என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidnapping"

    • யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
    • ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரப் பிரதேசம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கொய்ராவ்னா பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி. இவரது 22 வயது மகளுக்கு யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தனது மகளையும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளையும் காணவில்லை என கீதா தேவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    யோகேஷின் இளைய சகோதரன் ராஜா தனது மகளை கடத்திச் சென்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.

    பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.

    ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.

    இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.

    ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது. 

    • ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.
    • மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது

    கடலூர்:

    விழுப்புரம் ஜி.ஆர். பி. நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண்மேல் பட்டாம்பாக்கம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்நேற்று தனது அண்ணனுடன் பஸ்சில் ஏறினார். அப்போது விழுப்புரம் செல்லும் போது அண்ணன் முன்பக்கமும், மாணவி பின் பக்கமும் உட்கார்ந்து சென்றனர். ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.

    இவரை ஓடும் பஸ்சில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

    • மணிகண்டத்தில் சிறுமி கடத்தப்பட்டார என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார்

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள மணிகண்டம் காந்திநகர் முல்லை தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவர் வீட்டிலேயே ஊதுபத்தி தயாரித்து சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளன. இவருடைய மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்நிலையில் இவருடைய கடைசி 14 வயது மகள் வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.

    அக்கம் பக்கம், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் மணிகண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமி தானாக வீட்டை விட்டு சென்றாரா அல்லது யாரேனும் கடத்திச் சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 75 கிலோ புகையிலை ெபாருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து . திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் 75 கிலோ புகையிலை ெபாருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது. பின்னர் வாகனங்களில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த முகமது அப்துல் ஹாதர் (வயது63), அவரது மகன் சையது இப்ராஹிம் (37), அகமுடையார் தெருவை சேர்ந்த சரவணன் (39) ஆகியோர் என்பதும், புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை சந்திரா தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பாளை ராமர் கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றார்.
    • விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மைதானம் அருகே சென்ற போது ஒரு காரில் வந்த 2 வாலிபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மீனாவை கடத்திச் சென்றனர்.

    நெல்லை:

    பாளை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வர் குமாரவேல். இவரது மனைவி சந்திரா (வயது 63). இவர்களுக்கு மீனா (24) உட்பட 3 மகள்கள் உள்ளனர்.

    காரில் கடத்தல்

    நேற்று மாலை சந்திரா தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பாளை ராமர் கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் வீட்டுக்கு திரும்பினர்.

    அங்குள்ள விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மைதானம் அருகே சென்ற போது ஒரு காரில் வந்த 2 வாலிபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மீனாவை கடத்திச் சென்றனர்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக சந்திரா பாளை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ் பெக்டர் வாசிவம் வழக் குப்பதிவு செய்து மீனாவை கடத்தி சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரூ‌. 2 லட்சம் தந்தால் தான் சுரேஷை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.
    • வேலூர் வடக்கு போலீஸ் கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பன மடங்கியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28) கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக பைக்கில் வேலூர் வந்தார்.

    கொணவட்டம் அருகே வந்தபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் மடக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றனர்.

    அங்கு வைத்து அவரது செல்போனை பறித்தனர்.

    தொடர்ந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க கும்பல் திட்டமிட்டனர். அதன்படி சுரேஷின் செல்போனில் இருந்து அவருடைய வீட்டிற்கு பேசினர்.

    ரூ. 2 லட்சம் தந்தால் தான் அவரை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.

    சுரேஷின் குடும்பத்தினர் இது குறித்து அதை ஊரைச் சேர்ந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் கூட்டாக கும்பல் கூறிய இடத்திற்கு வந்தனர். அவர்களை கண்டதும் சுரேஷை விட்டுவிட்டு கும்பல் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    மதுரை வண்டியூர் சி.எஸ். ஆர். தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் ரிங் ரோட்டில் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த யாகப்பா நகர் வெற்றிவேல் மகன் அஜித்குமார் (26) அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.100-ஐ வழிப்பறி செய்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவர் நரிமேடு அவ்வையார்தெரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.

    இதுகுறித்து ஞான சேகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பி.பி. குளம் நேதாஜிரோடு மாணிக்கம் மகன் முருகன் என்ற டால்பின் (29), திருமங்கலம் ஆனந்த் நகர் குமார் மகன் கவியரசன் என்ற பொம்மை கையன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

    • வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்கும், காரும் மாயமாகி இருந்தது.
    • இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் இருப்பது தெரிந்தது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் அ.தி.மு.க. அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.

    இவரது மனைவி ரோஜா (44). கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் ஜேக்கப் (22).

    நேற்று மதியம் வீட்டில் இருந்த ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் திடீரென மாயமானார்கள். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்கும், காரும் மாயமாகி இருந்தது. மேலும் ரோஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ரோஜாவும், ஜேக்கப்பும் கடத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ரமேஷ் குமார் இது குறித்து பல்லவாடா போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இரவு 10.30 மணியளவில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் இருப்பது தெரிந்தது.

    விரைந்து சென்ற போலீசார் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அவர்களது காரும் மீட்கப்பட்டது.

    இது குறித்து ரோஜாவிடம் போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரோஜா போலீசாரிடம் கூறும்போது, 10 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் எங்களை காரில் கடத்தி சென்றனர். கண்ணையும், கையையும் கட்டி இருந்தனர்.

    கடத்தல் கும்பல் கணவர் ராஜேஷ்குமார் குறித்து கேட்டு தேடினர். பின்னர் ராள்ளபாடி அருகே எங்களை விடுவித்து எனது தாலி செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர் என்று கூறி உள்ளார்.

    கடத்தல் கும்பல் ஜேக்கப்பின் கால் அருகே துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை தேடி வந்து இருப்பதும் அவர் இல்லாததால் ரோஜாவையும், அவரது மகன் ஜோக்கப்பையும் கடத்தி சென்று இருப்பதும் தெரிய வந்து உள்ளது. ராஜேஷ்குமார் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தொழில் போட்டியில் ஏற்பட்ட மோதலில் இந்த கடத்தல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ரோஜாவும், ஜேக்கப்பும் கடத்தல் கும்பல் குறித்து மாறுபட்ட தகவல் தெரிவித்து வருவதாகவும் போலீசார் கூறினர். இதனால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையிட்டனர்.
    • சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை போலீசார் வழி மறித்தனர்.

    தஞ்சாவூா்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு பொலிரோ வேனை போலீசார் வழி மறித்தனர்.

    இதனைப்பார்த்த அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அதில் 2400 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து வாகனத்தில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நிரவி குமரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (வயது 22), காரைக்கால் இலத்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால் (40), மேல பொன்னேரி மேட்டுத் தெருவை சேர்ந்த ராஜப்பா (32) ஆகிய 3 பேர் என்பதும், காரைக்கால் நிரவி பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணபதி, ஜெயபால், ராஜப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2400 மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரைக்கால் பகுதி போலீசாரிடம் தகவல் தெரிவித்து அங்கு உள்ள போலி மதுபான ஆலையம் மூட வைத்தனர்.

    தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கீழபட்டியை சேர்ந்தவர் தர்மர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிலா பாரதி (22). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற நிலா பாரதியை குன்னூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (33) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவர் நிலாபாரதியை துன்புறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த தர்மர் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துபாண்டியை பிடித்து கைது செய்தனர். நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    • பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

    கவுண்டம்பாளையம்,

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கோவை கவுண்டம்பாளையத்தல் பெற்றோருடன் தங்கி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரில் சிறுமி பஸ் கண்டக்டர் ஒருவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

    மேலும் விசாரணையில் சபரிநாதன் கடந்த ஒருமாதமாக காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதும், தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்ததும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சபரிநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    ×