என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kishan Reddy"
- புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
- புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
சவால்கள் நிறைந்த காலத்தில், குறிப்பாக எதிர் கட்சிகள் பலமான கூட்டணியை தாண்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது. புதுவை தொகுதியில் பாஜக தீவிரமாக போட்டியிட்டு 30 சட்டமன்ற தொகுதியிலும் கடுமையாக உழைத்து தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
தேர்தலில் சுமார் 3 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளோம். இது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் வளர்ச்சி. இன்னும் 2 ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. 2026 தேர்தலுக்கு முன்பாக சமூகவலைதளங்களில் காங்கிரசின் குடும்ப அரசியல், துஷ்பிரயோகங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வேலைகளை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.
புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும். தேசிய தலைவர் நட்டா, மோடி ஆகியோர் வழிகாட்டுதல்களோடு இந்த பிரச்சனைகளை களைவோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெறும். புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவும். புதுவை மீது மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
- ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.
தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகராவின் மகன் கே.டி.ராமராவ். இவர் பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருகிறார். பி.ஆர்.எஸ் கட்சியின் பொது கூட்டத்தில் கே.டி.ராமாராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-
500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி கொடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த 6 வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி நசுக்கப்படுவது உறுதி. ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக உள்ள கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
மக்களவைத் தேர்தலில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் மோடியின் முகத்தைக் காட்டி ஓட்டு கேட்பது வெட்கக்கேடானது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வந்த ராமாராவிற்கு ஐதராபாத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரோஹித் தலைமையில் காங்கிரசார் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரசாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது.
- நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
தெலுங்கானாவில் பா.ஜ.க சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது.
நாராயணபேட்டை தன்வாடா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அதில் தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய மந்திரியமான கிஷன் ரெட்டி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் மதிப்புமிக்க வாக்கை குப்பையில் வீசுவதற்கு சமம்.
பா.ஜ.க, பி.ஆர்.எஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது. தெலுங்கானா மாநிலத்தில் வரும் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. 17 இடங்களில் வெற்றி பெறும். சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
கடந்த தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சிக்கும் சந்திரசேகர ராவ் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆந்திர முதல் மந்திரியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
- அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
ஐதராபாத்:
ஒய்.எஸ்.ஆர்.டி.பி. தலைவரும், ஆந்திர முதல் மந்திரியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஷர்மிளா ஜியோ அல்லது வேறு யாரோ அதைச் செய்ய முடியாது.
யாரேனும் பிரதமராக வேண்டும் என்றால் அதை மக்கள் செய்ய வேண்டும். ராகுல் காந்தியின் பார்முலா தோல்வி. ராகுல் காந்தியின் சித்தாந்தம் தோல்வி. அவரது பார்முலா அடிப்படையில் தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்தார்.
- ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரசில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
- காங்கிரசும், பி.ஆர்.எஸ்சும் ஒன்றுதான். இரண்டும் ஊழல் கட்சிகள் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
ஐதராபாத்:
ஆந்திர மாநில முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், சர்மிளா காங்கிரசில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரான கிஷன் ரெட்டி கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் ஒன்றுதான். இரு கட்சிக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது. இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது காளேஸ்வரம் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியிருந்தது.
இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அதே கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அப்படி கடிதம் எழுதினால், 48 மணி நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு எங்கள் அரசு உத்தரவிடும் என உத்தரவாதம் அளிக்கிறேன் என தெரிவித்தார்.
- ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக இப்போது இருந்தே தேசிய கட்சிகள் பரபரப்பாய் இயங்கி வருகின்றன.
குறிப்பாக ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதே வேலையில் பா.ஜ.க.வும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடித்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது.
இந்த ஆண்டு சில மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களையும், அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைமை பல அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் புதிய மாநில தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டது.
அந்த வகையில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரியான கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவராக சுனில் ஜஹரும், ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. தலைவராக பாபுலால் மரன்டியும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். முன்னாள் மத்திய மந்திரியான புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தேர்தல் நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் மந்திரி எடேலா ராஜேந்தரை கட்சி தலைமை நியமித்துள்ளது.
மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதால், அவர் வகித்த துறைக்கு வேறு மந்திரி நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், மத்திய மந்திரி சபையிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அர்ஜுன்ராம் மேக்வால், பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜு, எஸ்.பி.எஸ்.பாகல் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், இந்த சந்திப்புகளுக்கும், மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்த பேச்சுக்கும் தொடர்பில்லை. கட்சி நிகழ்வுகள் தொடர்பாக வழக்கமாக நடக்கும் கலந்துரையாடல்கள்தான் இவை என்று பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
- சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளோம்.
- அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கூறியுள்ளதாவது:
ஆண்டின் 365 நாட்களும் சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறோம். சுற்றுலாத்துறை பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சுற்றுலாத் தொழில் தொடங்கினால் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மீகத் தலமாக புதுச்சேரி உள்ளது. ஆன்மீகச் சுற்றுலா சிறப்பாக உள்ள இங்கு, சுகாதார சுற்றுலாவையும் கல்வி சார்ந்த முதலீடுகளையும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சுற்றுலா பயங்கரவாதப் போக்கை தடுக்கும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். புதுவையின் புதுமைக்கு சுற்றுலா அடித்தளமாக இருக்கிறது, மத்திய அரசின் முயற்சியால் புதுச்சேரி விரைவில் சிறந்த சுற்றுலா நகரமாக விளங்கும் என்று குறிப்பிட்டார். புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்