினார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு காணப்பட்டது.

    • வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜமாபந்தி அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பட்டா, சிட்டா, ,பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டது. நெடுங்குன்றம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு, தலா ரூ.12ஆயிரம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 38பேருக்கு தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.10.72 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

    • பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
    • 2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் கலெக்டர் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாள் கபிஸ்தலம் சரகத்திற்கு ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    இந்த ஜமாபந்தியில் 25 கிராமங்களுக்கு நடந்தது. ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் 2 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் வழங்கினார்.

    இதில் பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணு பிரியா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருககுமார், திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தஞ்சை கலெக்டர் அலுவலக மேலாளர் ரத்தினவேல் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை தாலுகாவிற்கு உள்பட்ட இரண்டு குருவட்டங்களுக்கான ஜமாபந்தி திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கி முதியோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் துரைசாமி செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், இட்டமொழி இசக்கியப்பன், சத்தியவாணி, அயூப் கான் ஜேம்ஸ், செல்வக்குமார், சந்தனகுமார், அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.
    • உடனடியாக தீர்வு காண கலெக்டர் உத்தரவு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கலெக்கடர் பா.முருகேஷ் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.

    மேலும், வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாற்றம் சம்மந்தமாக 42 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 108 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா தொடர்பாக 51 மனுக்களும், முதியோர் உதவித்தொகை வழங்க கோரி 53 மனுக்களும், குடும்ப அட்டை வேண்டி 3 மனுவும், 61 இதர மனுக்களும், இதர துறையை சார்ந்த மனுக்கள் 14 என மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்படி பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) எம்.சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, வேளாண் உதவி இயக்குநர் கோ.அன்பழகன், திருவண்ணாமலை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் உட்பட பலர் கொண்டனர்.

    ×